தெலங்கானா சட்டசபை தேர்தல்.. இன்று முதல் வேட்பு மனுத்தாக்கல்.. பல முனை போட்டியால் அனல் பறக்கும் களம்
: தெலங்கானாவில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் இன்று வேட்பு மனுத்தாக்கல் தொடங்குகிறது. இன்று தொடங்கி வரும் 10ம் தேதி வரை மனுத்தாக்கல் நீடிக்கிறது.
தெலங்கானாவில் மொத்தம் 119 சட்டமன்ற தொகுதிகள் இருக்கின்றன. இங்கு பாரத் ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) கட்சி ஆட்சியில் இருந்து வருகிறது. தேர்தலையொட்டி ஆளும் பிஆர்எஸ் மீண்டும் ஆட்சியை பிடிக்க தீவிரமாக போராடி வருகிறது. ஆனால் காங்கிரஸ் இக்கட்சிக்கு பயங்கர டஃப் கொடுத்து வருகிறது. இதற்கிடையில் பாஜகவும் கிடைக்கிற வாய்ப்பை பயன்படுத்தி மாநிலத்திலில் காலூன்ற முயன்று வருகிறது. குறிப்பாக பாஜகவுக்காக பிரதமர் நரேந்திர மோடி நேரில் வந்து இம்மாநிலத்தில் தேர்தல் பரப்புரையை தொடங்கி வைத்தார்.

அதன் தொடர்ச்சியாக அமித்ஷா உள்ளிட்ட அமைச்சர்கள் தெலங்கானாவில் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர். இந்த முறை தெலங்கானாவில் பாஜக வெற்றி பெற்றால் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவரைதான் முதலமைச்சராக்குவோம் என அமித்ஷா கூறியுள்ளார். ஆனால் பாஜகவுக்கு அப்படியான பிரகாசமான வெற்றி வாய்ப்பு ஏதும் இல்லை என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். இம்மாநிலத்தில் ஆளும் பிஆர்எஸ் கட்சிக்கும், காங்கிரஸுக்கும் இடையேதான் போட்டி நிலவுகிறது.
காங்கிரஸ் இங்கு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டிருக்கிறார். ஆளும் பிஆர்எஸ் கட்சியும், பாஜகவும் மறைமுக கூட்டணியில் இருப்பதாக அவர் விமர்சித்துள்ளார். "நாட்டின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பாஜகவுக்கு எதிரான சித்தாந்தம் கொண்ட அரசியல் கட்சியினர் மீது அமலாக்கத்துறை, சிபிஐ ரெய்டு, கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. என் மீது கூட 24 வழக்குகள் இருக்கின்றன. என்னுடைய எம்பி பதவி பறிப்பு, அரசு வீடு பறிப்பு கூட பாஜகவால்தான் நடந்தது. ஆனால் எத்தனை பிஆர்எஸ் தலைவர்கள் இப்படி பழிவாங்கப்பட்டிருக்கிறார்கள்? இதிலிருந்தே இந்த மறைமுக கூட்டணியை புரிந்துக்கொள்ள முடியும்" என விமர்சித்துள்ளார்.
தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவின் மகளும் எம்எல்சியுமான கவிதா மீது டெல்லி மதுபான கொள்கை முறைகேடு குறித்து டெல்லி போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது. அதேபோல மத்திய அரசின் விசாரணை கமிஷன்களாலும் அவர் விசாரிக்கப்பட்டு வருகிறார். எனவே பிஆர்எஸ் கட்சியும் பாஜகவை கடுமையாக விமர்சித்து வருகிறது.
இந்த நிலையில்தான் இன்று தெலங்கானாவில் வேட்புமனுத்தாக்கல் தொடங்குகிறது. இன்று தொடங்கும் மனுத்தாக்கல் நவம்பர் 10ம் தேதிதான் முடிவடைகிறது. வேட்புமனுக்கள் நவம்பர் 13ம் தேதி பரிசீலிக்கப்படுகிறது. அதேபோல அதனை திரும்ப பெறுவதற்கான கடைசி நாள் நவம்பர் 15. தேர்தல் நவம்பர் 30ம் தேதி நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 3ம் தேதி அறிவிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications