கன்னட நடிகை ஷோபிதா சிவன்னா தற்கொலை.. ரசிகர்கள் அதிர்ச்சி!
ஹைதராபாத்: சீரியல் மற்றும் திரைப்பட நடிகை ஷோபிதா சிவன்னா தற்கொலை செய்துகொண்டுள்ளார். 30 வயதான அவர் ஹைதராபாத்தில் உள்ள அவரது வீட்டில் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. நடிகை தற்கொலை செய்தி அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
கன்னட நடிகை ஷோபிதா சிவன்னா. இவருக்கு வயது 30. தற்போது ஹைதராபாத்தில் உள்ள வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு ஹோபிதா சிவன்னா தற்கொலை செய்துகொண்ட நிலையில் மீட்கப்பட்டார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

ஷோபிதா சிவன்னா: ஷோபிதா சிவன்னாவின் தற்கொலைக்கு காரணம் என்ன என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். நடிகை தற்கொலை செய்தி அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஷோபிதா சிவன்னா 12க்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்துள்ளார்.
கன்னட நடிகை ஷோபிதா சிவன்னா கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் உள்ள சக்லேஷ்பூர் பகுதியை சேர்ந்தவர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தான் இவருக்கு திருமணம் ஆனது. திருமணத்திற்கு பிறகு ஷோபிதா சிவன்னா ஹைதராபாத்திற்கு குடியேறினார். கணவருடன் ஹைதராபாத்தில் வசித்து வந்தார். இந்த நிலையில் தான் நேற்று அவர் தற்கொலை செய்ததாக தகவல் வெளியானது.
போலீஸ் விசாரணை: திடீரென சோக முடிவை எடுத்து வந்தது அவரது ரசிகர்களை அதிர்ச்சி அடையவைத்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை எனவும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹைதரபாத்தில் உள்ள அவரது வீட்டில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சோபிதாவின் உடல் பிரதே பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. பிரதே பரிசோதனைக்கு பிறகு இறுதிச்சடங்களுக்கு அவரது உடல் பெங்களூர் கொண்டு செல்லப்படும் என்று கூறப்படுகிறது.
12 சீரியல்கள்: பெங்களூருக்கு வந்த பிறகு கன்னட டெலிவிஷன் தொடர்களில் சோபிதா நடித்து வந்தார். 12 க்கும் மேற்பட்ட சீரியல்களில் சோபிதா நடித்து இருக்கிறார். கலிபதா, மங்களா கெளரி, கோகிலே, கிருஷ்ணா ருக்மனி, தீபவு நின்னடே, கலியூ நின்னடே மற்றும் அம்மாவ்ரு உள்ளிட்ட சீரியல்கள் அவரை பிரபலமானவராக்கியது.
ரசிகர்கள் சோகம்: அதேபோல, எரடோண்ட்லா, ஏடிஎம், ஒண்டு கதே ஹெல்வா மற்றும் ஜாக்பாட் ஆகிய படங்களும் இவர் நடித்தவைகளில் முக்கியமானவை. கடைசியாக பர்ஸ்ட் டே பர்ஸ்ட் ஷோ என்ற கன்னட படத்தில் நடித்து இருந்தார். சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருந்து வந்த சோபிதாவின் திடீர் மரணம் அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. சோபிதாவின் மறைவுக்கு அவரது ரசிகர்கள் அழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகிறார்கள்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications