Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இதுவும் இல்லை.. அதுவும் இல்லையாம்! பஞ்சாப் vs ஹைதராபாத் போட்டியில் வினோதம்.. குழம்பி போன ரசிகர்கள்

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த போட்டியில் பஞ்சாப் மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதிய நிலையில், அந்த போட்டியில் வினோதமான ஒரு சம்பவம் அரங்கேறியது. இது என்னவென்று பார்க்கலாம்.

ஐபிஎல் போட்டிகள் கடந்த மாதம் தொடங்கி நடந்து வருகிறது. ஒவ்வொரு போட்டியிலும் வழக்கம் போலவே முதல் பந்தில் இருந்து முதல் கடைசி வரை பரபரப்பான சூழலே இருந்து வருகிறது.

இதனிடையே இந்தாண்டின் 14ஆவது லீக் போட்டி நேற்று இரவு ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடந்தது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தனது மூன்றாவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொண்டது.

 IPL 2023 What happened as Both SRH and Punjab teams lose a review on the same ball

ஐபிஎல் போட்டி: ஹைதராபாத் அணி தொடர்ந்து தோல்வியடைந்து வந்த நிலையில், இந்த போட்டி அவர்களுக்கு மிகவும் முக்கியமானதாக இருந்தது. மறுபுறம் தனது முதல் இரண்டு போட்டிகளில் வென்ற பஞ்சாப் அணி ஹேட்ரிக் வெற்றியைப் பெறும் என்று அந்த அணியின் ரசிகர்கள் எதிர்பார்த்தனர். இருப்பினும், அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹைதராபாத் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ராகுல் திரிபாதி மற்றும் மயங்க் மார்கண்டே ஆகியோர் ஹைதராபாத் அணியின் வெற்றிக்குக் காரணமாக இருந்தார்கள்.

இதில் முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி 143 ரன்கள் எடுத்தது. மயங்க் மார்கண்டே நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் பஞ்சாப் ரன் குவிப்பை அப்படியே நிறுத்தினார். ஒரு கட்டத்தில் 88/9 விக்கெட்களை பஞ்சாப் இழந்து. அவர்களை 100 தாண்டுவதே கடினம் என்ற சூழல் உருவான நிலையில், 10வது விக்கெட் ஜோடி சேர்ந்த ஷிகர் தவான் - மோஹித் ரதி கவுரமான ரன்களை எடுக்க உதவினர். தவான் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 99 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

ஹைதராபாத் வெற்றி: அடுத்து 144 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இறங்கிய ஹைதராபாத் அணியில் ஹாரி புரூக் மற்றும் மயங்க் அகர்வால் இணை வலுவான தொடக்கத்தை அமைத்துத் தரவில்லை. இருப்பினும், 3ஆவதாக களமிறங்கிய ராகுல் திரிபாதி 48 பந்தில் 74* ரன்கள் எடுத்து எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தார். மறுபுறம் மார்க்ரம் ஆட்டமிழக்காமல் 37 ரன்கள் எடுத்திருந்தார்.

இந்த ஆட்டம் உள்ளூர் ஹைதராபாத் அணியை உற்சாகத்தில் ஆழ்த்தியது. நேற்றைய போட்டியில் ஒரு விநோதமான நிகழ்வு நடந்தது.
அப்போது ரசிகர்களே குழம்பிப் போன நிலையில், அது தொடர்பான வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. பஞ்சாப் கிங்க்ஸ் அணி பேட்டிங் செய்த போது 12ஆவது ஓவரை உம்ரான் மாலிக் வீசினார். அப்போது ராகுல் சாஹர் களத்தில் இருந்தார். உம்ரான் மாலிக் வீசிய 5ஆவது பந்தில் ராகுல் சாஹருக்கு லெக் சைட்டில் சென்றது. அது அவரது க்ளவுசில் பட்டதாகவே ஹைதராபாத் வீரர்கள் கருதினர்.

ரிவ்யூ: அடுத்தடுத்து விக்கெட்களை வீழ்த்தி வந்த ஹைதராபாத் அணி வீரர்கள் மிகவும் நம்பிக்கையுடன் இருந்ததால், அவர்கள் டிஆர்எஸ் கேட்டார்கள். அதேநேரம் மறுபுறம் இருந்த தவான் இது வைட் பந்து எனக் கருதினார். எனவே, அவரும் ரிவ்யூ கேட்டார்.. அதாவது ஒரே பந்திற்கு இரு அணி வீரர்களும் ரிவ்யூ கேட்டனர். ஹைதராபாத் அணி விக்கெட்டிற்கும் பஞ்சாப் அணி வைட்டிற்கும் ரிவ்யூ கேட்டது. ரிப்ளேவில் பால் பேட்டில் படாமல் சென்றது தெளிவாகத் தெரிந்தது. இதனால் அவர் அவுட் இல்லை என்பது உறுதியானது.

 IPL 2023 What happened as Both SRH and Punjab teams lose a review on the same ball

இதனால் பஞ்சாப் அணி கேட்டது போல வைட் என அறிவிப்பார்கள் என்றே மைதானத்தில் இருந்த ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், அதுவும் தரப்படவில்லை. ஏனென்றால் ராகுல் சாஹர் தன் நின்று கொண்டிருந்த போசிஷனில் இருந்து சற்று லெக் சைட் நகர்ந்து இருந்தார். இதனால் மூன்றாவது நடுவர் வைட்டும் தரவில்லை.

வினோதம்: இதன் காரணமாக ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் என்று இரண்டு அணிகளுமே ஒரே பாலில் ரிவ்யூவை இழந்த வினோத சம்பவம் அங்கே நடந்தது. இருப்பினும், அங்கே இருந்த ரசிகர்கள் முதலில் இதைக் கண்டு குழப்பமடைந்தனர். இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

இந்த போட்டியில் முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ள ஹைதராபாத் அணி புள்ளிப்பட்டியலில் 8ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. அதேநேரம் பஞ்சாப் அணி 6ஆவது இடத்திற்குச் சரிந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+