நீதான் கட்சியோட செயல் தலைவர்.. மகனுக்கு பதவி கொடுத்து அழகு பார்த்த கேசிஆர்
ஹைதராபாத்: தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், தனது மகன் கேடிஆரை டிஆர்எஸ் கட்சியின் செயல்தலைவராக நியமித்து உத்தரவிட்டுள்ளார்.
தெலுங்கானா முதல்வரும்,தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் தலைவருமான சந்திரசேகர் ராவின் மகன் கே.டி.ராம ராவ். இவர் தெலுங்கானாவின் தொழில்துறை மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சராக உள்ளார். மேலும் கட்சியிலும் முக்கிய பொறுப்புகளை வகித்து வருகிறார்

கேடிஆர், கட்சி மற்றும் ஆட்சியில் நம்பர் 2வாக உள்ளார். அவரை தற்போது தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் செயல் தலைவராக நியமித்து சந்திரசேகர் ராவ் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக முதல்வர் சந்திரசேகர் ராவ் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கேடிஆரின் பணியாற்றும் திறன், வழிநடத்தி செல்லும் பண்பு, ஆகியவற்றின் காரணமாக, அவரது தலைமையில் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி சிறப்பாக செயல்படும் என்று நம்புகிறேன் என தெரிவித்துள்ளார்.
தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி இரண்டாவது முறையாக மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இதனால் இரண்டாவது முறையாக சந்திரசேகர் ராவ் தெலுங்கானாவின் முதல்வராக பொறுப்பேற்கிறார். அவரது ஒரே மகனான கேடிஆர் சிர்சில்லா தொகுதியில் இருந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் அமைச்சரவையில் கடந்த முறை வகித்த ஐடி துறை அமைச்சர் பொறுப்பை வகிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே டிஆர்எஸ் கட்சியின் செயல்தலைவராக கேடிஆரை, சந்திரசேகர் ராவ் நியமித்ததன் மூலம், இனி அவர் தேசிய அரசியலில் கவனம் செலுத்த முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் இவர் கைகோர்க்க வாய்ப்பு இல்லை என்கிற நிலையில், பாஜகவுடன் கூட்டணி அமைக்கவும் வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது.
ஜெயலலிதா பாணியில், லோக்சபா தேர்தலில் மாநிலத்தில் உள்ள 17 தொகுதியிலும் வென்று பலமான கட்சியாகவும், தேசிய அரசியலில் வலுவான தலைவராகவும் மாறுவதுக்கு சந்திரசேகர் ராவ் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications