யாரோ ஏ.ஆர். ரஹ்மான்னு ஒருத்தர் ஆஸ்கர் வாங்கியிருக்காரே!.. அவர் யாரு?.. பாலகிருஷ்ணா திமிர் பேச்சு!
ஹைதராபாத்: ஆஸ்கர் நாயகன் இசைப்புயல் ஏ. ஆர். ரஹ்மான் யார் என்றே தனக்குத் தெரியாது என தெலுங்கு திரைப்பட நடிகரான பாலகிருஷ்ணா தெரிவித்துள்ளார்.
Recommended Video
தெலுங்கு திரையுலகில் சூப்பர்ஸ்டாராக கருதப்படுபவர் நந்தமூரி பாலகிருஷ்ணா. என்டி ராமாராவின் மகனான பாலகிருஷ்ணாவுக்கு தமிழிலும் ரசிகர்கள் இருக்கிறார்கள்.
இவர் அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்குவது வழக்கம். அந்த வகையில் தற்போதும் அவர் தெலுங்கு ஊடகத்திற்கு அவர் அளித்த பேட்டியில் ஏ ஆர் ரஹ்மானை இழிவுப்படுத்தி பேசியுள்ளார்.

பாலகிருஷ்ணா
ஏ.ஆர்.ரஹ்மான் குறித்து கேள்வி எழுப்பிய போது பாலகிருஷ்ணா கூறுகையில், விருதுகள் எப்போதும் என் கால் தூசிக்கு சமம். யாரோ ரஹ்மான் என்பவர் ஆஸ்கர் வாங்கியிருக்காராமே. அவர் யாரென்றே எனக்கு தெரியாது. பாரத ரத்னா போன்ற விருதுகள் என் தந்தை என்டிஆரின் துண்டுவிரலுக்கு சமம்.

பாடல்கள்
அவர் ஒரு முறை ஆஸ்கர் விருது வாங்கியதெல்லாம் பெரிய விஷயமல்ல. 10 ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் அவரது பாடல்கள் ஹிட் அடிக்கின்றன. எந்த ஒரு உயரிய விருதும் எனது குடும்பம் தெலுங்கு திரையுலகிற்கு செய்த நன்மைகளுக்கு ஈடாகாது.

உயரிய விருது
அதனால் எங்கள் குடும்பத்து முன் இந்த விருதுகள் தான் வெட்கப்பட வேண்டும் என பாலகிருஷ்ணா தெரிவித்துள்ளார். ஏ. ஆர் ரஹ்மான் மட்டுமல்லாமல் மறைந்த நடிகை ஸ்ரீதேவி, ஹாலிவுட் படத் தயாரிப்பாளர் ஜேம்ஸ் கேமரான் ஆகியோரையும் அவர் விமர்சித்துள்ளார்.
|
விமர்சனம்
"மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்ததே எனது தந்தை என்டிஆர்தான். படங்களை எப்போதும் விரைவாக எடுக்க வேண்டும். நான் படங்களை மிகவும் வேகமாக எடுப்பேன். ஹாலிவுட் படத் தயாரிப்பாளர் ஜேம்ஸ் கேமரான் போல் ஒரு படத்தை எடுக்க 12 ஆண்டுகளை எடுத்துக் கொள்ள மாட்டேன். என்னால் ஒரே நேரத்தில் 3 படங்களில் கூட நடிக்க திறமை இருக்கிறது" என பாலகிருஷ்ணா விமர்சித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications