ஆஹா வந்தாச்சே.. சந்திரயான் 3 எடுத்த நிலவின் அசத்தல் புகைப்படங்கள்.. வெளியிட்டது இஸ்ரோ
ஹைதராபாத்: நிலவின் தென் துருவ பகுதிகளை ஆய்வு செய்ய அனுப்பப்பட்டுள்ள சந்திரயான் 3 விண்கலத்திலிருந்து விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த லேண்டர் தரையிறங்கும் இடத்தை தற்போது படமெடுத்து உறுதி செய்திருக்கிறது. விக்ரம் லேண்டர் எடுத்துள்ள இந்த படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.
நிலவில் நீர் இருப்பதற்கான ஆதாரங்களை இந்தியாவின் சந்திரயான் 1 விண்கலம் கண்டுபிடித்த பின்னர், நிலவை ஆக்கிரமிக்க சர்வதேச நாடுகள் பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்தியாவும் சந்திரயான் 2 விண்கலத்தில் ஒரு லேண்டரை வைத்து நிலவுக்கு அனுப்பி வைத்தது. எல்லாம் சரியாக நடந்திருந்த சமயத்தில் லேண்டர் நிலவில் தரையிறங்க முயன்றது. ஆனால் நிலவிலிருந்து 13 மீட்டர் உயரத்தில் இருந்தபோது ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக சந்திரயான் 2 விண்கலத்தின் பிரக்யான் ரோவர் நிலவில் மோதி உடைந்தது.

இதற்கு முக்கிய காரணம், தரையிறங்கும் போது வெளியான அதிக அளவிலான வெப்பம்தான். நிலவில் பிரக்யான் ரோவர் எந்த இடத்தில் தரையிறங்க வேண்டும் என்பதை விஞ்ஞானிகள் ஏற்கெனவே புரோகிராம் செய்து வைத்திருந்தனர். அதற்கான புகைப்படமும் பிரக்யான் ரோவரில் மெமரியில் பதியப்பட்டது. இப்படி இருக்கையில் சந்திரயான் 2 விண்கலத்திலிருந்து பிரிந்து நிலவை நோக்கி சென்ற பிரக்யான் ரோவர் நிலவின் எந்த பகுதியில் இறங்க வேண்டும் என்பதை போட்டோ எடுத்து ஒப்பிட வேண்டும்.
ஆனால் 13 மீட்டர் உயரத்தில் பிரக்யான் ரோவர் இருக்கும்போது அதிலிருந்து எரிபொருள் அதிகமாக வந்ததால் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு இறங்க வேண்டிய இடத்தில் குழப்பம் உண்டானது. இப்படியாக பிரக்யான் ரோவர் நிலவில் மோதியது. ஆனால் இந்த முறை இந்த தவறை விக்ரம் லேண்டர் செய்யவில்லை. இறங்குவதற்கு சில நாட்கள் முன்கூட்டியே அது இறங்க வேண்டிய இடத்தை போட்டோ எடுத்து உறுதி செய்து, அதை பூமிக்கும் அனுப்பியுள்ளது.
Chandrayaan-3 Mission:
— ISRO (@isro) August 18, 2023
🌖 as captured by the
Lander Position Detection Camera (LPDC)
on August 15, 2023#Chandrayaan_3#Ch3 pic.twitter.com/nGgayU1QUS
இது லேண்டர் பொஷிஷன் டிடெக்ஷன் கேமிரா (LPDC) மூலம் எடுக்கப்பட்டிருக்கிறது. சந்திரயான் 3 விண்கலத்திலிருந்து பிரிந்த பின்னர் விக்ரம் லேண்டர் எடுத்த முதல் புகைப்படங்கள் இதுவாகும். இதனை இஸ்ரோ தற்போது வெளியிட்டிருக்கிறது. எனவே இந்த முறை விக்ரம் லேண்டர் சரியாக தரையிறங்கிவிடும் என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
மேலும், நிலவின் மேற்பரப்பை லேண்டர் பொசிஷன் டிடெக்ஷன் கேமரா எடுத்த வீடியோவையும் இஸ்ரோ வெளியிட்டுள்ளது. நிலவின் மேற்பரப்பை துல்லியமாக படம் பிடித்துள்ளது. நிலவின் மேற்பரப்பில் காணப்படும் பள்ளங்கள் ஆகியவை தெளிவாக தெரிகின்றன. இந்த வீடியோவை பாருங்கள்.. நாம் தினம் தோறும் வானில் பார்த்து ரசிக்கும் நிலா, உண்மையில் எப்படி இருக்கிறது என தெரிந்து அசந்தே போவீர்கள்...
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications