தெலுங்கானாவில் இறங்கி அடிக்கும் காங்கிரஸ்! அதிரடி காட்டும் கேசிஆர் கட்சி.. ஆனால் கப்சிப் மோடில் பாஜக
ஹைதராபாத்: தெலுங்கானாவில் இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்கே பிஆர்எஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்குப் பெரிய அட்வான்டேஜ் இருக்கிறது. ஆனால், பாஜகவுக்குப் பின்னடைவே இருக்கிறது. அது ஏன் என்பது குறித்துப் பார்க்கலாம்.
தெலுங்கானா மாநிலத்தில் இந்தாண்டு இறுதியில் தேர்தல் நடைபெறுகிறது. இப்போது அங்கே கேசிஆர் தலைமையிலான பிஆர்எஸ் கட்சி ஆட்சியில் இருக்கிறது. தெலுங்கானா மாநிலம் உருவாக்கப்பட்டதில் இருந்தே கடந்த 9 ஆண்டுகளாக கேசிஆர் கட்சி தான் இங்கே ஆட்சியில் இருக்கிறது.
கடந்த தேர்தலில் கூட கேசிஆருக்கு மிகப் பெரிய ஆதரவு இருக்கவே செய்தது. இந்தச் சூழலில் இன்னும் சில மாதங்களில் அங்கே தேர்தல் நடைபெறுகிறது. இதில் அங்கே பிஆர்எஸ், காங்கிரஸ் மற்றும் பாஜக என மும்முனை போட்டி நடைபெறுகிறது.

தெலுங்கானா: அங்கே சட்டசபைத் தேர்தல் நெருங்கும் நிலையில், பிஆர்எஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் பிரசாரத்தைத் தீவிரப்படுத்தியுள்ளன. பிஆர்எஸ் ஏற்கனவே 115 பேரைக் கொண்ட வேட்பாளர் பட்டியலை அறிவித்து, பிரசாரத்தை ஆரம்பித்துவிட்டது. இன்னொரு பக்கம் காங்கிரஸ் ஹைதராபாத்தில் மெகா பேரணியை நடத்தி, அதில் 6 முக்கிய வாக்குறுதிகளை அளித்து மாநிலத்தையே அதிர வைத்துவிட்டது. இந்த இரு கட்சிகளுக்கு இடையே பாஜக சைலெண்டாகவே இருந்து வருகிறது.
தெலுங்கானாவைப் பொறுத்தவரை இரு கட்சிகளுடன் ஒப்பிடும் போது இப்போது பாஜக பின்தங்கியே இருக்கிறது. இருப்பினும், பாஜக தொகுதி வாரியாக ஆய்வு செய்து வருவதாகவும் ஒவ்வொரு தொகுதிக்கும் வேட்பாளர்களை இறுதி செய்யும் நடவடிக்கையில் இறங்கியுள்ளதாகவும் பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பாஜக: கடந்த ஆண்டு இதே செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் பாஜக மிகத் தீவிரமாக இருந்தது. தெலுங்கானா முழுக்க தனது நிர்வாகிகளை இறக்கிய பாஜக, கட்சியை வலுப்படுத்தும் நடவடிக்கையில் இறங்கியிருந்தது. பாஜக, அதன் உள்ளூர் தலைவர்களின் பலம், எதிர்க்கட்சிகளின் நிலை மற்றும் வெற்றி வாய்ப்புகள் குறித்துத் தெளிவாகத் தெரிந்து கொள்ள இந்த நடவடிக்கையை எடுத்தது.
அதன் பிறகு பாஜக பல அதிரடி மாற்றங்கள் வரும் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், அதற்கு நேர்மாறாக கப்சிப் மோடிற்கு சென்றுள்ளது பாஜக. இடையில் சமீபத்தில் மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி தெலுங்கானா பாஜக மாநில தலைவராக நியமிக்கப்பட்டார். அதன் பிறகாவது தேர்தல் நடவடிக்கையைத் தீவிரமாக முன்னெடுப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், அப்படி எதுவும் நடக்கவில்லை.
காங்கிரஸ்: மறுபுறம் கர்நாடக தேர்தலில் கிடைத்த வெற்றி காங்கிரசுக்கு மிகப் பெரிய உற்சாகத்தைக் கொடுத்துள்ளது. இதனால் தெலுங்கானாவிலும் அவர்கள் இறங்கி அடித்துள்ளனர். அவர்கள் முன்வைத்த வாக்குறுதிகள் தெலுங்கானா தேர்தலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், காங்கிரஸ் ஏற்கனவே விருப்ப மனுக்களையும் பெறத் தொடங்கிவிட்டது.
எஸ்சி/எஸ்டி தொகுதியில் போட்டியிடுவோர் ரூ.25,000 மற்றும் பொதுப் பிரிவினர் ரூ.50,000 தொகையைக் கட்டிவிட்டு விருப்ப மனு அளிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை காங்கிரஸ் சார்பில் 119 தொகுதிகளில் போட்டியிட 1006 பேர் விண்ணப்பித்துள்ளார்கள். இது மட்டுமின்றி காங்கிரஸ் ஸ்கிரீனிங் கமிட்டியும் ஏற்கனவே ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வேட்பாளர்களைப் பரிந்துரைக்கும் நடவடிக்கைகளிலும் இறங்கிவிட்டனர்.
வேட்பாளர்கள்: மறுபுறம் பாஜகவும் விருப்ப மனுக்களைப் பெற்றது. விண்ணப்பக் கட்டணம் எதுவும் வேண்டாம் என்று அறிவித்ததால் 6000 பேர் இதற்காக விண்ணப்பித்தனர். அதேநேரம் அங்கே வேட்பாளர்களைப் பரிந்துரைக்கும் மாநில தேர்தல் குழு கூட இன்னும் அமைக்கப்படவில்லை. விண்ணப்பக் கட்டணம் இல்லாத நிலையில், கடைநிலை தொண்டர்களும் விருப்ப மனு அளித்துள்ளனராம். எனவே, தீவிர ஆலோசனைக்கு பிறகே வேட்பாளர் தேர்வு இருக்கும் எனத் தெரிகிறது.
பாஜக இந்தத் தேர்தலில் வேட்பாளர் பட்டியலை மூன்று கட்டங்களாக வெளியிடும் எனத் தெரிகிறது. சுமார் 35 வேட்பாளர்களைக் கொண்ட முதல் பட்டியல் இம்மாத இறுதியில் அல்லது அக்டோபர் முதல் வாரத்தில் அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது. இன்று பாஜக மாநிலத் தலைவர் ஜி கிஷன் ரெட்டி டெல்லி திரும்புகிறார். அதன் பிறகாவது தேர்தல் நடவடிக்கையைத் தீவிரப்படுத்துவார்களா என்பது பாஜகவினரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications