காலாவதியான உணவு, கிட்சன் முழுக்க பூச்சிகள்.. சிக்கிய 7 பிரபல உணவகங்கள்! அதிர்ச்சி

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: ஹைதராபாத்தில் பிரபலமான 7 உணவகங்களில் நடத்தப்பட்ட திடீர் சோதனையில் காலாவதியான உணவுப் பொருட்கள், முறையற்ற சேமிப்பு, மோசமான சுகாதார நிலை, பூச்சிகள் உள்ளிட்ட பல்வேறு உணவுப் பாதுகாப்பு விதிமீறல்கள் கண்டறியப்பட்டுள்ளன. பல ஹோட்டல்களில் கண்டறியப்பட்ட பொருட்கள் பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.

உணவு பாதுகாப்பு என்பதில் எப்போதுமே சமரசம் செய்து கொள்ள முடியாது. ஒரு உணவகத்தில் ஏற்படும் தவறு கூட பலரை பாதிக்கலாம் என்பதால் ஹோட்டல் வைத்திருப்போர் உணவு பாதுகாப்பு விதிமுறைகளை கட்டாயமாக பின்பற்றியாக வேண்டும். இருப்பினும், சில நிறுவனங்கள் உணவு பாதுகாப்பு விதிகளை முறையாக பின்பற்றுவதில்லை.

Hyderabad Food Safety Raid hotel Food Safety

அதிரடி சோதனை

இதை கண்டுபிடிக்க அதிகாரிகள் தொடர்ந்து சோதனை நடத்தி வருகிறார்கள். அப்படி தான் தெலுங்கானா உணவு தர நிர்ணய ஆணையம் சார்பில் ஹைதராபாத் பகுதியில் சனிக்கிழமை அதிரடி சோதனைகள் நடைபெற்றன. உணவு பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் போலீசார் அடங்கிய 6 குழுக்கள் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டன.

பஞ்சாரா ஹில்ஸில், ஜூப்ளி ஹில்ஸ், டோலிச்சௌகி மற்றும் காஜிபவுளி பகுதிகளில் உணவகங்களில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். சோதனையின்போது சில உணவகங்களில் மோசமான சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்பட்டது தெரிய வந்தது. காலாவதியான உணவு பொருட்கள், உணவுகளை முறையாக கையாளாமல் இருப்பது மற்றும் அழுகிய காய்கறிகள் கண்டறியப்பட்டன. மேலும், உணவு லேபிள் விதிமீறல்களும் கண்டறியப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சில இடங்களில் பூச்சி தொல்லையும் காணப்பட்டதாக கூறப்படுகிறது.

பறிமுதல்

காஜிபௌலியில் உள்ள ஹோட்டலில் நடந்த சோதனையில் சேமிப்பு அறையில் உணவுப் பொருட்களை தவறாக லேபிளிட்டு விற்பனை செய்யப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து சுமார் ரூ.17,500 மதிப்புள்ள 15 கிலோ உலர் பழங்கள், 24 கிலோ உலர் நூடுல்ஸ் மற்றும் 5 கிலோ உருளைக்கிழங்கு சிப்ஸ் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், நெய் மற்றும் பனீர் மாதிரிகளும் பரிசோதனைக்காக சேகரிக்கப்பட்டன.

கலப்படம் செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் 7 உணவகங்களிலிருந்தும் மொத்தம் 11 உணவு மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன. இந்த மாதிரிகள் ஆய்வக பரிசோதனைக்கு அனுப்பப்பட உள்ளன. பரிசோதனை முடிவுகள் மற்றும் சம்பந்தப்பட்ட உணவகங்களின் விளக்கங்களின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். விதிமீறல்கள் தொடர்பாக உணவகங்களுக்கு 3 காரணம் கேட்கும் நோட்டீஸ்கள் உட்பட மொத்தம் 7 நோட்டீஸ்களவ் வழங்கப்பட்டுள்ளன.

எச்சரிக்கை

ஆய்வக முடிவுகளில் விதிமீறல்கள் உறுதி செய்யப்பட்டால்.. அல்லது நோட்டீஸ்களுக்கு உரிய விளக்கம் தராவிட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. உணவகங்கள் முறையான சுகாதாரத்தைப் பராமரிப்பதுடன், உணவு பொருட்களை பாதுகாப்பான முறையில் சேமிக்க வேண்டும், சரியான லேபிள்களை பயன்படுத்த வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தினர். மேலும் உணவை சேமிக்கும் இடம், சமைக்கும் இடங்களில் பூச்சி தொல்லை இல்லாத சூழலை உருவாக்க வேண்டும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

சோதனை

ஹைதராபாத்தில் உணவு பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் நடைபெற்று வரும் தொடர் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சில நாட்களுக்கு முன்பு, 32 இனிப்பு தயாரிப்பு நிறுவனங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தி, 35 மாதிரிகளை சேகரித்ததுடன், ரூ.30 லட்சம் மதிப்பிலான சுமார் 15 டன் உணவுப் பொருட்களை பறிமுதல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+