ஹோட்டலில் ரூ.230.. ஸ்விக்கியில் ரூ.436! ஒரே உணவுக்கு கிட்டத்தட்ட டபுள் விலை! கொந்தளித்த நெட்டிசன்கள்

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: ஹோட்டலில் நேரடியாக சென்று சாப்பிடுவதற்கும், அதே உணவை ஆன்லைன் உணவு டெலிவரி மூலம் ஆர்டர் செய்வதற்கும் இடையே இருக்கும் விலை வித்தியாசம் தொடர்ந்து அதிகரித்து. ஹைதராபாத்தைச் சேர்ந்த ஒருவர் ஹோட்டலில் சென்று சாப்பிடுவதை விட ஆர்டர் செய்யும் போது அதன் விலை இரண்டு மடங்கு அதிகரிப்பதாக நெட்டிசன் ஒருவர் பதிவிட்டுள்ளது டிரெண்டாகி வருகிறது.

முன்பெல்லாம் நாம் ஹோட்டலில் உணவு சாப்பிட வேண்டும் என்றால் நேரில் சென்று தான் சாப்பிடுவோம். பார்சல் என்றாலும் நாம் நேரில் தான் செல்ல வேண்டும். ஆனால், இப்போது அந்த நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. ஆன்லைன் உணவு ஆர்டர் வந்த பிறகு பெரும்பாலானோர் ஆன்லைனிலேயே உணவுகளை ஆர்டர் செய்கிறார்கள்.

Swiggy vs Restaurant Food Price hyderabad

ஆன்லைன் ஆர்டர்

முதலில் ஆன்லைன் ஆர்டருக்கு தள்ளுபடிகளை அள்ளி கொடுத்த டெலிவரி நிறுவனங்கள் இப்போது ஏகப்பட்ட கட்டணங்களை சேர்த்து கொண்டே போகிறது. இதனால் டெலிவரி செய்யும்போது உணவு ரேட் எங்கோ உச்சத்திற்கு போய்விடுகிறது. அப்படியொரு சம்பவம் தான் இப்போது நடந்துள்ளது.

ஹைதராபாத்தின் பஞ்சகட்டு தோசா ஹோட்டலில் ஒருவர் சாப்பிட்ட உணவுக்கான பில் ரூ.ஆக இருந்துள்ளது. ஆனால் அதே உணவுகளை அவர் ஸ்விக்கி மூலம் ஆர்டர் செய்தால், எந்தவித கூப்பன் அல்லது தள்ளுபடியும் பயன்படுத்துவதற்கு முன்பே அதன் விலை ரூ.436 ஆக இருந்துள்ளது. இந்த ஒப்பீட்டை அவர் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அதில் உணவகத்தில் வழங்கப்பட்ட மெனு மற்றும் பில் விவரங்கள் இடம்பெற்றிருந்தன.

ரேட் வித்தியாசம்

அந்த பில்லில் நெய் காரம் ஆனியன் தோசையின் விலை ரூ.104 ஆக உள்ளது. நெய் பொங்கல் ரூ.85-க்கும், பில்டர் காபி ரூ.28-க்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதன் மொத்த தொகை ரூ.219.04ஆக இருந்த நிலையில், ஜிஎஸ்டி உள்ளிட்டவற்றுக்குப் பிறகு இறுதி பில் ரூ.230 ஆக வந்துள்ளது. இது ஓகே.. ஒரு நல்ல உணவகத்திற்குச் சரியான விலை தான்

ஆனால் அதே உணவுகளை ஸ்விக்கியில் பார்த்தபோது விலை எங்கோ உச்சத்தில் இருக்கிறது. ஆனியன் தோசை ரூ.149 என்றும், பொங்கல் ரூ.115 என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், ஸ்பெஷல் பில்டர் காபியின் விலை ரூ.120 என இருந்துள்ளது. இவற்றின் மொத்த விலை ரூ.436ஆக இருந்தது. எந்தவொரு கூப்பன் அல்லது தள்ளுபடிக்கு முன்பு இந்த விலை காட்டியுள்ளது. அதாவது உணவகத்தில் ரூ.230க்கு கிடைத்த உணவு, ஸ்விக்கியில் ஆர்டர் செய்யும்போது ரூ.436 ஆகியுள்ளது. இரண்டுக்கும் இடையே கிட்டத்தட்ட இரண்டு மடங்கு, அதாவது ரூ.206 வித்தியாசம் ஏற்பட்டுள்ளது.

விவாதம்

இந்த ரேட் வித்தியாசமே சமூக வலைத்தளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சிலர் ஹோட்டலில் நேரடியாக சென்று சாப்பிடுவதே பொருளாதார ரீதியாக சிறந்தது என்று சொல்லி வருகிறார்கள். இது தொடர்பாக நெட்டிசன் ஒருவர், "உணவகத்தில் சாப்பிடுவதற்கான செலவுடன் போக்குவரத்து செலவையும் சேர்த்தாலும், ஆன்லைனில் ஆர்டர் செய்வதைவிட குறைவாக இருக்கிறது. எனவே அருகில் உள்ள நல்ல உணவகத்திற்கு நேரில் சென்று சாப்பிடுவது சிறந்தது" என பதிவிட்டுள்ளார்.

நெட்டிசன்கள்

அதேநேரம் ஆன்லைன் டெலிவரி தளங்களுக்கு ஆதரவாகவும் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். உணவின் விலை உணவகத்திலும் ஆன்லைனிலும் ஒரே மாதிரியாக இருந்தால், டெலிவரி நிறுவனங்களும் டெலிவரி ஊழியர்களும் எப்படி வருவாய் ஈட்ட முடியும் என்று ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், இதில் கூப்பனை சேர்த்தால் கணிசமாக விலை குறையும் என்றும் அதையும் சேர்த்து பார்த்தில் ரேட் வித்தியாசம் பெரிதாக இருக்காது என ஒருவர் பகிர்ந்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+