தெலுங்கானா முதல்வர் வேட்பாளர்.. கேசிஆர் டாப்.! ஆனால் பின்னாலே வரும் காங்.! கடும் போட்டி! புது சர்வே

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: இன்னும் சில வாரங்களில் தெலுங்கானாவில் சட்டசபைத் தேர்தல் நடைபெறும் நிலையில், அங்கே சிறந்த முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

அடுத்தாண்டு லோக்சபா தேர்தல் நடைபெறும் நிலையில், அதற்கு முன்பு இந்தாண்டு 5 மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. இது லோக்சபா தேர்தலுக்கு அரையிறுதியாகப் பார்க்கப்படுகிறது.

KCR vs Revanth Reddy Who is the Preferred CM candidate in Telangana ABP-CVoter Opinion Poll

இதில் தெலுங்கானாவைப் பொறுத்தவரை அங்கே ஒரே கட்டமாக நவ.30ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தெலுங்கானாவில் மொத்தம் 119 இடங்கள் உள்ள நிலையில், ஒரு கட்சி பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்க 60 இடங்களில் வெல்ல வேண்டும்.

அங்கே கேசிஆர் தலைமையிலான பிஆர்எஸ் கட்சி ஆட்சியில் இருக்கிறது. தெலுங்கானா மக்களுக்கு கேசிஆர் மிகப் பெரிய மதிப்பும் மரியாதையும் இருக்கும் நிலையில், அதை வைத்து இந்த முறையும் வெல்ல பிஆர்எஸ் முயல்கிறது. இருப்பினும் 9 ஆண்டுகளாக அங்கே பிஆர்எஸ் ஆட்சியில் இருக்கும் நிலையில், அரசுக்கு எதிரான மனநிலை அவர்களுக்குச் சிக்கல்.

மறுபுறம் ஒருங்கிணைந்த ஆந்திராவாக இருந்த போதும் காங்கிரஸ் அங்கே மிகவும் வலிமையாக இருந்தது. இருப்பினும், தெலுங்கானா, ஆந்திரா மாநிலங்கள் உருவாக்கப்பட்ட போது இரண்டிலும் செல்வாக்கை இழந்தது. விட்ட இடத்தை பிடிக்கும் முயற்சியில் பாஜக இறங்கும் நிலையில், காங்கிரஸில் இருந்து போட்டி கடுமையாக இருக்கிறது.

இதுவரை வெளியான சர்வேக்களில் பிஆர்எஸ் மற்றும் காங்கிரஸ் இடையே போட்டி இருந்தாலும், காங்கிரஸ் கட்சி வெல்லவே வாய்ப்புகள் அதிகம் எனக் கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே தெலுங்கானாவில் சிறந்த முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து ஏபிபி சி ஓட்டர் நடத்திய சர்வே முடிவுகள் இப்போது வெளியாகியுள்ளது.

அதில் பிஆர்எஸ் கட்சித் தலைவரும் தற்போதைய முதல்வருமான கே.சந்திரசேகர் ராவ் 36 சதவீதம் ஆதரவுடன் முதலிடத்தில் வருகிறார். இது தெலுங்கானா மக்கள் கேசிஆர் மீது எந்தளவுக்கு மரியாதை வைத்துள்ளனர் என்பதைக் காட்டுகிறது. காங்கிரஸ் வேட்பாளரும் இதில் பின்னாலேயே வருகிறார்.

அதேபோல காங்கிரஸ் சார்பில் தெலுங்கானாவில் பிரசாரத்தை முன்னெடுக்கும் ரேவந்த் ரெட்டி 34 சதவீத ஆதரவுடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. பாஜகவின் பாண்டி சஞ்சய் 15 சதவீத ஆதரவுடன் மூன்றாவது இடத்திலும் மஜ்லீஸ் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஒவைசி 2 சதவீத ஆதரவுடன் 4ஆவது இடத்திலும் உள்ளனர். மற்ற தலைவர்களுக்கு 12 சதவிகித வாக்குகள் வந்துள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+