நுபுர் ஷர்மா சொன்ன அதே “வரி”.. மீண்டும் நபிகள் நாயகம் அவமதிப்பு! பாஜக எம்எல்ஏ பேச்சால் போராட்டம்
ஐதராபாத்: நுபுர் ஷர்மா பானியில் நபிகள் நாயகம் மீது அவதூறு கருத்து தெரிவித்ததாக பாஜக எம்.எல்.ஏ. ராஜா சிங்கிற்கு எதிராக ஏராளமான இஸ்லாமியர்கள் நள்ளிரவில் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பிரபல ஸ்டான்ட் அப் காமெடியனாக இருந்து வருபவர் முனவர் ஃபரூக்கி. குஜராத் மாநிலத்தை சேர்ந்த இவர் இந்தியாவிலும், உலக நாடுகளிலும் ஸ்டாண்ட் அப் காமெடி நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார் இவரது நகைச்சுவைகளில் அரசியல் நய்யாண்டி, சமூக அவலம் குறித்து அதிகம் பேசுவார்.
குறிப்பாக மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் செயல்பாடுகள் குறித்தும், திட்டங்கள், புதிய சட்ட மசோதாக்கள் பற்றியும் நகைச்சுவையுடன் கலந்து விமர்சிப்பார் முனவர் ஃபரூக்கி.

முனவர் ஃபரூக்கி
இதன் காரணமாக முனவர் ஃபரூக்கியை கைது செய்ய வேண்டும் என்றும், அவரது நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்கக்கூடாது என்றும் இந்துத்துவ அமைப்புகள் குரல் எழுப்பி வந்தன. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் மத்திய பிரதேசத்தின் இந்தூரில் முனவர் ஃபரூக்கி கைதும் செய்யப்பட்டார். அதன் தொடர்ச்சியாக இந்தியாவில் நடைபெற இருந்த முனவர் ஃபரூக்கியின் நிகழ்ச்சிகள் முன்னறிவிப்பு செய்யப்பட்டு, டிக்கெட்டுகள் விற்கப்பட்ட பின்னர் ரத்து செய்யப்பட்டு வந்தன.

ஐதராபாத் நிகழ்ச்சி
குஜராத்தின் சூரத், வதோதரா, மும்பை, ராய்பூர், கோவா உள்ளிட்ட பல நிகரங்களில் இவரது நிகழ்ச்சிகள் அடுத்தடுத்து ரத்து செய்யப்பட்டனர். பெங்களூருவில் கடந்த ஆண்டு இதுபோல் அவரது நிகழ்ச்சி அறிவிக்கப்பட்டு போலீசார் அனுமதி மறுத்ததால் ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில்தான் முனவர் ஃபரூக்கி இந்துத்துவ அமைப்பினரின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் ஐதராபாத்தில் நடந்த ஸ்டாண்ட் அப் காமெடி நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

இந்துத்துவா எதிர்ப்பு
நேற்று மாலை நிகழ்ச்சி நடைபெற்ற இடத்தில் எதிர்ப்பு தெரிவிப்பதற்காக ஏராளமான இந்துத்துவா அமைப்பினர் திரண்டு நின்று முழக்கங்களை எழுப்பினர். பாதுகாப்பு காரணங்களுக்காக நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் 2,000 க்கும் அதிகமான போலீசார் குவிக்கப்பட்டனர். போலீஸ் பாதுகாப்புக்கு மத்தியில் முனவர் ஃபரூக்கியின் நிகழ்ச்சி நடந்து முடிந்தது. அதில் அவர் அரசியல் குறித்து எதுவும் பேசவில்லை என்று பார்வையாளர்கள் தெரிவித்தனர்.

பாஜக எம்.எல்.ஏ.
இந்த நிலையில் கோஷாமால் தொகுதி பாஜக எம்.எல்.ஏ. ராஜா சிங், முனவர் ஃபரூக்கி மற்றும் அவரது தாயாரை விமர்சித்து ஒரு வீடியோவை வெளியிட்டார். 10 நிமிடங்கள் 27 வினாடிகள் ஓடக்கூடிய அந்த வீடியோவில், பாஜக முன்னாள் செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மாவைபோல் நபிகள் நாயகம் குறித்து ராஜா சிங் அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. வீடியோவின் முடிவில் நான் பேசிய அனைத்தும் நகைச்சுவை என்று அவர் கூறி இருக்கிறார்.

போராட்டம்
பாஜக எம்.எல்.ஏ. ராஜா சிங் பேசிய இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசிய ராஜா சிங்கை கைது செய்ய வலியுறுத்தி இஸ்லாமியர்கள் நேற்றிரவு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஐதராபாத் மாநகர காவல் ஆணையர் அலுவலகம் முன்பாக திரண்ட அவர்கள் முழக்கங்களை எழுப்பியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
-
ஏன் பெட்ரோல் விலை 10 நாளில் ரூ.7 உயர்வு? நஷ்டத்தை சொல்லுவீங்களா? மத்திய அரசை சாடிய மாணிக்கம் தாகூர் -
விஜய் நிகழ்த்திய தமிழ்நாட்டு மாடல்.. கரப்பான் பூச்சி பார்ட்டியால் நிகழ்ந்தால் பாஜகவிற்கு சிக்கல் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
புதுச்சேரியில் அமைச்சர்கள் நியமனம்.. முதல்வர் ரங்கசாமியுடன் கருத்து வேறுபாடு? நமச்சிவாயம் விளக்கம் -
குடிசைகள் இல்லாத நகரமாக மாறும் மும்பை.. 2030 தான் டார்கெட்! ஏக்நாத் ஷிண்டே அறிவிப்பு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு












Click it and Unblock the Notifications