Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரேவந்த் ரெட்டி சிக்சர்.. ஸ்டாலினுக்கும் ஒருபடி மேல.. எந்த பஸ்ஸில் எவ்வளவு தூரம் பயணித்தாலும் இலவசம்!

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: தெலுங்கானாவில் பெண்கள், திருநங்கைகள் அனைவரும் நாளை முதல் அரசுப் பேருந்துகளில் எங்கு வேண்டுமானாலும் இலவசமாக பயணிக்கலாம். தெலுங்கானா மாநிலத்தில் புதிதாகப் பொறுப்பேற்ற முதல்வர் ரேவந்த் ரெட்டி, நாளை இத்திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.

தெலுங்கானா மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 119 சீட்களில் 64 இடங்களை கைப்பற்றிய காங்கிரஸ் கட்சி, முதல் முறையாக அங்கு ஆட்சி அமைத்துள்ளது. தெலுங்கானா காங்கிரஸ் கமிட்டி தலைவரான ரேவந்த் ரெட்டி, அம்மாநிலத்தின் முதலமைச்சராக நேற்று பதவியேற்றார். பதவியேற்றதுமே காங்கிரஸ் கட்சி அறிவித்த 6 வாக்குறுதிகளை அமல்படுத்தும் கோப்புகளில் முதல் கையெழுத்திட்டார் ரேவந்த் ரெட்டி.

 Telangana CM Revanth reddys sixer: Free bus scheme for women in all government buses throughout state

சிக்சர் அடிக்கும் ரேவந்த் ரெட்டி: காங்கிரஸ் கட்சியின் 6 வாக்குறுதிகளும், மகாலட்சுமி, ரிது பரோசா, கிரக ஜோதி, இந்திராம்மா இண்ட்லு, யுவ விகாசம் மற்றும் செய்யுதா என்ற பெயர்களில் வகைப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் நாளை மகாலட்சுமி திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. மகாலட்சுமி திட்டத்தின் கீழ் மகளிருக்கு மாதம்தோறும் 2500 ரூபாய் வழங்கப்படும். 500 ரூபாய்க்கு சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கப்படும், தெலுங்கானா மாநில அரசு பேருந்துகளில் மகளிருக்கு இலவசமாக பயணம் செய்யும் சலுகை வழங்கப்படும்.

மகளிருக்கு அரசு நகரப் பேருந்துகளில் இலவச பயணம், மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 வழங்கும் திட்டம் ஆகியவற்றை தமிழ்நாட்டில் திமுக வாக்குறுதியாக அளித்து, ஆட்சிக்கு வந்த பின் செயல்படுத்தியது. இதே வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சி கர்நாடகாவில் அறிவித்து ஆட்சியைப் பிடித்த நிலையில், தெலுங்கானாவிலும் இந்த வாக்குறுதிகளை அளித்தது. வாக்குறுதி அளித்தபடி, பெண்களுக்கு இலவச பேருந்து பயண திட்டம் நாளை முதல் தெலுங்கானாவில் அமலுக்கு வருகிறது.

 Telangana CM Revanth reddys sixer: Free bus scheme for women in all government buses throughout state

இலவச பயணம் திட்டம் எப்படி செயல்படும்?: தெலுங்கானா மாநில சாலைப் போக்குவரத்துக் கழகம் (TSRTC3), தெலுங்கானா மாநிலத்தில் பெண்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கான 'மகாலட்சுமி இலவச பேருந்து' திட்டத்தை நாளை பிற்பகல் 1.30 மணிக்கு சட்டப்பேரவை வளாகத்தில் இருந்து முதல்வர் ரேவந்த் ரெட்டி கொடியசைத்து தொடங்கி வைக்கிறார் என அறிவித்துள்ளது. இலவச பயண திட்டத்திற்கான விதிமுறைகளும், நிபந்தனைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

சிட்டி ஆர்டினரி, எக்ஸ்பிரஸ், மெட்ரோ எக்ஸ்பிரஸ், பல்லே வெலுகு என அரசின் அனைத்து வகை பேருந்துகளிலும் இந்த பெண்களுக்கான இலவச பயண திட்டம் பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண்கள், மூன்றாம் பாலினத்தவர் எவ்வளவு தூரம் வேண்டுமானாலும், தெலுங்கானா மாநில எல்லைக்குள் இலவசமாக பயணிக்கலாம். மாநிலங்களுக்கு இடையேயான பேருந்துகளில் பயணிக்கும்போது, தெலுங்கானா மாநில எல்லை வரை இலவசம், அதன் பிறகு உள்ள தொலைவுக்கு பெண்கள் கட்டணம் செலுத்த வேண்டும்.

 Telangana CM Revanth reddys sixer: Free bus scheme for women in all government buses throughout state

ஒருபடி மேலே: தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த அனைத்து பெண்களும், மூன்றாம் பாலினத்தவரும் வயது வித்தியாசம் இன்றி, இந்த திட்டத்தில் பயன் பெறலாம். தெலுங்கானாவில் வசிக்கும் பெண்கள் மட்டுமே இந்த சேவையைப் பெற தகுதியுடையவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இலவச பயணம் மேற்கொள்ள விரும்பும் மகளிர், தங்களுடைய வசிப்பிட முகவரியை உறுதிப்படுத்தும் வகையிலான அடையாள அட்டைகளை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அவர்களுக்கு 'ஜீரோ டிக்கெட்' வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் வெற்றிகரமாகச் செயல்பட்டு வரும் இந்த திட்டத்தை தெலுங்கானா அரசு நகல் எடுத்திருந்தாலும், தமிழக அரசை விட கூடுதலான பலன்களை வழங்குகிறது. அதாவது, தமிழ்நாட்டில், அரசு நகரப் பேருந்துகளில் மட்டுமே பெண்களுக்கு கட்டணம் இலவசம். தொலைதூர மற்றும் விரைவுப் பேருந்துகளில் இந்த இலவச டிக்கெட் பயணம் கிடையாது. ஆனால், தெலுங்கானாவில் அனைத்து வகை அரசு பேருந்துகளிலும், பெண்களுக்கு இலவச பயணம் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+