சாலையில் பறந்த தீப்பொறி.. பைக்கை 2 கிமீ இழுத்து சென்ற லாரி.. படியில் தொங்குவது யாரு பாருங்க
ஹைதராபாத்: ஹைதராபாத்தில் விபத்தை ஏற்படுத்திய லாரி நிற்காமல் பைக்கை 2 கிலோமீட்டர் தூரம் இழுத்து சென்றதும், பைக்கில் சென்றவர் உயிருக்கு பயந்து லாரியின் முன்பக்கத்தில் நின்றபடி சென்ற நெஞ்சை பதறவைக்கும் வீடியோ வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
சாலைகளில் தினமும் விபத்துகள் நடக்கின்றன. இதில் பல விபத்துகள் எதிர்பாராத விதமாக ஏற்படுகின்றன. சில விபத்துகள் கவனக்குறைவால் ஏற்படுகிறது. இப்படியான விபத்துகளில் பொதுமக்கள் பலியாவதும், காயங்கள் அடைவதும் தொடர்ந்து நடந்து வருகிறது.

விபத்துகளை குறைக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும் கூட விபத்துகளும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் மட்டும் குறைந்தபாடில்லை.
குறிப்பாக சில இடங்களில் விபத்தை ஏற்படுத்தும் டிரைவர்கள் தங்களின் வாகனத்தை நிறுத்தாமல் செல்லும் சம்பவங்கள் தொடர்ந்து வருகின்றன. இந்நிலையில் தான் தெலுங்கானா மாநிலத்தின் தலைநகராக உள்ள ஹைதராபாத்தில் நெஞ்சை பதறவைக்கும் வகையில் விபத்து ஒன்று நடந்துள்ளது. இதுதொடர்பான வீடியோ தற்போது வலைதளங்களில் பரவி வருகிறது.
அந்த வீடியோவில், சாலையில் லாரி ஒன்று வேகமாக செல்கிறது. லாரியின் முன்பக்கத்தில் கிளீனர் அமரும் இருக்கையின் கீழ் உள்ள படியில் ஒருவர் தொங்கியபடி நிற்கிறார். அதோடு லாரியின் முன்பக்க டயரில் பைக் ஒன்று சிக்கி உள்ளது. இருப்பினும் கூட டிரைவர் லாரியை நிறுத்தாமல் செல்கிறார். சுமார் 2 கிலோமீட்டர் தொலைவுக்கு பைக்கை சாலையில் இழுத்து செல்லப்பட்டுள்ளது.
லாரியின் சக்கரத்தில் சிக்கி உள்ள பைக் சாலையில் உரசியபடி செல்வதால் தீப்பொறி பறக்கிறது. மேலும் லாரியில் தொங்கிய நபர் நிறுத்தும்படி கூறியும் டிரைவர் கண்டுக்கொள்ளாமல் ஓட்டி செல்கிறார். இந்த சம்பவம் ஹைதராபாத்தில் நடந்துள்ளது. அதாவது பைக் மீ லாரி ஒன்று மோதி உள்ளது. இதில் லாரியின் சக்கரத்தில் பைக் சிக்க அதிர்ஷ்டவசமாக அதில் பயணித்தவர் உயிர் பிழைக்கிறார்.
ஆனால் பயந்துபோன டிரைவர் லாரியை நிறுத்தாமல் டயருக்குள் அடியில் சிக்கி பைக்குடன் தொடர்ந்து ஓட்டி செல்கிறார். இதையடுத்து பைக்கில் பயணித்தவர் லாரியை நிறுத்தும்படி லாரியின் முன்பக்கத்தில் கிளீனர் இருக்கைக்கு செல்லும் படிக்கட்டில் தொங்கியபடி பயணித்தது தெரியவந்துள்ளது. இதுபற்றிய புகாரின் பேரில் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.












Click it and Unblock the Notifications