"சீரஞ்சீவி ரத்தத்தை விற்கிறாரு".. அவதூறு வழக்கில் நடிகர் ராஜசேகருக்கும் ஜீவிதாவுக்கும் ஓராண்டு சிறை
ஹைதராபாத்: நடிகர் அல்லு அர்ஜுன் தந்தை தொடர்ந்த அவதூறு வழக்கில் ராஜசேகர்- ஜீவிதா தம்பதிக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் ராஜசேகர். இவர் நடித்த பெரும்பாலான படங்கள் பிற தென்னிந்திய மொழிகளில் டப் செய்யப்படும். அந்த வகையில் இவர் நடித்த இவன்தான்டா போலீஸ் படத்தை மறக்க முடியாது.

இவர் 38 ஆண்டுகளாக திரைத்துறையில் இருந்து வருகிறார். இவர் தமிழகத்தை சேர்ந்தவர். தேனி மாவட்டத்துக்காரர். தமிழகத்தில் பிறந்தாலும் அவரது தாய் குண்டூரில் போலீஸ் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார்.
இவரது சகோதரர் செல்வாவும் நடிகர்தான். சினிமாவில் நடிப்பதற்கு முன்னர் மருத்துவம் பயின்று சென்னை அமைந்தகரையில் பயிற்சி பெற்றார். ராஜசேகர் தமிழில் ரஜினி, கமலுடன் நடித்த பிரபல நடிகையான ஜீவிதாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர். இவருடைய மூத்த மகள் ஷிவானி 2021 இல் திரைத்துறையில் அறிமுகமானார்.
இவருடைய இளைய மகள் ஷிவாத்மிதா 2019இல் திரைத்துறையில் அறிமுகமாகியுள்ளார். ஜீவிதா மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியத்தின் 9 உறுப்பினர்களில் ஒருவராக உள்ளார். சுமார் 75 படங்களுக்கு மேல் ராஜசேகர் நடித்துள்ளார். அவருடைய படங்களின் பெயர்கள் மிகவும் பிரபலமடைந்தவை.
கணவன் மனைவி இருவருமே தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்துள்ளனர். இந்த நிலையில் நடிகை ஜீவிதா லால் சலாம் படத்தில் ரஜினிக்கு தங்கையாக நடித்து வருகிறார். இந்த நிலையில் 12 ஆண்டுகளுக்கு முன்பு தொடரப்பட்ட அவதூறு வழக்கில் நடிகை ஜீவிதாவுக்கும் அவருடைய கணவர் ராஜசேகருக்கும் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சிரஞ்சீவி நடத்தி வரும் ரத்த வங்கியில் இருந்து ரத்தத்தை விற்பனை செய்வதாக சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தனர் ராஜசேகரும் ஜீவிதாவும். இந்த சம்பவம் பெரும் சர்ச்சையையும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருந்தது. இதையடுத்து நடிகர் அல்லு அர்ஜுனின் தந்தை அல்லு அரவிந்த் கடந்த 2011 ஆம் ஆண்டு ஜீவிதா - ராஜசேகர் தம்பதி மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கின்படி 12 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. அதன்படி ராஜசேகர்- ஜீவிதா தம்பதிக்கு ஓராண்டு சிறையும் ரூ 5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இந்த தண்டனையை நம்பள்ளி 17ஆவது கூடுதல் தலைமை மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் மேல்முறையீடு செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளதால் அபராதத் தொகையை செலுத்திய அவர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications