"நாங்கள் திராவிடர்கள்.. அவர்கள் ஆரியர்கள்! ராமர்- சிவன் பற்றி தெலுங்கானா முதல்வர் பேச்சால் சர்ச்சை
ஹைதராபாத்: ராமர் பணக்கார மக்களின் கடவுள் எனவும் சிவன் ஏழை மக்களின் கடவுள் எனவும் குறிப்பிட்ட தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, இதன் காரணமாகவே பிரதமர் மோடி சிவ நாமத்தை உச்சரிப்பதே இல்லை என தெரிவித்தார். மேலும், தென்னிந்தியர்கள் திராவிடர்கள் எனவும் அவர்கள் ஆரியர்கள் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார். ரேவ்ந்த் ரெட்டியின் இந்த பேச்சு இப்போது சர்ச்சையாக வெடித்துள்ளது.
தெலுங்கானாவில் இப்போது காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. தேவந்த் ரெட்டி அங்கு முதல்வராக இருக்கிறார். இதற்கிடையே டெல்லியில் ஆங்கில ஊடகம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய தெலுங்கானா முதல்வர், சிவன் தொடர்பாகவும் ராமர் தொடர்பாகவும் சில கருத்துகளை தெரிவித்தார்.

சிவ நாமம்
அதாவது பாஜக தலைவர்கள் அடிக்கடி "ஜெய் ஸ்ரீ ராம்" என்று முழக்கமிடுவதாக சொன்ன ரேவந்த் ரெட்டி, பிரதமர் நரேந்திர மோடியும் பாஜக தலைவர்களும் ஏன் "ஹர ஹர மகாதேவ்" என்று கூறுவதில்லை என கேள்வி எழுப்பினார். தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியின் இந்த பேச்சு தற்போது விவாதமாகி வருகிறது. காங்கிரஸ் தொடர்ந்து மதத்தை வைத்து அரசியல் செய்வதாகவும் இதை காங்கிரஸ் உடனடியாக நிறுத்தி கொள்ள வேண்டும் எனவும் ரேவ்ந்த் ரெட்டி வலியுறுத்தியுள்ளார்.
அந்த நிகழ்ச்சியில் ரேவந்த் ரெட்டி மேலும் பேசுகையில், "நாங்கள் திராவிடர்கள்.. அவர்கள் ஆரியர்கள். நாங்கள் சிவ பக்தர்கள்.. அவர்கள் ராம பக்தர்கள்" என்று வடக்கு மற்றும் தென் இந்தியா இடையிலான அரசியல், கலாச்சார வேறுபாடுகளை குறிப்பிட்டார். அவர் மேலும், "சிவன் ஏழைகளின் கடவுள்; ராமர் பணக்காரர்களின் கடவுள்" என்றும் அவர் கூறினார். அதே நேரத்தில், ராமரையும் சிவனையும் மக்கள் வழிபடுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
வடஇந்தியா- தென்இந்தியா
வட இந்தியாவில் பாஜக ராமரை அரசியல் ரீதியாக முன்னிறுத்தியதாகவும், தென்னிந்தியாவில் சிவ வழிபாடே அதிகம் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். ரேவந்த் ரெட்டியின் இந்த கருத்துகள், வடக்கு - தெற்கு அரசியல் பிரதிநிதித்துவம் தொடர்பான அவரது கருத்துடன் ஒத்து போகிறது. குறிப்பாக மக்கள்தொகையை அடிப்படையாக கொண்டு லோக்சபா தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டால், தென் மாநிலங்களின் அரசியல் பிரதிநிதித்துவம் பாதிக்கப்படலாம் என்று அவர் தொடர்ந்து கவலை தெரிவித்து வருகிறார். இந்தச் சூழலில் தான் ராமர் பணக்காரர்களின் கடவுள் எனவும் ராமர் ஏழைகளின் கடவுள் எனவும் அவர் கூறியது விவாதமாகியுள்ளது.
பாஜக பதிலடி
இதற்கிடையே ரேவந்த் ரெட்டியின் பேச்சுக்கு பாஜக தலைவர்கள் பதிலடி கொடுத்து வருகிறார்கள். குறிப்பாக மத்திய அமைச்சர் மற்றும் பாஜக மூத்த தலைவர் பண்டி சஞ்சய் குமார் கடும் பதிலடி கொடுத்துள்ளார். ராமருக்கும் சிவனுக்கும் இடையே அரசியல் ரீதியான பிரிவை உருவாக்க ரேவந்த் ரெட்டி முயல்வதாக அவர் குற்றம்சாட்டினார். காசி விஸ்வநாதர் கோயிலுடன் பிரதமர் மோடிக்கு உள்ள தொடர்பை சுட்டிக்காட்டினார்.
அவர் மேலும், "ராமரும் சிவனும் வடக்கு, தெற்கு என்று பிரிக்கப்பட வேண்டியவர்கள் அல்ல. தெலுங்கானாவில் தட்சிண காசி என்று அழைக்கப்படும் வேமுலவாடாவும், தட்சிண அயோத்தி என்று அழைக்கப்படும் பத்ராசலமும் உள்ளன. இதை ரேவந்த் ரெட்டி புரிந்துகொள்ள வேண்டும்" என்று பண்டி சஞ்சய் குமார் கூறினார். மத மற்றும் பிராந்திய அடையாளங்களை வைத்து அரசியல் செய்வதையே காங்கிரஸ் வாடிக்கையாக கொண்டுள்ளதாகவும் இப்போதும் அதை தான் ரேவ்ந்த ரெட்டி செய்து வருவதாகவும் பாஜக சாடியுள்ளது.
தொகுதி மறுவரையை
சிவன் மற்றும் ராமர் மட்டுமின்றி லோக்சபா தொகுதிகள் எண்ணிக்கையை அதிகரிப்பது தொடர்பாகவும் ரேவந்த் ரெட்டி மீண்டும் கேள்வி எழுப்பியிருந்தார். லோக்சபா தொகுதி மறுவரையறை மற்றும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் உள்ளிட்ட விவகாரங்களில் தென் மாநிலங்களின் அரசியல் பிரதிநிதித்துவம் பாதிக்கப்படுவதாக அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
