ராஷ்மிகா மந்தனா - விஜய் தேவரகொண்டா சொத்து மதிப்பு எவ்வளவு? தலைசுத்துதே.. தனி விமானமே இருக்கு தெரியுமா?
ஹைதராபாத்: தென்னிந்திய திரையுலகில் காதல் ஜோடியாக வலம் வந்த 'நேஷனல் க்ரஸ்' ராஷ்மிகா மந்தனா - விஜய் தேவரகொண்டா ஆகியோர் இன்று திருமணம் செய்து கொண்டனர். ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் தெலுங்கு மற்றும் கொடவா முறைப்படி நடந்துள்ளது. இந்நிலையில் தான் ராஷ்மிகா மந்தனா - விஜய் தேவரகொண்டா ஜோடியின் சொத்து மதிப்புகள் வெளியாகி அனைவரையும் வியக்க வைத்துள்ளது.
கன்னடா, தெலுங்கு, தமிழ் திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றவர் ராஷ்மிகா மந்தனா. அதேபோல் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் தேவரகொண்டா. இவர்கள் 2 பேரையும் சேர்த்து வைத்து தொடர்ந்து கிசுகிசு வெளியாகி வந்தது.

இதையடுத்து சமீபத்தில் ராஷ்மிகா மந்தனா - விஜய் தேவரகொண்டா ஆகியோர் காதலை உறுதி செய்தனர். பிப்ரவரி 26ம் தேதி திருமணம் செய்வதாக அறிவித்தனர். அதன்படி இன்று ராஷ்மிகா மந்தனா - விஜய் தேவரகொண்டா திருமணம் கோலாகலமாக நடந்து முடிந்தது.
ராஷ்மிகா திருமணம்
ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் உள்ள மாளிகையில் இன்று இருவரும் திருமணம் செய்து கொண்டனர். விஜய் தேவரகொண்டா ஆந்திராவை சேர்ந்தவர் என்பதால் முதலில் தெலுங்கு முறைப்படி திருமணம் நடந்தது.
அதேபோல் ராஷ்மிகா மந்தனா கர்நாடகாவின் குடகு மாவட்டம் கொடவா சமுதாயத்தை சேர்ந்தவர். இதனால் மாலையில் கொடவா முறையில் 2வது முறையாக இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
மார்ச் 4 ரிசப்ஷன்
இந்த திருமண விழாவில் குடும்பத்தினர், நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே பங்கேற்றனர். இந்த திருமண விழாவிற்கு "விரோஷ் திருமணம்" என பெயர் வைக்கப்பட்டுள்ளது. மார்ச் 4ம் தேதி ஹைதராபாத்தில் பிரமாண்டமாக ரிசப்ஷன் நடைபெற உள்ளது. அதில் திரை பிரபலங்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்ற வாய்ப்புள்ளது.
வருமானம்
இந்நிலையில் தான் இன்று திருமணம் செய்து கொண்ட ராஷ்மிகா மந்தனா - விஜய் தேவரகொண்டாவின் சொத்து மதிப்புகள் குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகி வருகின்றனர். அதன்படி இருவருக்கும் பல்வேறு வழிகளில் வருமானம் வருகிறது.
திரைப்படங்கள், பிராண்ட் விளம்பரங்கள், சமூக வலைத்தளங்கள், தனி முதலீடுகள் உள்ளிட்டவற்றின் வழியாக ராஷ்மிகா மந்தனா - விஜய் தேவரகொண்டா ஆகியோர் வருமானம் ஈட்டுகின்றனர். இதில் முதலில் நாம் பார்ப்பது ராஷ்மிகா மந்தனாவின் விபரங்கள்.
ராஷ்மிகா சம்பளம்
"நேஷனல் க்ரஷ்" என அறியப்படும் ராஷ்மிகா மந்தனா 1996 ஏப்ரல் 5ம் தேதி கர்நாடகாவின் குடகு மாவட்டம் விராஜ்பேட்டையில் பிறந்தார். முதலில் மாடலிங் துறையில் செயல்பட்டு வந்தார். 2016ல் வெளியான கன்னட திரைப்படமான 'கிரிக் பார்ட்டி' வழியாக திரைத்துறைக்கு என்ட்ரி கொடுத்து பிரபலமானார். விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து நடித்த தெலுங்குப் படமான 'கீதா கோவிந்தம்' பெரிய வெற்றி பெற்றது.
'புஷ்பா, தி ரைஸ்' படத்திற்குப் பிறகு பான்-இந்தியா ஸ்டாராக ரஷ்மிகா உயர்ந்தார். 'அனிமல்', 'குட்பை', 'மிஷன் மஜ்னு', 'சாவா', 'சிக்கந்தர்' போன்ற பல பாலிவுட் படங்களிலும் அவர் நடித்துள்ளார். ஒரு படத்திற்கு 4 கோடி முதல் 8 கோடி வரை ராஷ்மிகா மந்தனம் சம்பளம் பெறுகிறார். 'புஷ்பா 2, தி ரூல்' படத்திற்காக சுமார் 10 கோடி பெற்றதாக தகவல்கள் கூறுகின்றன.
ரூ.66 கோடி சொத்து
ஸ்வராஃப்ச்கி, 7UP, மீஷோ, போட், கல்யாண் ஜுவல்லர்ஸ் போன்ற முக்கிய பிராண்டுகளின் விளம்பரத் தூதராக ராஷ்மிகா உள்ளார்.. 'ப்ளம்' என்ற வீகன் அழகுசாதன பிராண்டில் முதலீடு செய்ததுடன், 'டியர் டைரி பை ராஷ்மிகா மந்தனா' என்ற சொந்த வாசனை திரவிய (சென்ட்) பிராண்டையும் நடத்தி வருகிறார்.
பெங்களூரில் சுமார் 8 கோடி மதிப்புள்ள ஒரு வீட்டை ராஷ்மிகா சொந்தமாக வைத்துள்ளார். ஹைதராபாத், கோவா, மும்பை, கூர்க் ஆகிய பகுதிகளிலும் இவருக்குச் சொத்துகள் உள்ளன. ஆடி க்யூ3, மெர்சிடிஸ்-பென்ஸ் சி-கிளாஸ், ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட், டொயோட்டா இன்னோவா, ஹூண்டாய் க்ரெட்டா ஆகிய கார்களை வைத்துள்ளார். மொத்தமாக பார்த்தால் ராஷ்மிகாவின் சொத்து மதிப்பு ரூ.66 கோடி வரை இருக்கும் என்று செய்திகள் வெளியாகி உள்ளன.
விஜய் தேவரகொண்டா சம்பளம்
அதேபோல் விஜய் தேவரகொண்டாவை எடுத்து கொண்டால் ஃபோர்ப்ஸ் இந்தியாவின் 'பிரபலங்கள் 100' பட்டியலிலும் இடம்பிடித்தவர். தற்போது ஒரு படத்துக்கு ரூ.12 கோடி முதல் ரூ.15 கோடி வரை விஜய் தேவரகொண்டா சம்பளமாக பெறுகிறாராம். இதுதவிர 'ரவுடி' ஸ்ட்ரீட்வேர் பிராண்ட், இ-காமர்ஸ் நிறுவனம் வழியாக ஆண்டுக்கு ரூ.5 கோடி முதல் ரூ8 கோடி வரை வருவாய் ஈட்டுகிறார்.
இளைஞர்களை மையப்படுத்திய 'ரவுடி வியர்' வணிக ரீதியாக வெற்றி பெற்றுள்ளது. பிராண்ட் விளம்பரங்களுக்கு ஒரு ஒப்பந்தத்திற்கு ரூ.1 கோடி முதல் ரூ.2 கோடி வரை வசூலிக்கிறார். ஸ்பான்சர் செய்யப்பட்ட இன்ஸ்டாகிராம் பதிவிற்கு ரூ.40 லட்சம் வரை பெறுவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
கார்கள்
விஜய் தேவரகொண்டாவிற்கு ஹைதராபாத் ஜூபிலி ஹில்ஸில் சுமார் ரூ.15 கோடி மதிப்புள்ள ஒரு சொகுசு பங்களா வைத்துள்ளார். இவர் பிஎம்டபிள்யூ 5 சீரிஸ், வோல்வோ எக்சி90, ஃபோர்டு மஸ்டாங், ரேஞ்ச் ரோவர் உள்ளிட்ட கார்களை வைத்துள்ளார்.
கார்கள் தவிர ரூ.30 கோடி மதிப்பலான தனி விமானத்தையும் வைத்துள்ளார். மொத்தமாக பார்த்தால் விஜய் தேவரகொண்டாவின் சொத்து மதிப்பு ரூ.66 கோடி முதல் ரூ.70 கோடி வரை இருக்கும் என்று செய்திகள் வெளியாகி உள்ளன.
மொத்த சொத்து மதிப்பு
அதன்படி விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனாவின் மொத்த சொத்து மதிப்பு ரூ.130 கோடிக்கு மேல் இருக்கும் என்று செய்திகள் வெளியாகி உள்ளன. இதனால் தற்போது திரையுலகில் வலம் வரும் பணக்கார ஜோடியாக விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனா ஜோடி மாறியுள்ளது.












Click it and Unblock the Notifications