பிரபல தெலுங்கு நடிகரை மணக்கிறாரா டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சா?
ஹைதராபாத்: நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, சோயிப் மாலிக்கை விவாகரத்து செய்த நிலையில் தற்போது கிரிக்கெட் வீரர் முகமது ஷமியை திருமணம் செய்யப்போவதாக தகவல் வெளியாகியது. ஆனால் அதனை இருவரும் உறுதிப்படுத்தவில்லை. இந்த நிலையில், தெலுங்கு நடிகர் ஒருவருடன் சானியா மிர்சா டேட்டிங் சென்றதாகவும், அவரை தான் திருமணம் செய்யப்போவதாகவும் சமூக வலைத்தளத்தில் தகவல் பரவி வருகிறது.
இந்தியாவின் நட்சத்திர டென்னிஸ் வீராங்கனையாக விளங்கியவர் சானியா மிர்சா (வயது 38). தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த சானியா மிர்சா கடந்த 2010 ஆம் ஆண்டு பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான சோயிப் மாலிக்கை திருமணம் செய்தார்.

துபாயில் வசித்து வந்த சானியா - சோயிப் மாலிக் ஜோடிக்கு 2018-ல் இசான் மிர்சா மாலிக் என்ற மகன் பிறந்தான். இதற்கிடையே, இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் பரஸ்பரம் விவாகரத்து செய்து கொண்டனர். கடந்த 2023 ஆம் ஆண்டு விவாகரத்து செய்துகொண்டனர். தற்போது ஐதராபாத்தில் தனது மகனுடன் சானியா மிர்சா வசித்து வருகிறார். சோயிப் மாலிக் பாகிஸ்தானை சேர்ந்த நடிகை சனா ஜாவேத்தை திருமணம் செய்து கொண்டார்.
சோயிப் மாலிக்கை சானியா மிர்சா பிரிந்ததில் இருந்தே அவ்வப்போது அவர் மறுமணம் செய்து கொள்ளப்போவதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவி வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகம்மது சமியை திருமணம் செய்ய இருப்பதாக தகவல்கள் பரவின. முகம்மது ஷமியும் விவகாரத்து பெற்றவர் என்பதால் இந்த யூகங்கள் நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் பரப்பப்பட்டது.
எனினும் இருவருமே இதனை மறுக்கவில்லை. சமூக வலைத்தளங்களில் அவரது ரசிகர்கள் சானியா மிர்சா மறுமணம் செய்ய வேண்டும் என்றும் பதிவிட்டு வருவதை காண முடிகிறது. இதற்கிடையே, சானியா மிர்சா பிரபல தெலுங்கு நடிகர் ஒருவருடன் டேட்டிங்கில் இருப்பதாக தகவல்கள் பரவின. இது தொடர்பாக சானியா மிர்சா தரப்பில் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. மறுக்கவும் இல்லை.
இந்த நிலையில் தான் தற்போது யார் அந்த தெலுங்கு நடிகர் என்ற விவாதம் நெட்டிசன்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. ஏனெனில் சமீபத்தில் புதிய வாழ்க்கையை தொடங்க உள்ளதாக சானியா மிர்சா தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு இருந்தார். இதனை வைத்து சானியா மிர்சா இரண்டாவது திருமணம் செய்ய தயாராகி வருவதாக பதிவிட்டு வருகிறார்கள்.
சமூக வலைத்தளத்தில் அவரது ரசிகர்கள் பலரும், சானியா மிர்சா, மதத்தை பொருட்படுத்தாமல் நல்ல நபரை தேர்வு செய்ய வேண்டும் என்று அட்வைசும் செய்து வருகிறார்கள்.
எனினும் சானியா மிர்சா தெலுங்கு நடிகருடன் டேட்டிங் செய்கிறாரா? அப்படியே இருந்தால் அவர் திருமணம் ஆனவரா? இல்லை திருமணம் ஆகாத இளம் நடிகரா? என்ற எந்த ஒரு தெளிவான தகவலும் இல்லை. சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் இந்த வதந்திகளுக்கு சானியா மிர்சா மவுனம் கலைத்தால்தான் முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்றும் அவரது ரசிகர்கள் பதிவிட்டு வருவதை பார்க்க முடிகிறது.












Click it and Unblock the Notifications