Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

லீவு நாளில் வேலை பார்க்க முடியாதுங்க! ஸ்ட்ரிக்ட்டாக சொன்ன ஊழியர்.. மேனேஜர் பதில் அல்டிமேட் சர்ப்ரைஸ்

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: யுகாதி பண்டிகைக்காக விடுமுறை எடுத்த ஊழியரை அவசரமாக பணிக்கு அழைத்த மேனேஜரை வாட்ஸ்அப் சாட்டிலேயே அவர் விரட்டிவிட்டது சாட் தொடர்பான ஸ்கீரின்ஷாட் ஒன்று தற்போது இணையதளத்தில் வேகமாக பரவி வரும் நிலையில் அதற்கு நெட்டிசன்கள் பலரும் தங்களின் அனுபவங்களை பகிர்ந்து வருவதோடு, ஊழியருக்கு சபாஷ் போட்டு வருகின்றனர்.

தற்போதைய நவநாகரீக காலத்தில் கல்லூரி படிப்பை முடித்த அனைவரும் கைநிறைய சம்பளம் கிடைக்கும் பணியை பெற விரும்புகின்றனர். அந்த வகையில் பலரும் கார்ப்பரேட் துறைகளில் அடியெடுத்து வைக்கின்றனர்.

பெரும்பாலும் சாதாரண நிறுவனங்களை காட்டிலும் கார்ப்பரேட் நிறுவனங்களில் சம்பளம் அதிகம் என்பதாலும் படித்து முடித்தவர்களின் முதல் தேர்வு என்பது அதுவாக தான் உள்ளது.

விடுப்பு இன்றி பணி

விடுப்பு இன்றி பணி

இந்நிலையில் தான் சில கார்ப்பரேட் நிறுவனங்களில் பணி செய்பவர்கள் அதிக வேலைப்பளுவை எதிர்கொள்கின்றனர். இதனால் தங்களின் தனிப்பட்ட வாழ்க்கை, குடும்பத்தை மறந்து நிறுவனங்களுக்காக பணியாற்றும் சூழலுக்கு தள்ளப்படுகின்றனர். இவ்வாறு பணி செய்பவர்கள் தங்களின் வீக்ஆப் தினங்களை மறந்து பண்டிகை உள்பட வீட்டு சுபநிகழ்ச்சிகளில் பங்கேற்க கூட விடுப்பு இன்றி பணி செய்யும் சூழலையும் சந்திக்கின்றனர்.

 ஸ்கீரின் ஷாட்

ஸ்கீரின் ஷாட்

அதேசமயத்தில் சிலபேர் வேலை செய்கிறார்களோ இல்லையோ வீக்ஆப் தினங்கள் மற்றும் அனைத்து பண்டிகை தினங்களிலும் விடுப்பு எடுப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இந்நிலையில் தான் நிறுவனத்தில்விடுமுறை எடுத்த ஊழியரை, மேனேஜர் வாட்ஸ்அப்பில் தொடர்பு கொண்டு பணி செய்ய கூறிய நிலையில் அந்த ஊழியர் சாமர்த்தியமாக பதிலளித்து தப்பித்துள்ளார். அவர் எப்படி தப்பித்தார்? என்பது தொடர்பாக அந்த உரையாடலின் ஸ்கீரின் ஷாட்டை சமூகவலைதளங்களில் பகிர்ந்துள்ளார். அதன் விபரம் வருமாறு:

உதவி கேட்ட மேனேஜர்

உதவி கேட்ட மேனேஜர்

ரகு என்பவர் கார்ப்பரேட் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் யுகாதி பண்டிகைக்காக விடுமுறை எடுத்திருந்தார். இந்த வேளையில் தான் அவரது மேனேஜர், ரகுவை வாட்ஸ்அப்பில் தொடர்பு கொண்டார். அதன்படி மேனேஜர், ‛‛ஹாய், குட்மார்னிங், இன்று வேலை செய்கிறீர்களா? உங்களிடம் இருந்து உதவி வேண்டும்'' என மெசேஜ் அனுப்பினார். அதனை பார்த்த ரகு, ‛‛ஹை, நோ, நான் இன்று பணி செய்யவில்லை'' என பதில் அனுப்பினார். அதற்கு மேனேஜர், ‛‛உதவி தேவைப்படுகிறதே'' என அனுப்ப அதற்கு ரகு, ‛‛நான் நாளை வேலை செய்கிறேன்'' என்கிறார்.

ஒருமணிநேரம் தான்..

ஒருமணிநேரம் தான்..

இருப்பினும் விடாத மேனேஜர், ‛‛ஒரு மணிநேரம் மட்டும் உதவினால் போதும். பணியை முடித்து விடலாம். உங்களின் சூழ்நிலை என்னவென்று என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் கிளைன்ட் இன்றே கேட்கிறாரே'' என அனுப்பினார். இதற்கு ரகு, ‛‛நாம் நாளை முதல் பாதியில் இந்த பணியை செய்வோம். இன்று நிச்சயமாக இல்லை'' என அனுப்பினார்.

விட்டு சென்ற மேனேஜர்

விட்டு சென்ற மேனேஜர்


இதனால் சோர்வடைந்த மேனேஜர் ‛‛ஒகே நன்றி.. கிளைன்டிடிம் பேசுகிறேன்'' என கூறிவிட்டு சென்றார். இந்நிலையில் தான் மேனேஜர் உடனான வாட்ஸ்அப் உரையாடல் சாட் தொடர்பான ஸ்கீரின்ஷாட்டை ரகு தனது ட்விட்டர் வலைதளத்தில் பதிவு செய்தார். அதில், ‛‛விடுமுறை தினத்தில் வேலை செய்யமாட்டேன் என கூறவே நான் 5 ஆண்டுகள் எடுத்து கொண்டேன். என்னை போல் இல்லாமல் இருக்க வாழ்த்துகள். ஹேப்பி யுகாதி'' என தெரிவித்துள்ளார்.

நெட்டிசன்கள் கருத்து

நெட்டிசன்கள் கருத்து

ரகுவின் இந்த பதிவு தற்போது இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது. இதனை பார்த்த பலரும் தங்களின் அனுபவங்களை பகிர்ந்து வருகின்றனர். அதன்படி வாட்ஸ்அப் பயன்படுத்துவதை முதலில் நிறுத்த வேண்டும் என சந்தோஷ் என்பவர் குறிப்பிட்டுள்ளார். சேகர் பண்டாரு என்பவர், ‛‛எனது குழுவினர் விடுமுறையில் இருக்கும்போது கிளைன்ட்ஸ் பேசினால் நாளை பார்த்து பணியை முடித்து தருவதாக கூறுவேன். நான் அவர்களின் விடுமுறை உலகத்தில் நுழைய விரும்புவது இல்லை'' என கூறியுள்ளார். இன்னும் சிலர், எங்கள் நிறுவனத்திலும் இதேபோன்ற தொல்லை தான் உள்ளது. இதற்கு ஒரு சட்டத்தை இயற்ற வேண்டும் என வேடிக்கையாக கூறியுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+