என்ன இருந்தாலும் பாகிஸ்தான் மருமகளாச்சே.. சானியா மிர்சா ட்வீட்டை பார்த்தீங்களா!
Recommended Video
ஹைதராபாத்: என்னதான் நம்ம ஊரு பொண்ணா இருந்தாலும், பாகிஸ்தான் நாட்டு மருமகள் சானியா மிர்சா என்பதை மறுக்க முடியாதல்லவா. புகுந்த வீட்டு மீதான பரிவை, பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு ஊக்கம் கொடுக்கும் வகையிலான ட்வீட்டை வெளியிட்டு நிரூபித்துள்ளார் சானியா.
நடப்பு உலக கோப்பையில், தோல்வியே காணாத அணி என்ற பெருமையோடு சுற்றி வந்த நியூசிலாந்தை போட்டு புரட்டி எடுத்து நேற்றைய போட்டியில் பாகிஸ்தான் வென்றுவிட்டது.
பாபர் ஆசம், மற்றும் சொகைல் இருவரது பொறுப்பான பேட்டிங், வலுவான பவுலிங் தாக்குதலை கொண்ட நியூசிலாந்துக்கு எதிராக ஒரு சிறப்பான சேஸிங்கை சாத்தியமாக்கியது.

அரையிறுதிக்கு வாய்ப்பு
இந்த வெற்றியால், அரையிறுதிக்கு பாகிஸ்தான் முன்னேறும் வாய்ப்பு இன்னும் தக்க வைக்கப்பட்டுள்ளது. வரும் ஞாயிற்றுக்கிழமை, இந்தியா, இங்கிலாந்தை எதிர்கொள்ளும் போட்டியில், இந்தியா வெல்ல வேண்டும். அப்போது பாகிஸ்தானின் வாய்ப்பு இன்னும் அதிகரிக்கும். எனவே பாகிஸ்தான் ரசிகர்கள் இந்திய வெற்றிக்காக பிரார்த்தனைகளில் ஈடுபடும் சுவாரசியமும் அரங்கேறி வருகிறது.
|
சானியா மிர்சா பாராட்டு
இது ஒருபுறம் என்றால், இந்திய டென்னிஸ் வீராங்கனையும், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக், மனைவியுமான, சானியா மிர்சா, ட்விட்டரில், பாகிஸ்தான் அணியின் வெற்றியை மனம் திறந்து பாராட்டி மகிழ்ந்துள்ளார். என்ன ஒரு நம்ப முடியாத செம விளையாட்டாக இது இருக்கிறது என்று கூறியுள்ளார் சானியா.
|
கண்டித்த சானியா
முன்னதாக, இந்தியா-பாகிஸ்தான் போட்டி குறித்து டிவி சேனல்கள் ரொம்பவே ஹைப் ஏற்றுவதாக கடிந்து கொண்டார் சானியா. இந்த போட்டிக்கு மார்க்கெட் தேவையில்லை. ஏற்கனவே, போதிய அளவுக்கான கவனத்தை இரு நாடுகள் நடுவேயான கிரிக்கெட் போட்டி பெற்றுள்ளது என்று சானியா வெளியிட்ட ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.

தாய்நாட்டு பெண்
எப்போதெல்லாம், சானியாவின் ஆதரவு எந்த நாட்டுக்கு என கேள்வி வருகிறதோ, அப்போது, தான் தாய்நாட்டுக்கு ஆதரவான பெண் என்று சொல்லி வருகிறார் சானியா. இருந்தாலும், கணவரின் நாடு, கணவர் பங்கேற்றுள்ள அணி ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் இயல்பாகவே ஒரு பூரிப்பு நமது பெண்களுக்கு வந்துவிடுகிறது போலும்!
-
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு!












Click it and Unblock the Notifications