Thug life: கைவிட்ட கர்நாடகா.. தாங்கி பிடித்த தெலுங்கு மாநிலம்.. கமல் "தக் லைப்" படத்திற்கு கலக்கல் புக்கிங்!
ஹைதராபாத்: கமல் ஹாசன் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள தக் லைப் படத்திற்கு கர்நாடகாவில் தடை இருப்பதால் அங்கு வெளியாகவில்லை. அதேநேரம் தமிழர்கள் கணிசமாக வசிக்கும் தெலுங்கானாவில் நல்ல வரவேற்பு இருக்கிறது. குறிப்பாகத் தலைநகர் ஹைதராபாத்தில் நல்ல வரவேற்பு இருப்பதாகவே தகவல்கள் வெளியாகியுள்ளன.
கமல் ஹாசன் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் தக் லைப். இந்தப் படத்தில் சிம்பு, த்ரிஷா, அபிராமி, அஷோக் செல்வன் என்று மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இந்தப் படம் இன்று வெளியாகி நல்ல விமர்சனங்களைப் பெற்று வருகிறது. ரசிகர்களிடையேயும் இந்த படம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

கர்நாடகா சிக்கல்
உலகெங்கும் இந்த படம் ரிலீஸ் ஆகியிருந்தாலும் கர்நாடகாவில் மட்டும் இன்று இந்தப் படம் ரிலீஸ் ஆகவில்லை. இரு வாரங்களுக்கு முன்பு நடந்த இசை வெளியீட்டு விழாவில் கமலின் பேச்சுக்குக் கன்னட அமைப்புகள் சில எதிர்ப்பு தெரிவித்ததே இதற்கு பிரதான காரணமாகும். அதாவது அந்த நிகழ்ச்சியில் பேசிய கமல், "தமிழிலிருந்து பிறந்ததுதான் கன்னடம். அதை நீங்களும் (சிவராஜ் குமார்) ஒப்புக் கொள்வார் என்றே நினைக்கிறேன்" எனக் கூறியிருந்தார்.
கைவிட்ட கர்நாடகா
அவரது இந்த சாதாரண பேச்சு அரசியலாக்கப்பட்டது. கமலின் பேச்சுக்குக் கன்னட அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன. கன்னட அமைப்புகளுக்கு ஆதரவாகக் கன்னட பிலிம் சாம்பர் களத்தில் இறங்கிய நிலையில், தக் லைப் படத்திற்குத் தடை விதிப்பதாக அறிவிக்கப்பட்டது. இதை எதிர்த்து கமல்ஹாசன் கர்நாடக ஐகோர்ட்டில் வழக்குப் போட்டார். இருப்பினும், கமல்ஹாசனுக்கு ஆதரவாக நீதிமன்ற தீர்ப்பு வரவில்லை. கமல் மன்னிப்பு கேட்டால் பிரச்சினை முடிந்துவிடும் என்றும் கமலுக்கு என்ன ஈகோ என்றெல்லாம் நீதிபதி கேள்வி எழுப்பியிருந்தார்.
ரிலீஸ் இல்லை
தொடர்ந்து இந்த விவகாரத்தில் தனது பேச்சு தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டதாக எல்லாம் கமல் அறிக்கையையும் வெளியிட்டார். இருப்பினும், மன்னிப்பு கேட்காத வரை படத்தை வெளியிடப் போவதில்லை எனக் கன்னட பிலிம் சாம்பர் கூறிவிட்டது. நீதிமன்றமும் தீர்ப்பு வழங்காத நிலையில், கர்நாடகாவில் மட்டும் பட ரிலீஸ் ஒரு வாரம் தள்ளி வைக்கப்பட்டது. இதனால் கர்நாடகாவில் கமலுக்கு சில கோடி நஷ்டம் என்பதில் சந்தேகம் இல்லை.
அரவணைத்த தெலுங்கு மாநிலம்
அதேநேரம் மறுபுறம் தமிழ்நாடு மட்டுமின்றி தெலுங்கு மாநிலங்களிலும் தக் லைப் படத்திற்கு நல்ல புக்கிங் இருக்கிறது. குறிப்பாகத் தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் தக் லைப் தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் வெளியாகியுள்ளது. இதில் இன்று வார நாள் என்ற போதிலும் கணிசமான அளவுக்கு புக்கிங் இருப்பதைப் பார்க்க முடிகிறது. குறிப்பாக மாலை மற்றும் இரவுக் காட்சிகளில் புக்கிங் அதிகமாகவே இருக்கிறது.
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு வெர்ஷனுக்கும் கூட புக்கிங் நன்றாகவே இருக்கிறது. படத்திற்கும் பாசிட்டிவ் ரிவ்யூக்களே வரும் நிலையில், நாளை தொடங்கி வார இறுதி நாட்களில் புக்கிங் அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 6 மாதங்களில் அஜித்தின் குட் பேட் அக்லி, டூரிஸ்ட் பேமலி ஆகிய இரு படங்களுக்கு மட்டுமே ஹைதராபாத்தில் நல்ல வரவேற்பு இருந்தது. இப்போது தக் லைப் படத்திற்கும் சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications