மல்லிகை பூ ஜாக்கெட்..குட்டை பாவாடை! என்ன கண்றாவி ஸ்டெப் இது? காட்டமாக வாங்கி கட்டிக் கொண்ட கெட்டிகா!
ஹைதராபாத்: ஸ்ரீலீலா, நித்தின் ஆகியோர் நடித்துள்ள ராபின் ஹுட் திரைப்படத்தில் இரு பாடல்கள் ஏற்கனவே வெளியான நிலையில் மூன்றாவது பாடலான 'அதி தா சர்ப்ரைஸு' பாடல் கடந்த பத்தாம் தேதி வெளியாகியிருக்கிறது. இந்த பாடலில் கெட்டிகா சர்மா கவர்ச்சியாக நடனமாடி இருந்த நிலையில் ஒரு ஸ்டெப் இணையதளங்களில் மிகவும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது.. ஊ சொல்றியா மாமா பாடலில் நடனமாடியிருந்த சமந்தாவை விட இந்த பாடலில், கெட்டிகா மிகவும் ஆபாசமாக நடித்திருப்பதாக சமூக வலைதளங்களில் விமர்சனம் வெளியாகியிருந்தாலும், அதுவே இந்த பாடலுக்கு மிகப் பெரிய வரவேற்பை பெற்றுக் கொடுத்துள்ளது.
தெலுங்கு திரையுலகில் தற்போதைக்கு ஸ்ரீலீலா தான் ஹாட் டாபிக். குண்டூர் காரம் படத்தில் அவரது நடனம் வெகுவாக பேசப்பட்ட நிலையில் பல படங்களில் அவர் நடிக்க கூட வேண்டாம் ஒரு பாடலுக்கு நடனம் ஆடினால் போதும் என்ற அளவுக்கு ஆகிவிட்டது.

புஷ்பா படத்தில் அவர் நடனமாடியது ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம் என பழ மொழிகளில் ஸ்ரீலீலா நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது வெங்கி குடுமலா இயக்கத்தில் நிதினுக்கு ஜோடியாக ராபின்ஹூட் என்ற படத்தில் ஸ்ரீலிலா நடித்து வருகிறார்.
ராஜேந்திர பிரசாத், ஷைன் டேம் சாக்கோ, வெண்ணிலா கிஷோர், மைம் கோபி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இந்த படம் 28ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் கவர்ச்சி பாடல் ஒன்றுக்கு பிரபல நடிகையான கெட்டிகா சர்மா நடனமாடி இருக்கிறார். ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கும் இந்த படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் பாடல்கள் பயங்கர ஹிட் அடித்திருக்கிறது.
ஒன் மோர் டைம், வாட்டெவர் யூ கோ ஆகிய பாடல்கள் ஏற்கனவே வெளியாகி யூட்யூபில் பெரிய வரவேற்பு பெற்ற நிலையில் கடந்து பத்தாம் தேதி அதி தா சர்ப்ரைஸு பாடல் வெளியானது. அந்த பாடலில் கெட்டிகா சர்மா நடனமாடி இருக்கும் நிலையில் அவரது உடையும் ஸ்டெப்பும் கடுமையாக விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. மல்லிகை பூவில் ஜாக்கெட், குட்டை பாவாடை என மிகவும் கவர்ச்சியாக கெட்டிகா சர்மா அந்த பாடலுக்கு நடனமாடி இருந்தார். மேலும் பாடலின் ஓபனிங்கிலேயே சுருட்டு புகைப்பது போலவும் நடித்துள்ளார்.
The sizzling @TheKetikaSharma's moves have taken over the internet 💥💥#Robinhood third single #AdhiDhaSurprisu TRENDING on YouTube ❤️🔥
— Mythri Movie Makers (@MythriOfficial) March 13, 2025
▶️ https://t.co/GvczL8HMp7#Robinhood IN CINEMAS WORLDWIDE ON MARCH 28th.@actor_nithiin @sreeleela14 @VenkyKudumula @gvprakash… pic.twitter.com/RnMcy1jb91
ஏற்கனவே புஷ்பா 1 படத்தில் ஊ சொல்றியா மாமா பாடல் பயங்கர ஹிட் அடித்தாலும் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. இந்த நிலையில் கெட்டியா சர்மாவும் அதைவிட மோசமாக நடனமாடி இருப்பதாக தொடர் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறது. அதே நேரத்தில் அந்த விமர்சனமே பாடலுக்கு விளம்பரத்தை பெற்றுக் கொடுத்துள்ளது. தற்போது 47 லட்சம் பார்வையாளர்களை கடந்துள்ளதோடு யூட்யூபில் ட்ரெண்டிங்கில் ஏழாவது இடத்தில் இருக்கிறது அதி தா சர்ப்ரைஸு பாடல்.
கெட்டிகா ஷர்மா: பாடல்கள் மூலம் பிரபலம் ஆவது தற்போது தெலுங்கு திரையுலகில் அதிகமாகி வருகிறது. புஷ்பா படத்தின் முதல் பாகத்தில் ஊ சொல்றியா பாடலுக்கு சமந்தாவும், இரண்டாவது பாகத்தில் சப்புனு அறைவே பாடலுக்கு ஸ்ரீலாலாவும் நடனமாடி இருந்தனர். அந்த வகையில் தற்போது ராபின்ஹூட் படத்தில் கெட்டிகா சர்மா நடனமாடி இருக்கிறார். தெலுங்கு துறையில் சில படங்களில் மட்டுமே அவர் நடித்திருக்கிறார். ரொமான்டிக், ரங்கா ரங்கா வைபவங்கா, ப்ரோ ஆகிய படங்களில் மட்டும் அவர் நடித்திருக்கிறார். அதில் ப்ரோ மட்டுமே ஓரளவுக்கு வசூல் ஈட்டியது. அதுமட்டுமில்லாமல் மாடலிங் துறையிலும் கலக்கி வரும் அவர் அடிப்படையில் ஒரு நீச்சல் வீராங்கனை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications