“வெறும் 2% ஓட்டுதான்’’.. இத வச்சுகிட்டு எப்படி தெலங்கானாவில்.. மேடையிலேயே பாஜகவை கலாய்த்த ராகுல்
ஹைதராபாத்: தெலங்கானாவில் இம்மாதம் 30ம் தேதி சட்டப் பேரவை தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில் இன்று தீவிர பிரசாரம் மேற்கொண்டிருந்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, "பாஜகவுக்கு தெலங்கானாவில் வெறும் 2% வாக்குகள்தான் கிடைக்கும்" என விமர்சித்துள்ளார்.
தெலங்கானாவில் மொத்தம் 119 சட்டமன்ற தொகுதிகள் இருக்கின்றன. இங்கு பாரத் ராஷ்டிர சமிதி கட்சி ஆட்சியில் இருந்து வருகிறது. தேர்தலையொட்டி இந்த கட்சி 115 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது. காங்கிரசும் வேட்பாளர்களை அறிவித்துவிட்டது. ஆனால் பாஜக சார்பில் வேட்பாளர்களை அறிவிப்பதில் தொடர் தாமதம் ஏற்பட்டது. மொத்தமுள்ள 119 தொகுதிகளில் போட்டியிடுவதற்காக இதுவரை 6,000 பேர் விருப்பம் தெரிவித்து விண்ணப்பித்துள்ளதாகவும், இதனை ஷார்ட் லிஸ்ட் செய்வே தாமதம் என்று சொல்லப்பட்டது. இதனையடுத்து வேட்பாளர்களை மூன்று கட்டங்களாக அறிவிக்கப்படும் என கூறிய பாஜக கடந்த 22ம் தேதி 52 பெயர்களை கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது.

தெலங்கானா பாஜகவின் மாநில பொது செயலாளர் பண்டி சஞ்சய், கரீம்நகரில் போட்டியிடுகிறார். பிஆர்எஸ் கட்சியில் இருந்து வெளியேறிய முன்னாள் அமைச்சர் ஈடல ராஜேந்தர் இம்முறை கஜ்வேல் தொகுதியில் சந்திரசேகர ராவுடன் நேரடியாக மோதுகிறார். குறிப்பாக கோஷாமஹால் தொகுதியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட பாஜகஎம்.எல்.ஏ.ராஜாசிங்குக்கு மறுபடியும் இதே தொகுதியில் போட்டியிட கட்சி மேலிடம் சீட் ஒதுக்கியது சலசலப்பை ஏற்படுத்தியது.
இப்படி இருக்கையில் தேர்தல் பிரசாரத்தையும் பாஜக வீரியமாக மேற்கொண்டிருக்கிறது. கடந்த 1ம் தேதி பிரதமர் மோடி தெலங்கானவுக்கு நேரடியாக விசிட் செய்து பிரசாரத்தை தொடங்கினார். இதனையடுத்து கடந்த 27ம் தேதியன்று தலைநகர் ஹைதராபாத்தில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய அமித்ஷா, "தெலுங்கானாவில் சந்திரசேகர ராவ் தனது மகன் கே.டி.ராமா ராவ்வை முதல்வராக நினைக்கிறார். சோனியா அவரது மகன் ராகுலை பிரதமராக நினைக்கிறார். ஆனால் பாஜக வெற்றிபெற்றால் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவரையே முதல்வராக நியமிப்போம்" என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் இவரது கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ராகுல் காந்தி கடும் விமர்சனத்தை முன்வைத்திருக்கிறார். இன்று தெலங்கானாவின் கல்வகுர்த்தியில் நடைபெற்ற தேர்தல் பிரசார பேரணியில் பங்கேற்று பேசிய அவர், "பாஜக தலைவர்கள் தங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகள் குறித்து தம்பட்டம் அடித்துக்கொண்டிருக்கின்றனர். உண்மை என்னவெனில் பாஜகவின் நான்கு டயர்களையும் காங்கிரஸ் இங்கு பஞ்சராக்கியுள்ளது. தெலங்கானாவில் நீங்கள் வெறும் 2% ஓட்டுகளைதான் பெறுவீர்கள். அப்படி இருக்கும்போது உங்களால் எப்படி பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்களை முதல்வராக்க முடியும்?
அதிலும் பிரதமர் மோடி இருக்கிறாரே, அவர் அமெரிக்கா சென்று அங்கு ஓபிசி வகுப்பை சேர்ந்தவரை அதிபராக்குவேன் என்று கூட கூறுவார். இந்த மாநிலத்தில் ஆளும் பிஆர்எஸ் கட்சியும், பாஜகவும் ரகசிய உடன்படிக்கையில் இருக்கின்றன. நாட்டின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பாஜகவுக்கு எதிரான சித்தாந்தம் கொண்ட அரசியல் கட்சியினர் மீது அமலாக்கத்துறை, சிபிஐ ரெய்டு, கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. என் மீது கூட 24 வழக்குகள் இருக்கின்றன. என்னுடைய எம்பி பதவி பறிப்பு, அரசு வீடு பறிப்பு கூட பாஜகவால்தான் நடந்தது" என்று குற்றம்சாட்டினார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications