அவமானம்.. நாம க்ளோசா இருந்தோம்னு நினைச்சேன்.. கேனிடம் வருந்திய வார்னர்.. கலங்கடிக்கும் பின்னணி
ஹைதராபாத்: ஹைதராபாத் அணியால் புறக்கணிக்கப்பட்ட வார்னர் தனது ட்வீட்டர் பக்கத்தில் சோகமாக செய்து வரும் கமெண்ட்கள் வைரலாகி உள்ளது. முக்கியமாக அவர் ஹைதராபாத் அணியால் அவமானப்படுத்தப்பட்டதாக ரசிகர்கள் விமர்சனங்களை வைத்து வருகிறார்கள்.
ஹைதராபாத் அணி 2021 ஐபிஎல் தொடரில் தொடர் தோல்விகள் காரணமாக ப்ளே ஆப் செல்லும் வாய்ப்பை இழந்து வெளியேறி உள்ளது. முதல் பாதியிலேயே டேவிட் வார்னருக்கும் ஹைதராபாத் அணிக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது.
இந்த மோதல் காரணமாக கேப்டனாக இருந்த வார்னர் மாற்றப்பட்டு கேன் வில்லியம்சன் கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஆனாலும் ஹைதராபாத் அணி வெற்றிப்பாதைக்கு திரும்பவில்லை.

நீக்கம்
அதன்பின் ஆடும் அணியில் இருந்தும் டேவிட் வார்னர் நீக்கப்பட்டார். வெளிநாட்டு வீரர்கள் கோட்டாவில் இவருக்கு இடம் கொடுக்கப்படவில்லை. அதன்பின் இவரை 18 பேர் கொண்ட குழுவில் கூட சேர்க்கவில்லை. இதனால் வார்னர் ஹைதராபாத் அணி ஆடும் போது மைதானத்திற்கு கூட வரவில்லை.

வாகனம்
இவரை ஹைதராபாத் அணியின் வாகனத்தில் ஏற கூடாது என்றும் கூறி அணி நிர்வாகம் அவமானப்படுத்தி உள்ளது. இதை அவரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கமெண்ட் ஒன்றில் குறிப்பிட்டு இருந்தார். நீங்கள் வர கூடாது என்று கூறி வார்னரை ஹோட்டலிலேயே அணி நிர்வாகம் உட்கார வைத்ததும் குறிப்பிடத்தக்கது.
|
வீடியோ
இந்த நிலையில்தான் ஐபிஎல் தொடரில் வெளியேறிய பின் ஹைதராபாத் அணி நிர்வாகம் சார்பாக வீரர்கள் குட்பை சொல்லும் வீடியோ வெளியானது. இந்த வீடியோவில் வார்னர் இடம்பெறவில்லை. இதற்கு காரணம் சொன்ன வார்னர்.. என்னை வீடியோ பைட் கொடுக்கும்படி சொல்லவே இல்லை. என்னிடம் இதை பற்றி கேட்கவே இல்லை. அதனால் நான் வீடியோவில் இல்லை என்றார்.

போடவில்லை
அதோடு கேன் வில்லியம்சனும் தனது மேட்ச் புகைப்படங்களை வெளியிட்டார். அதிலும் வார்னர் இடம்பெறவில்லை. வார்னர் நேரடியாக வில்லியம்சனிடம்.. நாம் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களை ஏன் வெளியிடவில்லை. நாம் இருவரும் நெருக்கமாக இருந்தோம் என்று நான் நினைத்தேன் என்று கொஞ்சம் கலக்கமாகவும், இன்னொரு பக்கம் கிண்டலாகவும் கேட்டார்.
|
கேள்வி கேட்டார்
வார்னரின் இந்த கேள்வி ரசிகர்களை கலங்கடிக்க செய்துள்ளது. அணி நிர்வாகம், பயிற்சியாளர்கள், சக வீரர்கள் என்று எல்லோரும் வார்னரை மொத்தமாக ஓரம் காட்டியது பெரிய அளவில் சர்ச்சையாகி உள்ளது. ஒவ்வொரு சீசனிலும் ஹைதராபாத் அணிக்கு அதிக ரன்கள் அடித்தது வார்னர்தான். கடந்த 5 சீசன்களுக்கும் மேலாக வார்னர் 500+ ரன்களை அந்த அணிக்காக அடித்து இருக்கிறார்.

வேறு எதோ நடந்து இருக்கிறது?
கடந்த சீசனில் ஹைதராபாத் சரியாக ஆடவில்லை. இந்த சீசன் தொடக்கத்திலும் ஹைதராபாத் அணி சரியாக ஆடவில்லை. வார்னரின் பேட்டிங் பாரமும் இந்த சீசனில் சரியாக இல்லை. இதனால் அணி தேர்வில் ஹைதராபாத் அடிக்கடி சொதப்பியது. ஆனால் கிரிக்கெட் தாண்டி இவருக்கும் அணி நிர்வாகத்திற்கும் வேறு ஏதோ மோதல் நடந்துள்ளது. வேறு எதோ பெரிய சண்டை நடந்துள்ளது. இதனால் அடுத்த சீசனில் வார்னர் பெரும்பாலும் ஹைதராபாத் அணிக்கு ஆட வாய்ப்பு இல்லை என்றே கூறப்படுகிறது.
-
"தல" தோனி, ரோஹித் வரிசையில் படிதார்.. சாம்பியன்ஷிப்பை விட பெரிய சாதனை படைத்த ஆர்சிபி.. கலக்கல் -
RCB-க்கு வாழ்த்து சொன்ன டி.கே.சிவகுமார்! வார்னிங் கொடுத்த சித்தராமையா! இந்த முறை தவறு நடக்கக்கூடாது! -
வாள் தூக்கி நின்ற வெங்கடேஷ் ஐயர்.. ப்ளே ஆஃப் வந்தாலே ஆளை கையில் பிடிக்க முடியாது.. இம்பேக்ட் ஆட்டம்! -
நீதான்யா ஸ்பின்னர்.. எகனாமியை பாருங்கப்பா.. ஆர்சிபி வெற்றிக்கு காரணமே க்ருணால் பாண்டியா தான்! -
சோலி முடிஞ்சுது.. சொதப்பிய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள்.. இனி குஜராத் கதி அவ்வளவு தான்! -
நள்ளிரவில் ஜொலிக்கும் பெங்களூர்.. RCB வெற்றியால் ரசிகர்கள் செய்த சம்பவம்.. இந்த வீடியோ பாருங்க -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications