"இது துபாய் இல்லை.. இந்தியா!" தென்னிந்திய நகரை பார்த்து மிரண்டு போன ரஷ்ய பெண்! வாவ் சூப்பர்ல

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: தென்னிந்திய நகரங்கள் வேற லெவலில் வளர்ந்து வருகிறது. சில பல சிக்கல்கள் இருந்தாலும் அதையும் தாண்டி அசுர வளர்ச்சியை இந்திய நகரங்கள் அடைந்து வருகிறது. இதற்கிடையே இந்தியாவுக்குச் சுற்றுலா வந்திருந்த ரஷ்யப் பெண் ஒருவர், இந்த தென்னிந்திய நகரைப் பார்த்து வியந்து போய்விட்டாராம். இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.

இந்தியர்கள் பலரும் வெளிநாட்டிற்குச் சுற்றுலாவுக்குச் செல்வதைப் போலவே.. வெளிநாட்டினரும் இந்தியாவுக்குச் சுற்றுலா வருவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அப்படி வருவோர், இந்தியாவைப் பார்த்து, குறிப்பாகத் தென்னிந்திய நகரங்களின் வளர்ச்சியைப் பார்த்து மிரண்டு போகிறார்கள். அவர்களின் சமூக வலைத்தளப் பதிவுகளிலேயே இதை நம்மால் பார்க்க முடிகிறது.

Russian Vlogger Praises Hyderabad s World-Class Infrastructure but it had Sparked Debate in Online

மிரண்ட ரஷ்யப் பெண்

அப்படித் தான் தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தைப் பார்த்து ரஷ்யப் பெண் ஒருவர் மிரண்டு போய்விட்டார். ஹைதராபாத்தின் உள்கட்டமைப்பைப் பாராட்டி ரஷ்யப் பெண் வோல்கர் க்ஸினியா வெளியிட்ட வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. ஹைதராபாத் உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்புடன், வானளாவிய கட்டிடங்கள் நிறைந்து இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் இது பார்க்க அப்படியே துபாய் மாதிரி இருப்பதாகவும் அவர் குறிப்பிடுகிறார். இந்த வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வரும் நிலையில், இதுவரை 55 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகள் பெற்றுள்ளது.

ஹடெக் சிட்டி வரலாறு

ஹைதராபாத்தில் மிக முக்கியமான பகுதிகளில் ஒன்று ஹடெக் சிட்டி. ஐடி நிறுவனங்கள் எல்லாமே இந்தப் பகுதியில் தான் இருக்கும். உலகின் பெரு நிறுவனங்கள் முதல் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் வரை அனைத்தும் ஹடெக் சிட்டியில் தான் இருக்கும். ஒருங்கிணைந்த ஆந்திராவாக இருந்தபோது 1997ல் அப்போதைய முதல்வர் சந்திரபாபு நாயுடு இந்தப் பகுதியை ஐடி ஹப்பாக மாற்றவே ஹடெக் சிட்டியை உருவாக்கினார்.

இன்று இது எங்கேயோ போய்விட்டது. ஹைடெக் சிட்டியின் நவீன சூழல், கட்டிடங்கள், ஆடம்பர உணவகங்கள், முறையான பார்க்கிங் கட்டமைப்பு, நடைபாதைகள் என எல்லாமே வேற லெவலில் இருப்பதாக க்ஸினியா தனது வீடியோவில் கூறுகிறார். பெங்களூர் மற்றும் குருகிராமுடன் ஒப்பிடுகையில் ஹைதராபாத்தில் போக்குவரத்து நெரிசல் குறைவாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஹைடெக் சிட்டமியில் ஏற்படுத்தப்பட்ட இந்த திட்டமிடப்பட்ட உள்கட்டமைப்பைக் கண்டு வியப்படைந்ததாகவும் அவர் குறிப்பிடுகிறார்.

நெட்டிசன்கள்

"இது துபாய் அல்ல, ஹைதராபாத்" என்ற தலைப்பில் அவர் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் டிரெண்டாகும் நிலையில், பலவித கமெண்ட்களையும் பார்க்க முடிகிறது. நெட்டிசன் ஒருவர், "உலகெங்கிலும் உள்ள மக்கள் ஹைதராபாத்தைப் பாராட்டுவதைப் பார்க்கும்போது, நான் இங்குப் பிறந்து வளர்ந்ததில் பெருமைப்படுகிறேன்" என்று ஒருவர் பதிவிட்டுள்ளார்.

அதேநேரம் இன்னும் சிலர், "இது முழு ஹைதராபாத் அல்ல, ஒரு பகுதி மட்டுமே.. முழு ஹைதராபாத்தும் இப்படி இருக்கும் என நினைப்பது முற்றிலும் தவறு. ஹைதராபாத்தில் வசிப்பவர்களுக்கு இந்த நகரம் எவ்வளவு ஒழுங்கற்றது என்பது தெரியும்" என்று பதிவிட்டுள்ளார்.. மோசமான வடிகால் இன்னுமே ஹைதராபாத்தின் பிரதானச் சிக்கலாக இருப்பதாகவும் சிலர் குறிப்பிடுகிறார்கள்.

இந்திய நகரங்களின் சிக்கல்

மற்றொரு நபர், "இந்தியாவில் உள்ள நகரங்கள் அனைத்தும் இப்படித்தான் வளர ஆரம்பிக்கின்றன. ஆனால் பிறகு நரகமாக மாறிவிடுகின்றன. அதிகமானோர் வேலைக்காக இடம் பெயர்வதால், சாலைகளில் போக்குவரத்து நெரிசல், நீர் தேக்கம், மோசமான வடிகால் அமைப்பு, உடைந்த சாலைகள் மற்றும் பார்கிங் சிக்கல் என எல்லாம் சேர்ந்துவிடுகிறது" என்று பதிவிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+