இன்று விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி60.. ஒரே ராக்கெட்டில் 2 விண்கலன்கள்.. சாதிக்கும் இஸ்ரோ
ஹைதராபாத்: ஸ்பேடெக்ஸ் ஏ மற்றும் ஸ்பெடேக்ஸ் பி ஆகிய இரு விண்கலன்கள் பிஎஸ்எல்வி சி 60 ராக்கெட் வாயிலாக இன்று விண்ணில் ஏவப்படுகிறது. கவுண்ட்டவுன் நேற்று தொடங்கிய நிலையில் இன்று இரவு 9.58 மணிக்கு விண்ணில் ஏவப்படுவதாக முதலில் அறிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து விண்வெளியில் டிராபிக் ஜாம் காரணமாக இரண்டு நிமிடங்கள் தாமதமாக 10.00 மணிக்கு விண்ணில் ஏவப்பட உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ விண்வெளித்துறையில் உலகமே வியக்கும் அளவுக்கு பல்வேறு சாதனைகளை செய்து வருகிறது. இந்த நிலையில் தான் இன்று ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-60 ராக்கெட் இன்று இரவு 10.00 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது.

இன்று விண்ணில் ஏவப்படுகிறது
இதற்கான இறுதிக்கட்டப் பணியான 25 மணி நேர 'கவுண்ட்டவுன்' நேற்று இரவு 8.58 மணிக்கு தொடங்கியது. முதலில் இன்று இரவு 9.58 மணிக்கு விண்ணில் ஏவப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் விண்வெளியில் டிராபிக் ஜாம் காரணமாக இரண்டு நிமிடங்கள் தாமதமாக 10.00 மணிக்கு இந்த ராக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது. இதனை இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறினார்.
சோம்நாத் கூறுகையில், ”அதே சுற்று வட்டப்பாதையில் பிற செயற்கைகோள்களின் நெருக்கடி இருக்கிறது. இதன் காரணமாக செய்றகைக்கோள்களை விண்ணில் ஏவும் பணி இரண்டு நிமிடம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது முதல் முறையல்ல.. ஏற்கனவே, இதுபோன்று பலமுறை இப்படி கடைசி நேரத்தில் விண்ணில் ஏவப்படும் நிகழ்வானது ஒத்தி வைக்கப்பட்டு இருக்கிறது.
இஸ்ரோ தலைவர் சோம்நாத்
விண்வெளி டிராபிக் என்று சொல்லப்படும் இதுபோன்ற காரணங்களால் செயற்கைகோள்கள் விண்ணில் ஏவப்படுவது ஒத்திவைக்கப்பட்டுள்ளது” என்று கூறினார். ஸ்டார்லிங்க் நிறுவனத்தின் சேட்டிலைட்கள் இன்று குறுக்கிடுவதை இஸ்ரோ விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இதனாலேயே 2 நிமிட தாமதம் ஏற்பட்டுள்ளது.
இந்த ராக்கெட்டில் 'ஸ்பேடெக்ஸ்-ஏ, ஸ்பேடெக்ஸ்-பி' என தலா 220 கிலோ எடை கொண்ட 2 சிறிய செயற்கைக்கோள்களை இந்த ராக்கெட் சுமந்து செல்கிறது. பூமியில் இருந்து 470 கி.மீ. உயரத்தில் வெவ்வேறு சுற்றுவட்டப் பாதைகளில் 2 செயற்கைக்கோள்களும் நிலைநிறுத்தப்படுகிறது.
4-வது நாடு என்ற பெருமை
வரும் 2035 ஆம் ஆண்டுக்குள் விண்வெளியில் இந்திய ஆய்வு மையத்தையும் நிறுவ திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்கான முன் தயாரிப்பு திட்டமாக 'SpaDeX' எனும் திட்டம் தற்போது செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக பி.எஸ்.எல்.வி. சி 60 ராக்கெட், ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து இன்று விண்ணில் ஏவப்பட உள்ளது.
நிலவை ஆய்வு செய்யவும், ஆய்வு மாதிரிகளுடன் பூமிக்கு திரும்பவும், விண்வெளி ஆய்வு நிலையம் அமைக்கவும், இந்த தொழில்நுட்ப பரிசோதனை உதவும் என்று கூறப்படுகிறது. மேலும் தனித்தனியாக இரு விண்கலங்களை விண்ணில் ஏவி அவற்றை இணையச் செய்வதற்கான சோதனை வெற்றி பெற்றால், இதை சாதித்த 4-வது நாடு என்ற பெருமை இந்தியாவுக்கு கிடைக்கும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications