அல்லு அர்ஜூன் குற்றவாளி தான்.. ‛புஷ்பா 2' கூட்ட நெரிசலில் பெண் பலியான வழக்கில் குற்றப்பத்திரிகை! முழுவிவரம்
ஹைதராபாத்: புஷ்பா 2 திரைப்படத்தின் சிறப்பு காட்சியை பார்க்க நடிகர் அல்லு அர்ஜூன் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சென்றபோது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் பெண் பலியான நிலையில் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அதில் நடிகர் அல்லு அர்ஜூனின் பெயர் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளது.
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அல்லு அர்ஜூன். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 5ம் தேதி புஷ்பா 2 திரைப்படம் வெளியானது. முன்னதாக டிசம்பர் 4ம் தேதி இந்த திரைப்படத்தின் சிறப்பு காட்சி ஹைதராபாத்தில் உள்ள சிக்கடபள்ளியில் அமைந்து இருக்கும் சந்தியா தியேட்டரில் வெளியிடப்பட்டது.

இதனை பார்க்க இரவு 9.30 மணிக்கு அல்லு அர்ஜூன் சென்றார். அப்போது அல்லு அர்ஜூனை பார்க்க ரசிகர்கள் முண்டியடித்தனர். இதனால் திடீரென்று கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 35 வயது நிரம்பிய ரேவதி என்ற பெண் பலியானார். அவரது 13 வயது மகன் ஸ்ரீ படுகாயமடைந்தார். ஸ்ரீ மருத்துவ சிகிச்சையில் இருந்து மீண்டு வந்தார்.
இதுதொடர்பாக ஹைதராபாத் சிக்கடபள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து அல்லு அர்ஜூனை கைது செய்தனர். அதன்பிறகு அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதற்கிடையே தான் கூட்ட நெரிசலில் சிக்கி பெண் பலியான வழக்கு நம்பள்ளியில் உள்ள 9வது கூடுதல் முதன்மை மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்த வழக்கில் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். அதில் மொத்தம் 23 பேரின் பெயர்கள் சேர்க்கப்பட்டு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் அல்லு அர்ஜூனின் பெயரும் அல்லு அர்ஜூனின் பெயரும் இடம்பெற்றுள்ளது. அவரது பெயர் 11வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளது.அதேபோல் சம்பவம் நிகழ்ந்த சந்தியா தியேட்டர் நிர்வாகம் தான் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த குற்றப்பத்திரிகையில் அல்லு அர்ஜூன் மற்றும் புஷ்பா 2 படக்குழுவினர் மீது பரபரப்பான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது. அல்லு அர்ஜூன் தனது தனிப்பட்ட பாதுகாவலர்களுடன் திடீரென தியேட்டருக்கு வந்ததால் தான் ரசிகர்கள் போட்டி போட்டு அவரை பார்க்க முயன்றனர். இது தான் கூட்ட நெரிசலுக்கு முக்கிய காரணமாக அமைந்தது. இந்த துயர சம்பவத்தின் தொடக்கப்புள்ளி அல்லு அர்ஜூனின் வருகை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை ஹைதராபாத் போலீஸ் கமிஷனர் விசி சஜ்ஜனார் உறுதி செய்துள்ளார். இதனால் அல்லு அர்ஜூன் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இனி இந்த குற்றப்பத்திரிகையின் மீது தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்படும். விசாரணையின் முடிவில் தண்டனைகள் அறிவிக்கப்படும். இதனால் இந்த குற்றப்பத்திரிகை என்பது நடிகர் அல்லு அர்ஜூனுக்கு சிக்கலாக பார்க்கப்படுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications