பாலியல் பலாத்காரம் செய்ததற்கு ஆதாரம் இருக்கா! 21 வயது பெண்ணிடம் கேட்கும் ஜானி மாஸ்டரின் மனைவி
ஹைதராபாத்: என் கணவர் மீதான பாலியல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவரை விட்டு விலகத் தயார் என ஜானி மாஸ்டரின் மனைவி சுமலதா பேட்டியளித்துள்ளார். தன்னிடம் உதவி நடன இயக்குநராக பணியாற்றிய 21 வயது இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக ஜானி மீது குற்றச்சாட்டு ஏற்பட்டு அவர் தற்போது சிறையில் உள்ளார்.
இதுகுறித்து நடன இயக்குநர் ஜானியின் மனைவி சுமலதா என்கிற ஆயிஷா கூறியிருப்பதாவது: புகார் அளித்திருக்கும் அந்த பெண் சிறுமியாக இருந்த போது மேடை நிகழ்ச்சிகளில் நடனமாடி வந்தார். பிறகு சினிமா வாழ்க்கையை பார்த்து சொகுசாக இருக்க ஆசைப்பட்டு இந்த துறைக்கு வந்தார்.

என் கணவரிடம் வேலைக்கு சேர்ந்தார். ஹைதராபாத்தில் உள்ள திரைப்பட அசோசியேஷனில் உறுப்பினராக சேரக் கூட பணம் இல்லாமல் இருந்த அவருக்கு உதவியது என் கணவர்தான். நடன இயக்குநர் அல்லது கதாநாயகியாக வர வேண்டும் என அந்த பெண் ஆசைப்பட்டார்.
மும்பையில் வைத்து எனது கணவர் அவரை பலாத்காரம் செய்தார் என சொல்கிறாரே இதை ஏன் அப்போதே சொல்லவில்லை. இதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது? அந்த பெண் சொன்னது போல் பாலியல் பலாத்காரத்திற்குள்ளாகி இருந்தால் எதற்காக தொடர்ந்து என் கணவரிடம் வேலை பார்க்க வேண்டும் ? அவரிடம் பணிபுரிவது தனது அதிர்ஷடம் என ஏன் சொல்ல வேண்டும்?
என் கணவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவரை விட்டு விலக நான் தயார் என ஆயிஷா தெரிவித்துள்ளார். 21 வயது பெண் 16 வயதாக இருக்கும் போதிலிருந்தே தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் அளித்திருந்தார். இந்த நிலையில் ஜானி மாஸ்டர் தலைமறைவானார்.
பின்னர் அவரை போலீஸார் தேடி வந்த நிலையில் அவரை பெங்களூரில் வைத்து கைது செய்தனர். இதையடுத்து அவரை நேற்று ஹைதராபாத் உப்பரப்பள்ளி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதில் அவரை 14 நாட்கள் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
அதாவது அந்த பெண் ஜானி மாஸ்டருடன் பணியாற்றிய போது சென்னை, ஊட்டி, பெங்களூர், ஹைதராபாத், மும்பை உள்ளிட்ட பல்வேறு சூட்டிங் ஸ்பாட்டுகளுக்கு தன்னை அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் கூறியுள்ளார்.
தெலுங்கு திரையுலகில் அல்லு அர்ஜுன், ராம் சரண், ரவி தேஜா உள்ளிட்டோருக்கு நடனத்தை இயக்கி புகழ் பெற்றவர் ஜானி. தமிழிலும் நடிகர்கள் விஜய், தனுஷ் உள்ளிட்டோருக்கு இவர் நடன இயக்குநராக இருந்துள்ளார். காந்த கண்ணழகி, ரவுடி பேபி, செல்லம்மா, ரஞ்சிதமே, அரபிக் குத்து, ஜாலியோ ஜிம்கானா, ஜெயிலர் படத்தில் காவாலா, மேகம் கருக்காதா, புஷ்பா படத்தில் ஸ்ரீவல்லி உள்ளிட்ட சூப்பர் ஹிட் பாடல்களுக்கு நடனத்தை அமைத்துள்ளார். மேகம் கருக்காதா பாடலுக்கு ஜானி மாஸ்டருக்கு தேசிய விருது கிடைத்தது.
-
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது!












Click it and Unblock the Notifications