பட்டம் கொடுக்க வரும்.. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி! வரவே வேண்டாம்.. மாணவர்கள் கடும் எதிர்ப்பு

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: ஹைதராபாத் நல்சார் (NALSAR) சட்டப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் வருகை தர இருந்தார். இவரது வருகைக்கு மாணவர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர்.

ஏற்கெனவே, கரப்பான் பூச்சிகள் என்று இளைஞர்கள் குறித்து சூர்ய காந்த் பேசியிருந்தது தேசிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இவரது பேச்சுக்கு பிறகுதான் 'கரப்பான் பூச்சி ஜனதா கட்சி' என்கிற அமைப்பே உருவானது. இந்த அமைப்பை சேர்ந்தவர்கள் நடத்திய போராட்டம் மத்திய அரசை ஒரு வழி செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கையில், சூர்ய காந்த் வருகைக்கு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர்.

CJI Surya Kant

பட்டமளிப்பு விழா

2026ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவுக்கு, சூர்ய காந்த்தை அழைக்க நல்சார் பல்கலைக்கழக நிர்வாகம் முடிவெடுத்திருந்தது. இந்த முடிவுக்குதான் மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர். 2026ம் ஆண்டு வெளியேற இருக்கும் பேட்சை சேர்ந்த மாணவர்கள் 450 பேர் சேர்ந்து, பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு கடிதத்தை எழுதியிருக்கின்றனர்.

மாணவர்கள் கடிதம்

அந்த கடிதத்தில், சமீப காலமாக நீதித்துறையில் நடக்கும் சில நிகழ்வுகள் மற்றும் சூர்ய காந்தின் கருத்துக்கள் தங்களுக்கு அதிருப்தி அளிப்பதாக கூறியிருக்கின்றனர். குறிப்பாக கடந்த ஜூலை 20ம் தேதி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது. இது குறித்து விசாரிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின்போது சூர்ய காந்த் தெரிவித்த கருத்துக்கள், நடந்துக்கொண்ட விதம் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது என மாணவர்கள் கூறியுள்ளனர்.

தலைமை நீதிபதியின் கருத்து

மாணவர்கள் தாக்கப்பட்டது குறித்து வழக்கறிஞர்கள் வீடியோ ஆதாரத்தை சமர்ப்பிக்க முயன்றபோது, வீடியோக்களை பார்க்க ஆர்வம் இல்லை என்று தலைமை நீதிபதி சூர்ய காந்தி கூறியதை, மாணவர்கள் தங்கள் கடிதங்களில் சுட்டிக்காட்டியிருக்கின்றனர். இளைஞர்களை கரப்பான்பூச்சிகளுடன் தலைமை நீதிபதி ஒப்பிட்டு பேசியதாகவும் அக்கடித்தில் மாணவர்கள் கூறியிருக்கின்றனர்.

மாணவர்களின் உணர்வுகள்

எல்லாவற்றையும் விட, சட்ட பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா என்பது அரசியலமைப்பு உரிமைகள், நீதி கிடைப்பதற்கான வழிமுறைகள் மற்றும் மாணவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்கும் வகையில் இருக்க வேண்டும். ஆனால், தலைமை நீதிபதியின் சமீபத்திய செயல்பாடுகள் இதற்கு முரணாக இருப்பதாக மாணவர்கள் கூறியிருக்கின்றனர்.

இந்த விவகாரம் குறித்து பல்கலைக்கழகம் இன்னும் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. நல்சார் பல்கலைக்கழகத்தில் இந்திய தலைமை நீதிபதி பட்டமளித்து பேசுவது என்பது நீண்ட கால மரபு என்று பல்கலைக்கழக நிர்வாகிகள் கூறுகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+