ரோஜா முகத்தில் அவ்வளவு குஷி! நீங்களும் வாங்க.. தயங்கிய ஜெகன்! வியந்து பார்த்த மோடி! சுவாரசிய சம்பவம்

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: பிரதமர் மோடி ஆந்திர பிரதேசம் சென்றுள்ள நிலையில், அமைச்சர் ரோஜா இன்று மேடையில் செல்பி எடுத்த சம்பவம் வைரலாகி வருகிறது.

Recommended Video

    YSRCP Minister Roja Selvamani Selfie witth PM Modi and Andhra CM Jagan Mohan Reddy - Video

    பிரதமர் மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக ஆந்திர பிரதேசம் சென்றுள்ளார். ஆந்திர பிரதேசத்தில் சுதந்திர போராட்ட வீரர் அல்லூரி சீதாராம ராஜுவின் சிலையை இன்று பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

    அவரின் 30 அடி உயர வெண்கல சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

    ஆந்திர பிரதேசம்

    ஆந்திர பிரதேசம்

    ஆந்திராவின் முக்கியமான சுதந்திர போராட்ட வீரர்களின் அல்லூரி சீதாராம ராஜு முக்கியமானவர் ஆவர். இவரின் 125வது பிறந்தநாளை முன்னிட்டு அரசு சார்பாக அவரின் சிலை பீமவரத்தில் உள்ள ஏஎஸ்ஆர் நகரில் திறந்து வைக்கப்பட்டது. தற்போது இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் கொண்டாட்டம் நடக்கும் நிலையில், அவரின் சிலை அரசு சார்பாக அங்கு திறக்கப்பட்டது.

    மோடி

    மோடி

    இந்த நிகழ்வு மற்றும் இன்னும் சில நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி ஆந்திர பிரதேசம் வந்து இருந்தார். மேடையில் பேசிய பிரதமர் மோடி அல்லூரி சீதாராம ராஜுவின் சுதந்திர போராட்டங்களை பற்றி நெகிழ்ச்சியாக பாராட்டி பேசினார். அதோடு தமிழில் அவர் பேசுவது போலவே.. தெலுங்கில் சில வார்த்தைகளை பேசி.. அம்மாநில மக்களுக்கு வணக்கமும், நன்றியும் தெரிவித்தார். இந்த நிகழ்வில் மேடையில் முதல்வர் ஜெகன், அமைச்சர் ரோஜா உள்ளிட்ட பலர் இருந்தனர்.

    ரோஜா

    ரோஜா

    அப்போது அமைச்சர் ரோஜா பிரதமர் மோடி அருகே சென்று அவரிடம் செல்பி எடுக்க கேட்டார். இதற்கு மோடி ஒப்புக்கொண்டார். அப்போது முதல்வர் ஜெகன் பின்னால் ஓரம்கட்டப்பட்டது போல நின்றார். உடனே ரோஜா.. சட்டென முதல்வரை அழைத்து போட்டோவில் நிற்க சொன்னார். அவரும் அருகில் வந்து நின்றதும் ரோஜா முகம் முழுக்க சந்தோசத்தோடு செல்பி எடுத்தார். ஆனால் இந்த செல்பி சரியாக வரவில்லை போல.

     வீடியோ

    வீடியோ

    இதனால் நகர்ந்து சென்ற மோடி அருகே அப்படியே ஜம்ப் செய்து சென்று இன்னொரு செல்பி எடுக்க முயன்றார். இதை கவனித்த மோடி.. மீண்டும் சரியாக நின்று ரோஜாவின் செல்பிக்கு போஸ் கொடுத்தார். ரோஜா அமைச்சராக இருந்தாலும்.. இப்படி இயல்பாக நடந்து கொண்டதை பிரதமர் மோடி வியப்புடன் பார்த்தார். ஜெகன் மோகனும் இந்த நிகழ்வை வியப்புடன் பார்த்தார். ஆனால் ரோஜாவோ அதை எல்லாம் பற்றி யோசிக்காமல் செல்பி கிடைத்த சந்தோஷத்தில் முகம் முழுக்க குஷியோடு காணப்பட்டார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+