நடிகர் ஜூனியர் என்டிஆர் காயம்.. சூட்டிங் ஸ்பாட்டில் விபரீதம்.. ரசிகர்கள் அதிர்ச்சி.. என்ன நடந்தது?
ஹைதராபாத்: தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஜூனியர் என்டிஆர். தற்போது ‛டிராகன்' திரைப்படத்துக்காக உடல் எடையை குறைத்து வருகிறார். இந்நிலையில் தான் விளம்பர சூட்டிங்கிற்கு சென்ற ஜூனியர் என்டிஆர் கால்தவறி கீழே விழுந்து காயமடைந்துள்ளார்.
தெலுங்கு சினிமாவில் புகழ்பெற்ற நடிகராக வலம் வருபவர் ஜூனியர் என்டிஆர். இவர் ஹைதராபாத்தில் உள்ள அன்னபூர்ணா 7 ஏக்கர்ஸ் எனும் இடத்தில் விளம்பர சூட்டிங்கில் நடித்து கொண்டிருந்தார். அப்போது விளம்பரத்துக்காக போடப்பட்டு இருந்த மேடையில் இருந்து அவர் கால்தவறி கீழே விழுந்துள்ளார்.

இதில் அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. பயப்படும் அளவுக்கு அவரது உடலில் காயங்கள் ஏற்படாவிட்டாலும் கூட அடுத்த சில நாட்கள் அவர் ஓய்வில் இருக்க வேண்டும் என்று டாக்டர்கள் கூறியுள்ளனர். இதுதொடர்பாக ஜூனியர் என்டிஆர் டீம் சார்பில் ரசிகர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
அதில், ‛‛ஜூனியர் என்டிஆர் இன்று லேசான காயமடைந்தார். விளம்பரத்துக்கான சூட்டிங்கின்போது காயம் ஏற்பட்டது. அடுத்த 2 வாரங்களுக்கு அவர் ஓய்வில் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுரை வழங்கி உள்ளனர். அவர் தற்போது நலமாக இருக்கிறார். கவலைப்படும் அளவுக்கு எந்த பிரச்சனையும் இல்லை'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் சூட்டிங் ஸ்பாட்டில் என்ன நடந்தது? ஜூனியர் என்டிஆருக்கு எந்த இடத்தில் அடிப்பட்டுள்ளது? என்பது பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இது அவரது ரசிகர்களை கவலைப்பட வைத்துள்ளது.
ஜூனியர் என்டிஆர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் ‛வார் 2'. அதன்பிறகு ஜூனியர் என்டிஆர் அடுத்ததாக ‛டிராகன்' என்ற திரைப்படத்தில் நடிக்கிறார். இந்த திரைப்படத்தை கேஜிஎப் திரைப்படத்தை இயக்கிய பிரசாந்த் நீல் இயக்குகிறார்.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் இந்த திரைப்படத்தை தயாரிக்க உள்ளது. ஆக்சன் பிலிமாக இது வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்துக்காக ஜூனியர் என்டிஆர் தனது உடல் எடையை தீவிரமாக குறைத்து வருகிறார்.
சமீபத்தில் அவர் உடல் எடையை குறைத்த போட்டோ வெளியானது. அதனை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். கவலைகளை பகிர்ந்தனர். அந்த கவலை கலைவதற்குள்ளேயே தற்போது ஜூனியர் என்டிஆர் விளம்பரம் தொடர்பான சூட்டிங்கில் காயமடைந்துள்ளார். இது அவரது ரசிகர்களை இன்னும் கவலையில் ஆழ்த்தி உள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications