கொங்கு எக்ஸ்பிரஸ் மீது மோதிய மின்சார ரயில்.. கச்சிகுடாவில் நேற்று என்ன நடந்தது? ஷாக்கிங் வீடியோ!
தெலுங்கானா மாநிலம் கச்சிகுடா ரயில் நிலையத்தில் கொங்கு எக்ஸ்பிரஸ் மீது மின்சார ரயில் மோதிய பரபரப்பு வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது.
Recommended Video
ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலம் கச்சிகுடா ரயில் நிலையத்தில் கொங்கு எக்ஸ்பிரஸ் மீது மின்சார ரயில் மோதிய பரபரப்பு வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது.
நேற்று தெலுங்கானாவில் உள்ள கச்சிகுடா ரயில் நிலையத்தில் இந்த விபத்து நடந்தது. தென்னிந்தியாவில் உள்ள மிகவும் முக்கியமான ரயில்நிலையங்களில் கச்சிகுடா ரயில்நிலையம் ஒன்று. திருச்சி ஜங்ஷனுக்கு இணையான வரலாற்றை கச்சிகுடா நிலையம் கொண்டுள்ளது.
கோவையில் இருந்து டெல்லி செல்லும் கொங்கு எக்ஸ்பிரஸ் ரயில் கச்சிகுடா ரயில் நிலையில் 15 நிமிடம் நின்றுவிட்டுதான் செல்லும். அப்போதுதான் அந்த அசம்பாவிதம் நடந்தது.

விபத்து
அங்கு பிளாட் பார்ம் எண் 3ல் கொங்கு விரைவு ரயில் நின்று கொண்டிருந்தது. இந்நிலையில் எதிர் திசையில் தவறுதலாக வந்த புறநகர் மின்சார ரயில், விரைவு ரயில் மீது வேகமாக மோதியது. இரண்டு ரயிலும் இதில் மோசமாக சேதம் அடைந்தது. மின்சார ரயில் தடம் புரண்டது.

மீட்பு பணிகள்
இதையடுத்து துரிதமாக நேற்று மீட்பு பணிகள் நடந்தது. இரண்டு ரயிலில் இருக்கும் பயணிகளையும் மீட்கும் பணி வேகமாக நடந்தது. மின்சார ரயிலின் ஓட்டுனரை மீட்க மட்டுமே 6 மணி நேரம் போராட்டம் நடந்தது குறிப்பிடத்தக்கது.
|
அதிர்ச்சி வீடியோ
இந்த விபத்து எப்படி நடந்தது என்று அதிர்ச்சி வீடியோ வெளியாகி உள்ளது. இரண்டு ரயிலும் மோதுவது சிசிடிவியில் பதிவாகி உள்ளது. இந்த வீடியோ பார்க்கவே அதிர்ச்சியாக உள்ளது. ரயில்கள் விபத்துக்குள்ளானது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

காயம் அடைந்தனர்
இந்த விபத்தில் 30க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்தனர். காயமடைந்த பயணிகளை அப்பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதில் காயம் அடைந்த ஓட்டுனரின் உடல்நிலை மட்டும் மோசமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications