கேஜிஎப்-2! ரியல் ராக்கி பாயாக மாறிய சிறுவன்! ஒரு பாக்கெட் சிகரெட்டை ஒரே மூச்சில் பிடித்ததால விபரீதம்
ஹைதராபாத்: கேஜிஎஃப் 2 படத்தில் ராக்கி பாய் கேரக்டரால் ஈர்க்கப்பட்ட சிறுவன் அவரை போலவே ஒரு பாக்கெட் சிகரெட்டை ஒரே நேரத்தில் பிடித்ததால் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் அண்மையில் வெளியானது கேஜிஎஃப்2. பெரும் எதிர்பார்ப்பில் வெளியான இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இது ரூ 1000 கோடி வசூல் சாதனை படைத்து வருகிறது. இதைத் தொடர்ந்து கேஜிஎஃப் படத்தின் மூன்றாம் பாகத்தை எடுக்க திட்டமிட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பை இந்த ஆண்டு இறுதியில் படக்குழு தொடங்கவுள்ளது.

கேஜிஎஃப்2
இந்த நிலையில் கேஜிஎஃப் 2 படத்தை ஹைதராபாத்தில் உள்ள ஒரு சிறுவன் பார்த்துள்ளார். படத்தில் இடம் பெற்றுள்ள யாஷின் ராக்கி பாய் கேரக்டரால் ஈர்க்கப்பட்ட அவர் ஒரு பாக்கெட் சிகரெட்டை ஒரே மூச்சில் பிடித்துள்ளார். இதனால் சிறுவனுக்கு கடுமையான தொண்டை வலி ஏற்பட்டது.

சிகரெட்
மேலும் இருமலும் அதிகமாக இருந்ததால் பெற்றோர் அந்த சிறுவனிடம் விசாரித்த போது சிகரெட் பிடித்ததை கூறியுள்ளார். இதையடுத்து பதறி அடித்துக் கொண்டு ஹைதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் சிறுவன் தற்போது நலமுடன் இருக்கிறார்.

அபாயகரமான செயல்
மீண்டும் இது போல் சிகரெட் பிடிக்காமல் இருக்கவும் மற்றவர்களிடம் ஈர்க்கப்பட்டு அபாயகரமான செயல்களை செய்யாமல் இருக்கவும் அவருக்கு கவுன்சலிங் கொடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில் பதின்மர் பருவத்தில் இருக்கும் சிறுவர்கள் ராக்கி பாய் போன்ற கேரக்டர்களை அதிகம் விரும்புகிறார்கள்.

திரைப்படங்கள்
திரைப்படங்கள் நம் சமூகத்தில் அதிக ஆதிக்கம் செலுத்தும் அங்கமாகிவிட்டது. எனவே திரைப்படங்களை இயக்குபவர்கள், அதில் நடிப்பவர்களுக்கு சமூக பொறுப்பு தேவை. சிகரெட் பிடிப்பது, புகையிலை உண்பது, மது குடிப்பது போன்ற காட்சிகளை படமாக்கக் கூடாது. பெற்றோரும் தங்கள் குழந்தைகள் என்ன செய்கிறார்கள் என்பதை கண்காணிக்க வேண்டும். தவறு செய்யும் குழந்தைகளை அடிப்பது என்பது தீர்வாகாது என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
-
காலையில் கஞ்சா பால்.. இட்லிக்கு கஞ்சா சட்னி.. பெட் ரூம் முழுக்க 70 கஞ்சா செடிகள்.. மிரண்ட போலீஸ் -
ரொம்ப அசால்ட்டா இருந்துருக்காங்க! விசாரணை அதிகாரியின் விசித்திர நடைமுறை! போலீஸை விளாசிய நீதிமன்றம் -
முதல்வர் விஜய் தொகுதியில் சூட்கேஸுக்குள் தலையில்லாத ஆண் சடலம்.. பெரம்பூர் ரயில் நிலையத்தில் ஷாக்! -
காதல் திருமணம் செய்துக்கொண்ட மகள்! பெட்ரோல் குண்டு வீசிய பாசக்கார தந்தை! நெல்லையில் ஷாக்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்?












Click it and Unblock the Notifications