உடனே மனதை மாத்துங்க.. பாக். விட இங்கு தான் அதிக முஸ்லிம்கள் இருக்கோம்.. துருக்கிக்கு ஓவைசி வார்னிங்
ஹைதராபாத்: ‛‛பாகிஸ்தானை விட இந்தியாவில் தான் இஸ்லாமியர்களின் மக்கள்தொகை அதிகம். இதனால் கண்மூடித்தனமாக பாகிஸ்தானை ஆதரிக்க கூடாது. துருக்கி தனது நிலைப்பாட்டை மாற்றி கொள்ள வேண்டும்'' என்று ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசி வார்னிங் செய்துள்ளார். அதுமட்டுமின்றி துருக்கிக்கும், இந்தியாவுக்கும் இடையேயான உறவு பற்றி அவர் பாடம் எடுத்துள்ளார்.
நம் நாட்டுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் துருக்கி நேரடியாக பாகிஸ்தானுக்கு ஆதரவு அளித்தது. பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக நம் நாடு பாகிஸ்தானின் 9 பயங்கரவாதிகளின் முகாம் மற்றும் விமானப்படை தளங்களை குறிவைத்து ஏவுகணை மூலம் தாக்கி அழித்தது.

இதனை துருக்கி கண்டித்தது. அதுமட்டுமன்றி துருக்கி நாட்டின் ட்ரோன்களை இந்தியாவை நோக்கி அனுப்பி பதிலடி கொடுக்க அந்த நாடு தனது சொந்த ஆபரேட்டர்களை பாகிஸ்தானுக்கு அனுப்பி வைத்தது. இப்படி நம் நாட்டுக்கு எதிரான நிலைப்பாடு கொண்ட துருக்கியை புறக்கணிக்க நம் நாட்டு மக்கள் முடிவு செய்துள்ளனர்.
இதனால் "Boycott Turkey" என்பது இப்போது டிரெண்ட்டிங்கில் உள்ளது. துருக்கி உடனான வர்த்தக உறவை பல்வேறு சங்கங்கள் துண்டித்து வருகின்றன. துருக்கிக்கு பொருளாதார பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் நம் பொதுமக்கள் தாமாகவே முன்வந்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தான் ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவரும், ஹைதராபாத் எம்பியுமான அசாதுதீன் ஓவைசி, பாகிஸ்தானுக்கு ஆதரவாக திரும்பி உள்ள துருக்கிக்கு வார்னிங் செய்துள்ளார். இதுதொடர்பாக ஓவைசி கூறியதாவது:
பாகிஸ்தானுக்கு ஆதரவளிக்கும் நிலைப்பாட்டை துருக்கி மறுபரிசீலனை செய்ய வேண்டும். இந்த வேளையில் துருக்கிக்கு ஒன்றை நியாபகப்படுத்த விரும்புகிறேன். துருக்கியின் வங்கியின் Isbank என்பதன் தொடக்கத்தில் இந்தியாவில் குறிப்பாக ஹைதராபாத் மற்றும் ராம்பூராவில் இருந்து முதலீடு செய்யப்பட்டன. இந்தியாவுக்கும், துருக்கிக்கும் இடையே வரலாற்று ரீதியாக பல்வேறு தொடர்புகள் உள்ளன.
1990ம் ஆண்டு வரை துருக்கி மொழி லடாக் பிரதேசத்தில் கற்று கொடுக்கப்பட்டது. 1920ம் ஆண்டு வரை வடக்கு துருக்கியை சேர்ந்த மக்கள் லடாக் வந்து அங்கிருந்து மும்பை சென்று ஹஜ் வழிபாடு செய்தனர். இன்னொரு விஷயம் என்னவென்றால் இந்தியாவில் 220 மில்லியன் (22 கோடி ) இஸ்லாமிய மக்கள் உள்ளனர். இது பாகிஸ்தானை விட அதிகம். பாகிஸ்தானை விட இந்தியாவில் தான் அதிகமான இஸ்லாமியர்கள் உள்ளனர். பாகிஸ்தான் இஸ்லாமிற்காக எதையும் செய்யவில்லை'' என்று கூறியுள்ளார்.
-
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications