வாழ்த்து பெற நேரில் சென்ற ஜெகன்மோகன்.. கட்டி அணைத்து பூரிப்படைந்த கேசிஆர்
ஹைதராபாத்: தெலுங்கானா மாநில முதல்வர் கே சந்திரசேகர ராவை சந்திக்க சென்ற ஜெகன்மோகன் ரெட்டியை கட்டி அணைத்து வரவேற்றார் ராவ்.
ஆந்திர சட்டசபை தேர்தலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி 151 தொகுதிகளை பெற்று அமோக வெற்றி பெற்றது. ஆனால் மாநிலத்தை ஆண்ட சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி வெறும் 23 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இதையடுத்து ஆந்திர முதல்வராக அக்கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி பதவியேற்கவுள்ளார்.

மகிழ்ச்சி
அவர் வரும் 30-ஆம் தேதி பதவியேற்கிறார். இந்த விழாவுக்கு தெலுங்கானா முதல்வர் கே சந்திரசேகர ராவை நேரில் அழைக்க சென்றார். அப்போது ஜெகன்மோகன் ரெட்டியை கட்டி அணைத்து தனது மகிழ்ச்சியை சந்திரசேகர ராவ் வெளிப்படுத்தினார்.

பரிசு
இதையடுத்து ரெட்டிக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்று உள்ளே அழைத்து சென்றார். சில நிமிடங்கள் நடைபெற்ற இந்த சந்திப்பு கூட்டத்தின் முடிவில் ஜெகன்மோகன் ரெட்டி வீணையை கே சந்திர சேகர ராவ் பரிசாக அளித்தார்.

2011-இல் கட்சி உருவாக்கம்
விஜயவாடாவில் உள்ள இந்திராகாந்தி மைதானத்தில் நடைபெறுகிறது. காங்கிரஸில் இருந்து வெளியேறி கடந்த 2011-ஆம் ஆண்டு ஜெகன்மோகன் ரெட்டி ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் என்ற கட்சியை உருவாக்கினார்.

ஆச்சரியம்
ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுடன் எலியும் பூனையுமாக இருந்த சந்திரசேகரராவ் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு ஆதரவாக இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications