OTT : தமிழ் சினிமாவையே ஆடிப்போக வைத்த நெட்பிளிக்ஸ் முடிவு.. தயாரிப்பாளர்கள், நடிகர்களுக்கு ட்விஸ்ட்
ஹைதராபாத்: தென்னிந்திய திரைப்படங்களை அதிக விலைக்கு வாங்கி தங்கள் பணத்தை வீணாக்க வேண்டாம் என்று நெட்பிளிக்ஸ் முடிவு செய்துள்ளது. அதற்கு பதிலாக, நெட்பிளிக்ஸ் இங்கு தென்னிந்தியாவில் பல வெப் சீரியஸ் மற்றும் நெட்பிளிக்ஸ் ஒரிஜினல் என்ற பெயரில் ஓடிடிக்கு என்றே உள்ள வாசகர்களை கவரும் வகையில் படங்களைத் தயாரிக்கப் போகிறார்கள். ஹைதராபாத்தில் உள்ள அவர்களின் புதிய அலுவலகம், தென்னிந்தியாவில் நல்ல கதை அம்சம் உள்ள படங்களை தேர்வு செய்ய போகிறதாம். இந்த முடிவு பல தமிழ் தயாரிப்பாளர்களையும், நடிகர்களையும் ஆடிப்போக வைத்துள்ளது.
நெட்பிளிக்ஸ், அமேசான், ஜியோ ஹாட்ஸ்டார், ஜி5, சோனி லைவ், டெண்ட் கொட்டாய் போன்ற பல்வேறு ஓடிடி தளங்கள் சொந்தமாக வெப் சீரிஸ், படங்கள், தயாரிக்க தொடங்கிவிட்டன. நல்ல கதை அம்சம் உள்ள வெப் சீரியஸ், படங்களை மக்கள் ஓடிடியில் பார்க்க அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். விளம்பரமே இல்லாமலேயே சோசியல் மீடியா விமர்சனங்களால் ஓடிடியில் உள்ள படங்கள் மற்றும் வெப் சீரிஸ் களுக்கு மதிப்பு அதிகரித்து வருகிறது.

ஸ்மார்ட் டிவி அதிகரிப்பு
இந்தியாவில் பலரும் தற்போது ஸ்மார்ட் டிவி வாங்கி வருவதால், ஓடிடி சப்ஸ்கிரிப்சன் அதிகரித்து வருகிறது. வரும் காலத்தில் எல்லாருமே ஸ்மார்ட் டிவி வாங்குவதற்கு வாய்ப்பு உள்ளது. 130 கோடிக்கும் அதிகமான மக்கள் உள்ள இந்தியாவில், ஓடிடிக்கள் தான் உலகம் என்கிற நிலையும் வரப்போகிறது. ஓடிடிக்கள் தான் சினிமாக்கள், சீரியல்கள், வெப் சீரிஸ்கள் எடுக்கும் என்கிற நிலை வரப்போகிறது. ஏனெனில் நிலைமை அப்படித்தான் மாறி வருகிறது. தியேட்டர்களில் பார்த்த பலர், அங்கு உள்ள டிக்கெட் கட்டணம் மற்றும் செலவுகள் மற்றும் அலைச்சலை கருத்தில் கொண்டு ஓடிடியில் பார்க்க அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்.
தியேட்டர்கள் நிலை பாவம்
எனவே வரும் காலத்தை சரியாக கணித்தே ஓடிடி நிறுவனங்கள் தற்போது களம் இறங்கி உள்ளன. தற்போதைய நிலையில் ஒரு வாரம் தாண்டி ஒரு படம் ஓடுவதே அபூர்வம் என்கிற நிலை ஏற்பட்டுள்ளது. பல தியேட்டர்கள் இரண்டாவது நாளே காத்து வாங்குகின்றன. இதற்கு ஓடிடிக்கள் காரணமாக உள்ளன. அதேநேரம் ஒடிடிக்களால் திரைப்பட தயாரிப்பாளர்கள் ஓரளவு பாதுகாப்பும் பெறுகிறார்கள்..
ஓடிடிக்களில் லாபம்
எப்படி என்றால், கொரோனா காலகட்டத்தில் தியேட்டர்களில் படம் ஓடாத நிலையில், ஓடிடிக்களில் ரிலீஸ் ஆகின. அப்போது போட்ட முதலையும், நல்ல லாபத்தையும் படங்கள் எடுத்தன. அதன்பிறகு ஓடிடிக்களில் படங்களை விற்பது என்பது நல்ல வருமானம் தரும் விஷயமாக மாறியது. இன்றும் பெரிய நடிகர்களின் படங்களை தாண்டி, சிறிய மற்றும் நடுத்தர பட்ஜெட் படங்களுக்கு ஓடிடிக்கள் தான் மிகப்பெரிய வாய்ப்பை வழங்கி வருகின்றன.
நெட்பிளிக்ஸ் முடிவு
இந்நிலையில் ஓடிக்கள் படங்களை வாங்குவதில் அண்மைக்காலத்தில் பல கட்டுப்பாடுகளை விதிக்க தொடங்கி உள்ளன. இந்நிலையில் தென்னிந்திய திரைப்படங்களை அதிக விலைக்கு வாங்கி தங்கள் பணத்தை வீணாக்க வேண்டாம் என்று நெட்பிளிக்ஸ் முடிவு செய்துள்ளது. அதற்கு பதிலாக, நெட்பிளிக்ஸ் இங்கு தென்னிந்தியாவில் பல வெப் சீரியஸ் மற்றும் நெட்பிளிக்ஸ் ஒரிஜினல் என்ற பெயரில் ஓடிடிக்கு என்றே உள்ள வாசகர்களை கவரும் வகையில் படங்களைத் தயாரிக்கப் போகிறார்கள். ஹைதராபாத்தில் உள்ள அவர்களின் புதிய அலுவலகம், தென்னிந்தியாவில் நல்ல கதை அம்சம் உள்ள படங்களை தேர்வு செய்ய போகிறதாம்.
டிவி ரைட்ஸ் ஏற்கனவே காலி
இந்த முடிவு பல தமிழ் தயாரிப்பாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் நெட்பிளிக்ஸ மற்ற OTT நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது பிரீமியம் விலையை வழங்குகிறது. இந்த சூழ்நிலை தயாரிப்பாளர்கள் பெரிய படங்களை வாங்குவதைத் தவிர்க்கத் தள்ளும் அல்லது நட்சத்திரங்கள் தங்கள் சம்பளத்தைக் குறைக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பார்கள். ஏற்கனவே செயற்கைகோள் டிவி ரைட்ஸ் சந்தை வெகுவாக சரிந்துவிட்டது, பல பெரிய படங்கள் விற்கப்படாமல் இருக்கின்றன.இப்படியான நிலையில் நெட்பிளிக்ஸ் எடுத்த முடிவு, தமிழ், தெலுங்கு உள்பட தென்னிந்திய சினிமா வட்டாரத்தை அதிர வைத்துள்ளது.
இந்தி படங்களால் லாபம்
ஏன் தென்னிந்திய படங்களை மட்டும் வாங்குவதற்கு பதில், அப்படி என்றால் இந்தி படங்களை வாங்குவார்களா என்ற கேள்விக்கு.. ஆம்.. தொடர்ந்து இந்தி படங்களை நெட்பிளிக்ஸ் வாங்க போகிறதாம். அந்த படங்களால் நெட் பிளிக்ஸ் நல்ல லாபத்தை சந்தித்து வருவதால், பாலிவுட் படங்களை வாங்க ஆர்வம் காட்டுகிறது. அதுமட்டுமின்றி, இந்தி சந்தை மிகப்பெரியது. பல மாநிலங்களில் ரசிகர்கள் பார்க்கிறார்கள். இதுவும் காரணமாக இருக்கிறது. தென்னிந்திய சினிமாவை பொறுத்தவரை நல்ல கதையம்சம், மக்களுக்கு விருப்பமானதாக இருந்தால் தான் தென்னிந்தியா முழுவதும் மொழிமாற்றம் செய்து ஓடிடியில் வெளியிட முடியும். இந்தியிலும் கையோடு வெளியிட முடியும் என்பதால், இந்த முடிவினை நெட்பிளிக்ஸ் எடுத்துள்ளதாம்.
சரி, நெட்பிளிக்ஸ் முடிவினால் என்னாகும்
நெட்பிளிக்ஸ் நிறுவனமே படங்கள் வெப் சீரியஸ் மற்றும் சீரியல்களை தயாரிக்கும்போது, வெளியில் இருந்து படங்களை வாங்குவதில் அதிகக் கட்டுப்பாடுகளை விதிக்க வாய்ப்பு உள்ளது. இதனால் வெளியிலிருந்து வரும் படங்களை மிக குறைந்த விலைக்கு தான் வாங்குவேன் என்று அறிவிக்கும். அதேபோல் விளம்பரங்கள் அடிப்படையில் பணம் தருவதாக கூட நிபந்தனை விதிக்க வாய்ப்பு உள்ளது. நெட்பிளிக்ஸ் மட்டுமல்ல அனைத்து ஓடிடிக்களுமே இந்த முடிவினை எடுக்க வாய்ப்பு உள்ளதால், நடிகர், நடிகைகள், இயக்குனர்களுக்கு கோடிகளில் வரும் சம்பளம் அப்படியே பன்மடங்கு குறைந்துவிட வாய்ப்பு உள்ளது.
திறமையானவர்களுக்கு வாய்ப்பு
வெப் சீரிஸ் மற்றும் OTT-க்கான திரைப்படங்கள் மற்றும் வெப் சீரியஸ், சீரியல்கள் தயாரிக்க நெட்பிளிக்ஸ் உள்ளிட்ட ஒடிடி தளங்கள் தொடங்கிவிட்டதால், இனி புதிய நடிகர்களுக்கு, துணை நடிகர்கள், புதிய முகங்கள், மற்றும் OTT-க்கு ஏற்ற வித்தியாசமான கதாபாத்திரங்களுக்கு வாய்ப்புகள் அதிகரிக்கும். அதேபோல் ஒடிடியை பொறுத்தவரை சற்று இயல்பான படங்களே மக்களை கவருவதால், மாஸ் ஹீரோயிசதிற்கு பதில் எதார்த்தமான கதைகளுக்கு வாய்ப்பு அதிகமாகும்.
தமிழ் சினிமாவில் இனி என்ன நடக்கும்
அதேநேரம் இந்த முடிவு தமிழ் சினிமாவை உலுக்கி உள்ளது. இதனால் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கங்கள், நடிகர்கள் நேரடியாக OTT கள் தயாரிக்கும் (தியேட்டர் ரிலீஸ் இல்லாமல்) நடிப்பதற்கு ஒத்துழைப்பு அளிக்கக் கூடாது என்று தீர்மானங்களை நிறைவேற்றி இருக்கின்றன. கிட்டத்தட்ட ஓடிடி vs தியேட்டர்கள் vs தயாரிப்பாளர்கள் என மூன்று பேர் சினிமா சந்தையில் போராடுகிறார்கள். இதில் தியேட்டர்கள் தான் அதிகம் பாதிக்கப்பட போகின்றன. தயாரிப்பாளர்களும் பெரும் லாபம் சம்பாதிக்கும் நிலை இனி வராமல் போகும் வாய்ப்பு உள்ளது. அதேபோல் நடிகர்களின் சம்பளமும் வெகுவாக குறைந்துவிடும்.
-
விஜய் எனக்காக செய்ததை மறக்க முடியாது! அதுவும் அந்த நேரத்தில்.. உருக்கமாக பேசிய சத்யராஜ் -
மோசமான ப்ரொபோசல்.. மிஸ் ஆன விஜய் படம்.. தலையெழுத்து படி தான் நடக்கும்.. நடிகர் அப்பாஸ் உருக்கம் -
இந்தியன் பாகிஸ்தானில் உளவாளியானால் ஹீரோ.. அவங்க இங்க வந்தா தீவிரவாதியா? துரந்தர் பற்றி அமீர் சர்ச்சை பேச்சு -
பட விழாவில் ஜனநாயகன் மற்றும் துரந்தர் படத்தை விமர்சித்த வெற்றிமாறன்.. இவ்வளவு ஓபனா பேசிட்டாரே! -
Happy Raj Review: ஹேப்பி ராஜ் கதை இதுதான்.. ஆனால் இப்படி பண்ணலாமா? ப்ளூ சட்டை மாறன் ஓபன் ரிவ்யூ -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு!












Click it and Unblock the Notifications