மருமகள் தலை முடியை பிடித்து.. தரதரவென இழுத்து.. தரையில் போட்டு மிதித்து.. அதிர வைத்த மாஜி நீதிபதி
மருமகளை முன்னாள் ஐகோர்ட் நீதிபதி தாக்கும் வீடியோ
Recommended Video
ஹைதராபாத்: மருமகளின் தலைமுடியை பிடித்து.. தரதரவென இழுத்து.. தரையில் போட்டு புரட்டி.. மிதிமிதின்னு மிதிக்கிறார் ஐகோர்ட் முன்னாள் நீதிபதி! இப்படி ஒரு சிசிடிவி காட்சி வெளியாகி மக்களை பதற வைத்து வருகிறது.
சென்னை ஐகோர்ட்டில் நீதிபதியாக இருந்தவர் ராமமோகன ராவ். இவர், ஹைதராபாத் ஐகோர்ட்டிலும் நீதிபதியாக பணியாற்றியவர். இவரது மகன் வஸிஸ்தா. இவருக்கும், சிந்து ஷர்மா என்பவருக்கும் போன 2012-ம் வருஷம் கல்யாணம் ஆனது. 2 குழந்தைகளும் உள்ளனர்.
இந்நிலையில் சிந்து ஷர்மா திடீரென ஒரு புகாரை தெரிவித்தார். கணவர் வீட்டில் அடிக்கடி வரதட்சணை கேட்டு தன்னை கொடுமைப்படுத்துகிறார்கள், சித்ரவதை செய்கிறார்கள் என்று பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்தார்.

சிந்து ஷர்மா
மேலும், கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது ஸ்டேஷனில் ஒரு புகாரும் சிந்து ஷர்மா அளித்திருந்தார். இந்த புகாரின்பேரில் கடந்த ஏப்ரல் மாதம் வழக்குப்பதிவு செய்து போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், சிந்து ஷர்மா தாக்கப்பட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.

மருமகள்
அதில், விசாலமான ஹால் தெரிகிறது. அங்கு சிந்து ஷர்மாவின் கணவர், மாமனார், மாமியார் என எல்லோருமே சரமாரியா நின்று சிந்து ஷர்மாவை கேள்வி கேட்கிறார்கள். ஒரு கட்டத்தில், மருமகளை இழுத்து கீழே தள்ளி சரமாரியாக அடித்து தாக்குகிறார் மாமனார். உடனே மாமியாரும் வந்து, மருமகளை தன் பங்குக்கு வெளுக்கிறார். இதை கணவன் பக்கத்திலேயே நின்று வேடிக்கை பார்த்து கொண்டு நிற்கிறார்.

பிள்ளைகள்
சிறிது நேரத்தில், கணவன், மாமியார், மாமனார் 3 பேருமே சேர்ந்து பெண்ணை தரதரவென இழுத்து கொண்டு போய் வெளியே தள்ளுகிறார்கள்.- இவ்வளவு சித்ரவதை நடக்கும்போது, அங்கே குழந்தைகள் இதை பார்த்து கதறி துடித்து அழுகின்றன. அந்த பிள்ளைகள் கண் முன்னேயே அந்த தாய் பலமாக தாக்கப்படுகிறார்.
|
சிசிடிவி காட்சி
இதில் உச்சக்கட்ட கொடுமை என்னவென்றால், அம்மா அடிவாங்குவதை பொறுக்க முடியாமல், அந்த குழந்தை காலை பிடித்து அழுகிறது.. அப்போதும் அந்த மாமனார் ராமமோகனராவ் மனம் இரங்காமல், மருமகளை அடிப்பதிலேயே குறியாய் இருக்கிறார். இப்படி ஒரு சிசிடிவி காட்சியை கண்டு மக்கள் கொதித்து போய் உள்ளனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications