'அந்தர்கி நமஸ்காரம்' பதவியேற்பு விழாவில் தெலுங்கில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின்.. புன்னகைத்த ஜெகன்!
Recommended Video
ஹைதராபாத்: ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்ற திமுக தலைவர் ஸ்டாலின் அந்தர்கி நமஸ்காரம் என தெலுங்கில் பேசியது அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.
ஆந்திர மாநில முதல்வராக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மகனுமான ஜெகன்மோகன் ரெட்டி இன்று பதவியேற்றார். விஜயவாடாவில் நடைபெற்ற பிரமாண்ட நிகழ்ச்சியில் ஆளுநர் நரசிம்மன் ஜெகன் மோகன் ரெட்டிக்கு பதவி பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
ஜெகன் மோகன் ரெட்டி பதவியேற்றபோது அக்கட்சியின் தொண்டர்கள் உற்சாக முழக்கமிட்டு ஆரவாரம் செய்தனர். ஜெகனின் பதவியேற்பு விழாவில் அவரது தாயார் விஜயம்மா கலந்து கொண்டார்.

வீழ்ந்த தெலுங்கு தேசம்
ஆந்திர சட்டசபை தேர்தலில் ஜெகனின் ஒய்எஸ்ஆர்சி கட்சி சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியை வீழ்த்தி தனிப்பெரும்பான்மை பெற்றது. இதைத்தொடர்ந்து கட்சி எம்எல்ஏக்களால் சட்டமன்றக்குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டார் ஜெகன் மோகன் ரெட்டி.

6ஆம் தேதி அமைச்சரவை
அவரை ஆட்சியமைக்க அழைப்பு விடுத்தார் ஆந்திர ஆளுநர் நரசிம்மன். இதைத்தொடர்ந்து இன்று நடைபெற்ற பிரமாண்ட விழாவில் ஆந்திர மாநில முதல்வராக முதல் முறையாக பதவியேற்றார் ஜெகன். இன்று ஜெகன் மோகன் ரெட்டி மட்டுமே பதவியேற்றார். அவரது அமைச்சரவை வரும் ஜூன் 6ஆம் தேதி பதவியேற்கிறது.

ஸ்டாலின் பங்கேற்பு
ஜெகனின் பதவியேற்பு விழாவில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர். தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் உள்ளிட்ட முக்கிய தலைவர்களும் பதவியேற்பு விழாவில் பங்கேற்றனர். தமிழகத்தில் இருந்து பிரதான எதிர்க்கட்சியான திமுக தலைவர் ஸ்டாலின் ஜெகனின் பதவியேற்பு விழாவில் பங்கேற்றார்.

ஸ்டாலின் வாழ்த்து
ஜெகன் மோகன் ரெட்டி பதவியேற்றதும் ஆளுநர் நரசிம்மன் அவருக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். இதைத்தொடர்ந்து திமுக தலைவர் ஸ்டாலின், முதல்வராக பதவியேற்ற ஜெகன் மோகன் ரெட்டிக்கு வாழ்த்து தெரிவித்து பேசினார்.

அந்தர்கி வணக்கம்
அப்போது தனது பேச்சை தொடங்குவதற்கு முன்பு, அந்தர்கி நமஸ்காரம் என தெலுங்கில் கூறி தனது உரையை தொடங்கினார் ஸ்டாலின். முதலில் தெலுங்கிலும், பின்னர் தமிழிலும் வணக்கம் கூறிய ஸ்டாலின் பின்னர் ஆங்கிலத்தில் ஜெகன் மோகன் ரெட்டிக்கு வாழ்த்து தெரிவித்து நன்றி கூறினார்.

புன்னகைத்த ஜெகன்
ஸ்டாலின் தெலுங்கில் பேசுவதை ரசித்து கேட்ட ஜெகன் மோகன் ரெட்டியும், சந்திரசேகர் ராவும் மேடையில் இருந்தபடியே புன்முறுவல் பூத்தனர். அங்கு கூடியிருந்த தொண்டர்களும் பொதுமக்களும் ஆச்சரியத்தில் ஓ.... வென கூச்சலிட்டனர். தமிழே எங்கள் மூச்சு எனக்கூறிவரும் திமுக தலைவர் ஸ்டாலின் ஆந்திராவில் தெலுங்கில் வணக்கம் கூறியது அங்கிருந்தவர்களை மட்டுமின்றி இங்குள்ளவர்களையும் வெகுவாக கவர்ந்தது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications