Kalpana: நான் உயிரோட இருக்க காரணமே என் கணவர்தான்! வதந்தி பரப்பாதீர்கள்! பாடகி கல்பனா உருக்கம்
ஹைதராபாத்: நான் இன்று உயிருடன் இருப்பதற்கு காரணம் என் கணவர் பிரசாத்தான். தயவு செய்து என் மீதும் கணவர் மீதும் வதந்திகளை பரப்பாதீர்கள் என பாடகி கல்பனா கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுகுறித்து பாடகி கல்பனா வெளியிட்டுள்ள புதிய வீடியோவில் கூறியிருப்பதாவது: வணக்கம் நான் உங்கள் கல்பனா ராகவேந்திரா. ஒரு விஷயத்தை தெளிவுப்படுத்தவே நான் தற்போது இந்த வீடியோவை வெளியிட்டுள்ளேன்.

முதலில் இந்த வயசுல நான் பிஎச்டி, எல்எல்பி உள்ளிட்ட நிறைய விஷயங்களை படித்துக் கொண்டிருக்கிறேன். எனது இசை தொழிலிலும் நான் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறேன். இதனால் எனக்கு மன அழுத்தம் அதிகரித்தது. சரியான தூக்கமும் இல்லை.
தூங்க முடியாத பிரச்சினை இருப்பதால் மருத்துவரிடம் சிகிச்சை மேற்கொண்டு வருகிறேன். இன்சோமியா பிரச்சினை இருப்பதாக தெரிவித்தனர். அதற்கான மருந்து மாத்திரைகளையும் கொடுத்துள்ளனர்.
மருந்து வீரியம்
அந்த மருந்தை அந்த நாளில் நான் சற்று அதிகம் எடுத்துக் கொண்டேன். அதன் வீரியத்தால் எனக்கு நுரையீரலில் பாதிப்பு ஏற்பட்டு நான் மயங்கிவிட்டேன். ஆனால் இன்று நான் உயிருடன் திரும்பி வந்து உங்களிடம் பேசுகிறேன் என்றால் அதற்கு ஒரே காரணம், என் கணவர் அன்றைய தினம் எனக்காக பட்ட பாடுதான்.
சரியான நேரத்தில்
அவர் வெளியூரில் இருந்தாலும் என்னை சரியான நேரத்திற்கு மருத்துவமனையில் சேர்க்க பாடுபட்டவர் என் கணவர்தான். அதுமட்டுமல்லாமல், மீடியா, போலீஸ் என அனைவரும் கஷ்டப்பட்டு என்ன காப்பாத்தினாங்க. இதனால நான் உயிர் தப்பிச்சேன். அப்படியிருக்கும் நிலையில் என்னை பற்றியும் என் கணவரை பற்றியும் சோசியல் மீடியாவிலும் ஊடகங்களிலும் ஒரு வதந்தி பரவி வருகிறது.
வதந்தி வேண்டாம்
தயவு செய்து எந்த வதந்திகளையும் நம்ப வேண்டாம். என்னோட வாழ்க்கையில், எனக்கும் என் கணவருக்கோ எந்தவிதமான கருத்து வேறுபாடு இல்லை, தனிப்பட்ட பிரச்சினையும் இல்லை. எனக்கு ரொம்ப நல்ல கணவர் பிரசாத் கிடைச்சிருக்காரு, அழகான நல்ல மகளும் கிடைச்சிருக்காங்க இவங்க என் வாழ்க்கையில எனக்கு கிடைச்சதுக்கு கடவுளுக்கு நான் ரொம்ப நன்றி கடன்பட்டு இருக்கேன், தயவுசெய்து என்னை குறித்தும், என் கணவர் குறித்தும் தவறான வதந்திகளை பரப்பாதீர்கள். இவ்வாறு கல்பனா கேட்டுக் கொண்டுள்ளார்.
கல்பனா வீட்டில் நடந்தது என்ன
பின்னணி பாடகி கல்பனா தனது ஹைதராபாத் வீட்டை விட்டு இரு நாட்கள் வரவில்லை என்ற தகவலை அடுத்து புகாரின் பேரில் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று கதவை தட்டி பார்த்தனர். ஆனால் கதவு திறக்கப்படவில்லை என்றதும் பின்பக்கமாக சென்று கதவை உடைத்து பார்த்தனர். அப்போது அங்கு கட்டிலில் கல்பனா தூங்குவது போலேயே மயங்கி இருந்தார்.
தூக்க மாத்திரைகள்
அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகள் உட்கொண்டதாக ரத்த அழுத்தம் குறைந்து அவர் மயக்க நிலையை அடைந்துவிட்டதாக தெரிவித்தனர்.
கல்பனா தற்கொலை முயற்சி?
இதனால் கல்பனா தற்கொலை முயற்சி செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது. 44 வயதாகும் கல்பனாவுக்கு ஒரு மகள் இருக்கிறார். இந்த நிலையில் கல்பனா ஆபத்தான கட்டத்தை தாண்டி விட்டதாக மகள் விளக்கமளித்தார்.
கல்பனா விளக்கம்
மேலும் தனது தாய் தற்கொலை முயற்சி எல்லாம் செய்யவில்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார். தனது தாய் குறித்து யாரும் அவதூறு பரப்ப வேண்டாம் என்றும் அவர் கேட்டிருந்தார். மேலும் கல்பனாவுக்கு கணவர் பிரசாத்திற்கும் இடையே ஏதோ பிரச்சினை என்பதால்தான் அவர் தற்கொலை முடிவுக்கு வந்ததாகவும் செய்திகள் வந்தன. இந்த நிலையில்தான் கல்பனா, தான் நலமாக இருப்பதாகவும் தான் தற்கொலை முயற்சி செய்யவில்லை என்றும், 8 மாத்திரைகள் போட்டும் தூக்கம் வராததால் மேலும் 10 மாத்திரைகள் சேர்த்து போட்டதால் மயங்கியதாகவும் தெரிவித்துள்ளார்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications