ஹைதராபாத் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

திருமணத்துக்கு வற்புறுத்திய லிவிங் டூ கெதர் காதலி.. கொன்று சுட்கேஸில் அடைத்து வீசிய காதலன்

Google Oneindia Tamil News

ஹைதராபாத்: காணாமல் போன ஹைதராபாத் ஐடி பெண்ணை, அவரது காதலர் கொன்று சூட்கேஸில் அடைத்து வீசி சென்ற சம்பவம் தெலுங்கானாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஹைதராபாத்தின் மேட்சல் நகரில் ஒரு பள்ளிக்கூடம் அருகே அநாதையாக கிடந்த சூட்கேஸை பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அந்த சூட்கேஸில் 25 வயது இளம் பெண் ஒருவரின் சடலம் இருந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

Hyderabad Techie Killed By Boyfriend, Stuffed In Suitcase

இது தொடர்பாக போலீசாரால் நடத்திய விசாரணையில். கொல்லப்பட்ட பெண் யார் என்பதை கண்டுபிடித்தனர். கடந்த மார்ச் 7ம் தேதி போலீசில், கொல்லப்பட்ட பெண்ணின் பெற்றோர் காணாமல் போனதாக புகார் அளித்திருப்பதும் தெரியவந்தது. பெற்றோர் அளித்த அந்த புகாரில், எங்கள் மகளை அவரது காதலர் சுனில் உடன் மஸ்கட் செல்வதாக கூறிதால் மார்ச் 4ம்தேதி ஹைதரபாத் விமானநிலையத்தில் வழி அனுப்பி வைத்தோம். ஆனால் 3 நாட்களாக எந்த தொடர்பும் இல்லை என மகளை கண்டுபிடிக்க வேண்டும் என கடந்த போலீசில் புகார் அளித்துள்ளார்கள்.

சொத்து கேட்டு தகராறு.. காதல் மனைவியின் அத்தையை வெட்டிக்கொன்ற இளைஞர்சொத்து கேட்டு தகராறு.. காதல் மனைவியின் அத்தையை வெட்டிக்கொன்ற இளைஞர்

சுனில் மற்றும் அந்த பெண் இருவரும் ஹைதராபாத்தில் ஒரே நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார்கள். சுனில் பீகாரைச் சேர்ந்தவர் கடந்த ஆண்டுதான் ஹைதராபாத் வந்துள்ளார். இவரும் காதலித்து வந்துள்ளார்கள். ஒரே அறையில் தங்கி லிவிங் டு கெதர் உறவில் இருந்துள்ளார்கள்.

இந்நிலையில், திருமணம் செய்ய காதலி வற்புறுத்தி வந்துள்ளார். இதற்கு மறுத்துவந்த சுனில் தனது காதலியை மஸ்கட்டுக்கு ஐடி வேலைக்கு அழைத்து செல்வதாக கூறி கடத்தி சென்றுள்ளார். பின்னர் அவரை கொலை செய்து, சூட்கேசில் உடலை அடைத்து வீசிவிட்டு வந்துள்ளார். இந்த தகவல் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து சுனிலை கைது செய்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

English summary
Hyderabad Techie Killed By Boyfriend, Stuffed In Suitcase in month, police arrested lover
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X