சிசிக்சை முடிந்து சென்னை திரும்பினார் ரஜினிகாந்த்... ஒரு வாரம் ஓய்வு.. டாக்டர்கள் அறிவுறுத்தல்
சென்னை: ஹைதராபாத் அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த 25ம் தேதி முதல் சிகிச்சை பெற்று வந்த நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையில் இருந்து இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதையடுத்து இன்று மாலை சென்னை திரும்பினார். அவரை ஒரு வாரம் முழு ஓய்வு எடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
Recommended Video

ஹைதராபாத்தில் அண்ணாத்த படப்பிடிப்பில் கலந்து கொண்ட 8 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அந்த படக்குழுவில் இருந்த ரஜினிகாந்த் உள்ளிட்டோருக்கும் நோய் தொற்று குறித்து பரிசோதனை செய்யப்பட்டது.
அப்போது ரஜினிகாந்துக்கு தொற்று பாதிப்பு இல்லை என தெரியவந்தது. எனினும் அவருடைய ரத்த அழுத்தத்தில் மாறுபாடு ஏற்பட்டதை அடுத்து ஹைதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த வெள்ளிக்கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பார்வையாளர்கள்
அவருடைய ரத்த அழுத்தத்தை சீராக்குவதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் முழுமையான ஓய்வில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளார். அவரை பார்க்க பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.

அப்பல்லோ மருத்துவமனை
இந்த நிலையில் ரஜினிகாந்த் எப்போது வீடு திரும்புவார் என்பது குறித்து நேற்று முடிவெடுப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது. ஆனால் ஒரு சில பரிசோதனை முடிவுகள் வராததால் டிஸ்சார்ஜ் அறிவிப்பில் தாமதம் ஆனது. இந்த நிலையில் இன்றைய தினம் அப்பல்லோ மருத்துவமனை ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

ரத்த அழுத்தம்
அந்த அறிக்கையில் கூறுகையில், உயர் ரத்த அழுத்தம் மற்றும் சோர்வால் ரஜினிகாந்த் கடந்த 25-ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் தொடர் மருத்துவக் கண்காணிப்பில் இருந்தார். அவரது ரத்த அழுத்தம் சீரான உள்ளது. அவரது உடல் நிலை மிகவும் நன்றாக இருக்கிறது.

உணவு முறைகள்
அவரது உடல்நிலை முன்னேற்றமடைந்ததை கருத்தில் கொண்டு அவர் இன்று மாலை மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார். அவரது வயது மற்றும் ரத்த அழுத்தத்தை கருத்தில் கொண்டு அவர் பின்பற்ற வேண்டிய உணவு முறைகள் மற்றும் அறிவுரைகள் பின்வருமாறு:

ரத்த அழுத்தம்
1. ஒரு வாரத்திற்கு முழுவதும் ஓய்வில் இருக்க வேண்டும். ஒரு வார காலத்திற்கு தினமும் ரத்த அழுத்தத்தை சோதிக்க வேண்டும்.
2. குறைந்தபட்ச வேலைகள் செய்யலாம், மன அழுத்தம் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கொரோனா பரவலை தடுக்க என்ன மாதிரியான நடைமுறைகளை கடைப்பிடிப்பது குறித்தும் ரஜினிக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
இவ்வாறு அந்த மருத்துவமனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

டிஸ்சார்ஜ்
ஹைதராபாத் அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையின்படி இன்று மாலை ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அவர் ஒரு வாரத்திற்கு முழு ஓய்வு எடுக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளார்கள். இது குறித்த வீடியோ வைரலாகி வருகிறது. இதனிடையே இன்று மாலை விமானம் ரஜினிகாந்த சென்னை திரும்பினார். அவரை ஒரு வாரம் முழு ஓய்வு எடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதால் அவர் கட்சி அறிவிப்பினை டிசம்பர் 31ம்தேதி வெளியிடுவாரா அல்லது தள்ளிப்போகுமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications