விஜய்யின் வாரிசு படத் தயாரிப்பாளர் தில் ராஜு வீட்டில் வருமான வரித் துறை ரெய்டு
ஹைதராபாத்: பிரபல திரைப்பட தயாரிப்பாளர் தில் ராஜு வீடு, அலுவலகங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள். புஷ்பா 2 படத்தின் தயாரிப்பாளர் நவீன் எர்னேனி வீட்டிலும் ரெய்டு நடக்கிறது.
இவர் விஜய் நடித்த வாரிடு, ராம் சரண் நடித்த கேம் சேஞ்சர், வெங்கடேஷ் நடித்த சங்கராந்திக்கு ஒஸ்துண்ணம் உள்ளிட்ட படங்களை தயாரித்தவர். 50-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் அடங்கிய குழுவினர் இன்று காலை முதலே ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தி வருகிறார்கள்.

இதில் கேம் சேஞ்சர், சங்கராந்திக்கு ஒஸ்தானு ஆகிய படங்கள் பொங்கலுக்கு ரிலீஸாகின. இந்த நிலையில் இன்று காலை தில் ராஜுவின் வீட்டிற்கு வந்த வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொள்கிறார்கள்.
53 க்கும் மேற்பட்ட அதிகாரிகள் குழு வருகை தந்துள்ளன. அவர்கள் தில் ராஜு, அவருடைய சகோதர் சிரிஷ், மகள் ஹன்சிகா ரெட்டி உள்ளிட்ட 8 பேருக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.
தில்ராஜுவின் உண்மையான பெயர் வெலம்குச்சா வெங்கடரமணா ரெட்டி. இவர் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் எனும் முன்னணி தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவர் அண்மையில் தெலுங்கானா திரைப்பட மேம்பாட்டுக் கழகத்தின் தலைவராக அந்த மாநில அரசால் நியமிக்கப்பட்டார்.
வாரிசு திரைப்படத்தை தயாரித்த தில் ராஜு கடந்த 2022 ஆம் ஆண்டு, தமிழகத்தில் அஜித்தை விட விஜய்தான் பெரிய நடிகர் என கூறி சர்ச்சையில் சிக்கினார். வாரிசு, துணிவு ஆகிய இருபடங்களும் அந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியானது.
இதனால் தமிழகத்தில் இரு படங்களுக்கும் தலா 400 திரையரங்குகள் ஒதுக்கப்பட்டன. தமிழகத்தில் அஜித்தை விட விஜய்யே பெரிய நடிகர் என்பதால் கூடுதலாக 50 திரையரங்குகள் கேட்ட போது கிடைக்கவில்லை என தில் ராஜு பேசியிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
அது போல் புஷ்பா 2 திரைப்பட தயாரிப்பாளர் நவீன் எர்னேனியின் வீட்டிலும் வருமான வரித் துறை ரெய்டு நடைபெற்று வருகிறது. நவீன், அஜித் படத்தின் குட் பேட் அக்லி படத்தையும் தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications