அம்பேத்கரை 2 முறை வெற்றிபெற விடாமல் தடுத்ததே காங்கிரஸ் தான்! விளாசிய பிரதமர் மோடி.. திரும்பும் ‛கை’
ஹைதராபாத்: டாக்டர் அம்பேத்கரை 2 முறை ஜெயிக்கவிடாமல் காங்கிரஸ் கட்சி தடுத்ததாக பிரதமர் நரேந்திர மோடி தெலங்கானா பொதுக்கூட்டத்தில் பரபரப்பாக பேசியுள்ளார்.
தெலங்கானா மாநில சட்டசபை தேர்தல் வரும் 30ம் தேதி நடக்கிறது. இதில் பதிவாகும் ஓட்டுகள் டிசம்பர் 3ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. தெலங்கானாவில் மொத்தம் 119 தொகுதிகள் உள்ள நிலையில் ஒரு கட்சி ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் 60 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்.

இந்த தேர்தல் மூலம் மாநிலத்தில் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்ய ஆளும் கட்சியான முதல்வர் சந்திரசேகரராவின் பிஆர்எஸ் கட்சி விரும்புகிறது. அதேவேளையில் தெலங்கானாவில் வெற்றி பெறும் நோக்கத்தில் காங்கிரஸ், பாஜக கட்சிகள் தனித்தனியே களமிறங்கி உள்ளன.
இருப்பினும் இந்த தேர்தலில் நேரடி போட்டி என்பது பிஆர்எஸ்-காங்கிரஸ் கட்சி இடையே தான் உள்ளது. அதாவது இந்த கட்சிகளில் ஒன்று தான் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் என பல கருத்து கணிப்புகள் தெரிவித்துள்ளன. இருப்பினும் பாஜக தனது செல்வாக்கை நிரூபிக்க முயன்று வருகிறது. இந்நிலையில் தெலங்கானாவில் இன்று பிரதமர் நரேந்திர மோடி பிரசாரம் மேற்கொண்டார்.
ஹைதராபாத்தில் இன்று மடிகா சமுதாய மக்களுக்கான பாஜக பொதுக்கூட்டம் நடந்தது. தெலங்கானாவில் உள்ள தலித் மக்களிடம் 60 சதவீதம் பேர் மடிகா பிரிவை சேர்ந்தவர். இந்நிலையில் தான் மடிகா பிரிவினர் தங்களுக்கு உள்இடஒதுக்கீடு கோரி கடந்த 30 ஆண்டுகளாக போராடி வருகின்றனர். இத்தகைய நிலையில் தான் பிரதமர் மோடி அந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார் அப்போது அவர் கூறியதாவது:
‛‛சகோதர, சகோதரிகளே நான் உங்களிடம் எதையும் கேட்டு இங்கு வரவில்லை. சுதந்திரம் அடைந்த பிறகு பல அரசியல் தலைவர்களும், கட்சிகளும் உங்களுக்கு வாக்குறுதி அளித்து துரோகம் செய்துள்ளன. ஆனால் நான் ஒரு அரசியல் தலைவராக அவர்கள் செய்த பாவங்களுக்கு பரிகாரம் செய்யவே இங்கு வந்துள்ளேன்.
பிஆர்எஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தலித் மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். புதிய அரசியலமைப்பு சட்டம் வேண்டும் என்று பிஆர்எஸ் கட்சி அம்பேத்கரை இழிவுப்படுத்தி உள்ளது. காங்கிரஸ் கட்சியும் பிஆர்எஸ் கட்சியை போன்ற வரலாற்றை கொண்டுள்ளது. காங்கிரஸ் கட்சி அம்பேத்கரை 2 முறை தேர்தலில் வெற்றி பெறவிடாமல் தடுத்தது.
இந்த விஷயத்தில் காங்கிரஸ்-பிஆர்எஸ் கட்சிகள் ஒரே மனநிலையில் உள்ளனர். ஒவ்வொரு முறையும் திரைக்கு பின்னால் விளையாடுகிறார்கள். கடந்த 10 ஆண்டுகளில் தெலங்கானா அரசு மடிகா உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களுக்கும் துரோகம் இழைத்துள்ளது. தெலங்கானாவை உருவாக்கியபோது காங்கிரஸ் கட்சி தடைகளை ஏற்படுத்தியது.
மேலும் தெலங்கானா மாநிலம் என்பது பலபேரின் தியாகங்களுக்கு பிறகு உருவாகியது. ஆனால் அதனை மறந்துவிட்டு பிஆர்எஸ் கட்சி செயல்பட்டு வருகிறது. மேலும் தெலங்கானா புதிய மாநில கோரிக்கை தொடர்பான போராட்டத்தில் புதிய மாநிலம் அமைந்தால் தலித் ஒருவர் முதல்வராக வருவார் என வாக்குறுதி அளித்தனர். ஆனால் மாநிலம் உருவாகி புதிய ஆட்சி அமைந்த பிறகு தலித் மக்களின் கனவுகளை நசுக்கி முதல்வர் நாற்காலியில் சந்திரசேகர ராவ் அமர்ந்தார்.
அனைவருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற கொள்கையில் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. சுதந்திரத்துக்கு பிறகு நீங்கள் பல அரசை பார்த்திருக்கலாம். ஆனால் எங்கள் அரசு என்பதில் முற்றிலும் வேறுபட்டது. ஏழைகளின் நலனுக்கு முன்னுரிமை அளித்து வருகிறது'' என்றார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications