பாம்பை சுழற்றி.. போலீசுக்கே மரண பயம் காட்டிய போதை ஆசாமி! கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
ஹைதராபாத்: பாம்பை கண்டால் படையும் நடுங்கும்போது, போலீஸ் எல்லாம் எம்மாத்திரம்? இப்படி நினைத்துக்கொண்டு போலீசிடம் பாம்பை வைத்து பயம் காட்ட முயன்ற இளைஞர் எக்குத்தப்பாக சிக்கிக்கொண்ட சம்பவம் கவனம் பெற்றிருக்கிறது.
ஹைதராபாத்தின் சந்திரயங்குட்டா பகுதியில், நேற்றிரவு சவாரி முடித்துக்கொண்டு தனது ஆட்டோவில் இளைஞர் இர்பான் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். இவர் ஃபுல் போதையில் இருந்திருக்கிறார்.

இப்படி வரும்போது வழக்கமாக ரோந்து பணியில் இருக்கும் போக்குவரத்து காவலரிடம் சிக்கியிருக்கிறார். போலீசாரும், இளைஞரின் வாயில் பைப் வைத்து செக் செய்து போதையில் இருப்பதை உறுதி செய்திருக்கிறார்கள். எனவே ஆட்டோவை அள்ளிக்கொண்டு போய் இருக்கிறார்கள். இளைஞர் எவ்வளவுதான் கெஞ்சி பார்த்தும் ஆட்டோவின் சாவி கிடைக்கவில்லை. டென்ஷனான அவர், கடைசியாக தன்னுடைய ஆயுதத்தை கையில் எடுத்திருக்கிறார்.
அதாவது ஸ்டேஷன் வாசலில் நிற்க வைக்கப்பட்டிருந்த ஆட்டோவில் இறந்த பாம்பு இருந்திருக்கிறது. அந்த பாம்பை இளைஞர்தான் கொண்டு வந்திருக்கிறார். அதை எடுத்து போலீசார் மீது வீச முயன்றிருக்கிறார். ஆட்டோவின் சாவியை கொடுக்கவில்லை எனில், பாம்பை தூக்கி போட்டுவிடுவேன் என்று மிரட்டியுள்ளார். இதற்கெல்லாம் அசராத போலீசார் இளைஞரை பிடிக்க முயன்றிருக்கின்றனர். இதை சற்றும் எதிர்பார்க்காத இளைஞர் பதறியடித்துக்கொண்டு ஓடியுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து இளைஞர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. பாம்புகளை பொறுத்தவரை அவை எளிதில் மனிதர்களை தாக்குவது கிடையாது. தவளைகள், எலிகள் அல்லது சிறு பறவைகளை மட்டுமே தாக்குகின்றன. உருவமைப்பில் தன்னைவிட மனிதன் மிகப்பெரியவன் என்பதை பாம்புகள் உணர்ந்து இருக்கின்றன. எனவே ஒரே அறையில் மனிதனும், பாம்பும் இருந்தாலும் கூட பாம்புகள் மனிதனை தாக்குவது கிடையாது.
பாம்புகளைப் பொறுத்தவரை மனிதர்கள் நடக்கும் மலைகளைப் போன்றவர்கள். பாம்பை பார்த்தால் அதனால் நமக்கு ஏற்படும் பயத்தை விட, நம்மை பார்த்தால்தான் பாம்புகள் அதிகம் பயப்படும்.
எனவே தனக்கு ஆபத்து ஏற்படாத வரை, அல்லது தப்பிக்க வழி இல்லாமல் நெருக்கடி ஏற்படாத வரை, பாம்புகள் மனிதர்களை தாக்குவது கிடையாது. அப்படியே தவிர்க்க முடியாமல் தாக்கினாலும் சில நேரங்களில் லேசாக கடித்துவிட்ட நகர்ந்து வருகிறது. ஏனெனில் விஷத்தை உருவாக்குவதற்கு பாம்புகளுக்கு நிறைய எனர்ஜி தேவை. உணவுக்காக மட்டும் அவை விஷத்தை பயன்படுத்துகின்றன. மனிதன் பாம்பின் உணவு பட்டியலில் கிடையாது. காவலர்களும் இந்த விஷயத்தை தெரிந்து வைத்திருக்கிறார்கள் எனவேதான் போதை ஆசாமி இளைஞரை அவர்கள் துரத்தி அடித்திருக்கிறார்கள்.
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications