தெலுங்கானாவில் பிரதமர் மோடி-வரவேற்ற நடிகை விஜயசாந்தி..அப்புறம் செஞ்சாரே ஒரு 'சம்பவம்'- அலறும் பாஜக!
ஹைதராபாத்: தெலுங்கானா பாஜக முகமான நடிகை விஜயசாந்தி ஓரிரு நாட்களில் காங்கிரஸில் இணைந்துவிடுவார்; அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே ஒப்புதல் கொடுத்துவிட்டார் என மூத்த காங்கிரஸ் தலைவர் மல்லு ரவி கொளுத்திப் போட்டிருப்பது பரபரப்பை கிளப்பி இருக்கிறது.
தெலுங்கானா சட்டசபை தேர்தல் பிரசாரத்துக்காக நேற்று பிரதமர் மோடி வருகை தந்தார். மாதிகா எனப்படும் தலித் சமூகத்தினர் ஏற்பாடு செய்த பிரம்மாண்ட பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி உணர்வுப்பூர்வமாக பேசி பிரசாரம் செய்தார்.

தெலுங்கானாவில் பிரதமர் மோடியின் பிரசாரத்தை விட பாஜக நடிகை விஜயசாந்தி விவகாரம்தான் நேற்றும் இன்றும் பேசுபொருளாகி இருக்கிறது. 1990களிலேயே பாஜகவில் இணைந்தவர் நடிகை விஜயசாந்தி. பின்னர் தனிக் கட்சி, டிஆர்எஸ், காங்கிரஸ் என தாவி தாவி கடைசியாக பாஜகவுக்கே திரும்பினார். ஆனால் அண்மை காலமாக பாஜக மேலிடம் மீது கடும் அதிருப்தியில் இருந்து வந்தார் விஜயசாந்தி. தற்போதைய தெலுங்கானா சட்டசபை தேர்தலில் நடிகை விஜயசாந்தி முற்று முழுதாக ஓரம் கட்டி தூக்கி எறிந்துவிட்டது பாஜக. நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலும் இல்லை.. வேட்பாளர்கள் பட்டியலும் இல்லை என்கிற கதியில் இருக்கிறார் விஜயசாந்தி.
மோடி வரவேற்பில் விஜயசாந்தி: மேலும் தெலுங்கானாவை காங்கிரஸ்தான் காப்பாற்றும் என நடிகை விஜயசாந்தி எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டது ஒட்டுமொத்த பாஜகவை ரொம்பவே கடுப்பேற்றிவிட்டது. இதனால் காங்கிரஸ் கட்சியில் விஜயசாந்தி இணைவார் என கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில் தெலுங்கானா தேர்தல் பிரசாரத்துக்காக பிரதமர் மோடி வருகை தந்தார். பிரதமர் மோடியை வரவேற்க விமான நிலையம் வந்திருந்தார் நடிகை விஜயசாந்தி. காங்கிரஸில் சேரப் போகிறார் என கூறப்பட்ட விஜயசாந்தி மோடியை வரவேற்க வந்தது பரபரப்பை கிளப்பியது.

ஹேப்பி தீபாவளி என பதில்: அப்போது செய்தியாளர்கள், பாஜகவில் இருந்து நீங்கள் விலகப் போவதாக வதந்திகள் கிளம்பி இருக்கிறதே என விஜயசாந்தியிடம் கேள்வி கேட்டனர். இதற்கு பதிலளித்த விஜயசாந்தி, ஹேப்பி தீபாவளி என பதில் சொல்லிவிட்டு நகர்ந்தார். பின்னர் காரில் ஏரில் நின்றபடி ஆதரவாளர்களிடம் ஹேப்பி தீபாவளி என்று மட்டும் பதில் சொன்னார்.
மோடியை வரவேற்க மட்டும்..: இருப்பினும் விடாப்பிடியாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப, இன்று பிரதமர் மோடியின் பிரசார கூட்டம் நடைபெற உள்ளது. நான் பிரதமர் மோடியை வரவேற்க வந்தேன். இதனை தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள் என்றார். இதனைத் தொடர்ந்து மோடியின் பிரசார கூட்டத்திலும் பங்கேற்பீர்களா என்ற கேள்விக்கு விஜயசாந்தி சொன்ன பதில்தான் பாஜகவை கதறவிட்டிருக்கிறது. அதாவது மோடியை வரவேற்கதான் வந்திருக்கிறேன். நான் மோடியின் பிரசார கூட்டத்துக்கு போகவில்லை. மற்றவர்கள் பங்கேற்பார்கள். மோடியை வரவேற்க மட்டும்தான் வந்தேன் என இறுக்கமான முகத்துடன் தெரிவித்தார்.

தொடர் புறக்கணிப்பு: தெலுங்கானாவில் ஏற்கனவே பிரதமர் மோடி, அமித்ஷா பிரசாரம் செய்த போதும் விஜயசாந்தி அந்த கூட்டங்களில் பங்கேற்கவில்லை. தெலுங்கானா பாஜக தலைவராக மத்திய அமைச்சர் கிஷண் ரெட்டியை வரவேற்கும் நிகழ்ச்சியில் திடீரென பாஜக தலைமை அலுவலகத்தி இருந்தும் வெளியேறி பரபரப்பை கிளப்பி இருந்தார் விஜயசாந்தி.
ஓரிரு நாட்களில் காங்கிரஸில் ஐக்கியம்?: இதனிடையே தெலுங்கானா மாநில மூத்த காங்கிரஸ் தலைவர் மல்லு ரவி, தெலுங்கானாவில் டிசம்பர் 3-ந் தேதிக்கு பின்னர் 3 நாட்களில் காங்கிரஸ் அரசு அமையப் போகிறது. முதல் 100 நாட்களி கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம். தெலுங்கானா அரசியல் அலை காங்கிரஸ் நோக்கி வீசுகிறது. நடிகை விஜயசாந்தி போன்றவர்கள் காங்கிரஸில் இணையப் போகிறார்கள். விஜயசாந்தியை காங்கிரஸில் சேர்க்க கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே ஒப்புதல் தெரிவித்துவிட்டார் என அதிரடியாக தெரிவித்திருக்கிறார்.
-
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன்












Click it and Unblock the Notifications