அடுத்தடுத்து மயங்கிய மக்கள்.. விலங்குகளும் பலி.. விசாகப்பட்டினத்தை உலுக்கிய விஷவாயு கசிவு.. வீடியோ!
விசாகப்பட்டினத்தில் ஏற்பட்ட விஷவாயு கசிவு சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஹைதராபாத்: விசாகப்பட்டினத்தில் ஏற்பட்ட விஷவாயு கசிவு சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது.
Recommended Video
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் ரசாயன தொழிற்சாலையில் விஷவாயு கசிவு ஏற்பட்டு மூன்று பேர் பலியான சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அங்கு ஆர்ஆர் வேங்கடபுரம் கிராமத்தில் எல்ஜி பாலிமர் ரசாயன தொழிற்சாலையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
அதிகாலை 3 மணிக்கு விபத்து ஏற்பட்டது. அருகில் இருக்கும் கிராமங்களுக்கு எல்லாம் இந்த விஷவாயு பரவியது. மக்கள் சாலையிலேயே விஷவாயு தாக்கி மயங்கி விழுந்தனர். ஆயிரத்திற்கும் அதிகமானோர் இதனால் மயங்கி விழுந்தனர்.
|
வாயு போராட்டம்
இதனால் சிறுவர்கள் பலரும் மயங்கி விழுந்தனர். அதிகாலை வந்த நச்சு வாயு புகை காரணமாக தூக்கத்தில் இருந்தே பலர் எந்திரிக்காமல் மயங்கி உள்ளனர். இதில் சிலர் உயிருக்கு போராடி வருவதாக கூறப்படுகிறது.இந்த விஷவாயு கசிவுக்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. விபத்து எப்படி ஏற்பட்டது என்றும் தெரியவில்லை. இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.
|
விலங்குகள் பலி
அதேபோல் இந்த தாக்குதலில் வயதானவர்கள்தான் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த விஷவாயு தாக்குதலில் மனிதர்கள் மட்டும் பலியாகவில்லை. விலங்குகளும் அதிக அளவில் பலியாகி உள்ளதுதான் கொடூரம். வெளியே நின்று கொண்டு இருந்த மாடுகள், ஆடுகள், நாய்கள் என்று 20 விலங்குகள் வரை இதில் பலியாகி உள்ளது. விலங்குகளின் உண்மையான பலி எண்ணிக்கை போக போகத்தான் தெரிய வரும் என்று கூறுகிறார்கள்.
|
அரசு அறிவுறுத்தல்
இந்த விஷவாயு தாக்குதல் இன்னும் சில மணி நேரங்களுக்கு நீடிக்கும். இந்த வாயு காற்றில் இருக்க வாய்ப்புள்ளது. அதனால் மக்கள் வீட்டிற்கு உள்ளேயே இருக்க வேண்டும். அவர்கள் வெளியே வர கூடாது. வெளியே வந்தால் நச்சு புகை தாக்க வாய்ப்புள்ளது என்று விசாகப்பட்டினம் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. இதனால் மக்கள் அங்கு அச்சத்திற்கு உள்ளாகி உள்ளனர்.
|
அதிர்ச்சி அளிக்கிறது
இந்த நிலையில் இந்த விஷவாயு கசிவு குறித்து தற்போது வீடியோக்கள் வெளியாகி உள்ளது. மக்கள் மயங்கி விழுந்த வீடியோவும் , அவர்கள் மீட்கப்பட்டு தூக்கி செல்லப்படும் வீடியோவும் வெளியாகி உள்ளது. இந்த வீடியோக்கள் பார்க்கவே பதற வைக்கும் வகையில் இருக்கிறது. பெண்கள், குழந்தைகள் என்று மயங்கி விழுந்து தூக்கி செல்லப்படும் வீடியோக்களை பார்க்கவே அதிர்ச்சி அளிக்கிறது.
-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு?












Click it and Unblock the Notifications