தெலுங்கானா: 'தெலுங்குதேசம்' தலைவர்கள் செய்த சம்பவம்-நிலைகுலைந்த சந்திரபாபு நாயுடு- பாஜகவா?காங்கிரஸா?
ஹைதராபாத்: தெலுங்கானா தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்துவிட்டது. பாஜகவுடன் தெலுங்குதேசம் கட்சி, தெலுங்கானா தேர்தலில் போட்டியிடாத நிலையில் ஒட்டுமொத்த தொண்டர்களும் காங்கிரஸை முழு வீச்சில் ஆதரித்ததால் ஆந்திரா தேர்தலில் என்ன முடிவு எடுப்பது என்பது தெரியாமல் பெரும் குழப்பத்தில் மூழ்கி கிடக்கிறாராம் சந்திரபாபு நாயுடு.
2019-ம் ஆண்டு பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொண்டது தெலுங்குதேசம். இதனையடுத்து பாஜகவுக்கு எதிரான அணியை உருவாக்குவதில் சந்திரபாபு நாயுடு தீவிரம் காட்டினார். ஆனால் சந்திரபாபு நாயுடுவின் முயற்சிகள் பலனளிக்கவில்லை. ஆந்திரா சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறும் நிலையில் மீண்டும் பாஜகவுடன் கை கோர்க்க சந்திரபாபு நாயுடு தயாரானார். ஆனால் ஆந்திரா பாஜகவும் சரி பாஜக மேலிடமும் சரி சந்திரபாபு நாயுடுவுக்கு சிக்னல் கொடுக்கவில்லை.

அதேநேரத்தில் ஆந்திராவில் ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், மத்தியில் ஆளும் பாஜகவை பகைத்துக் கொள்ளவும் இல்லை. எதிர்க்கட்சிகளின் "இந்தியா" கூட்டணியில் இணையவும் இல்லை. முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி மீது பல நடவடிக்கைகள் பாய்ந்த போதும் அவருக்கு கடும் பாதிப்பை கோபத்தை ஏற்படுத்தி காங்கிரஸை உள்ளடக்கி "இந்தியா" அணிக்கள் பாஜக தள்ளிவிடவும் இல்லை. இந்த நிலையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா இணைந்தது. தெலுங்கானா தேர்தலில் ஜனசேனாவும் பாஜகவும் கூட்டணி அமைத்தன. ஆனால் தெலுங்கானா தேர்தலிலேயே போட்டியில்லை என அறிவித்தது தெலுங்குதேசம் கட்சி. இதனை தெலுங்கானாவில் உள்ள அக்கட்சித் தலைவர்களும் தொண்டர்களும் சற்றும் எதிர்பார்க்கவில்லை. இந்த முடிவால் அவர்கள் கொந்தளித்து போயினர்.
அதேநேரத்தில் தேர்தல் களத்தில் காங்கிரஸுக்கு ஆதரவு தெரிவித்து பிரசாரம் செய்தனர் தெலுங்குதேசம் கட்சியினர். பிரியங்கா காந்தியின் பிரசாரக் கூட்டங்களில் பட்டொளி வீசி பறந்தது சந்திரபாபு நாயுடு கட்சிக் கொடி. இப்போது முதல்வராகி இருக்கும் ரேவந்த் ரெட்டி தொகுதிகளில் தீவிரமாக களப் பணியாற்றியது தெலுங்குதேசம் கட்சி. தேர்தலில் ஜனசேனா போட்டியிட்ட 8 தொகுதிகளிலும் டெபாசிட் இழந்தது. பாஜக 8 தொகுதிகளில் வென்றது.
இந்த நிலையில் இன்றைய ரேவந்த் ரெட்டி பதவியேற்பு விழாவுக்கு யாரும் செல்லக் கூடாது என தெலுங்கு தேசம் கட்சியினருக்கு சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டார். சந்திரபாபு நாயுடுவைப் பொறுத்தவரை ஆந்திராவில் பாஜகவுடன் கூட்டணி வைக்க விரும்புகிறார். ஆனால் ஜெகன் மோகனின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸுடனான மறைமுக உறவை பாஜக துண்டிக்க வேண்டும் எனவும் எதிர்பார்க்கிறார். அதே நேரத்தில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியினரோ பாஜகவுடன் கூட்டணி வேண்டாம்; காங்கிரஸுடன் கை கோர்ப்போம் என்கின்றனர். இதனால் என்ன முடிவு எடுப்பது எனத் தெரியாமல் விழிபிதுங்கி கிடக்கிறாராம் சந்திரபாபு நாயுடு.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications