பொத்தி பொத்தி காக்கும் "காப்பான்".. பிஆர்எஸ் 'வலையில்' காங். எம்எல்ஏ? மிஸ் ஆகுமோ? அனலில் தெலுங்கானா
ஹைதராபாத்: நாளேயே பதவியேற்பு என்ற ரேஞ்சில், தெலுங்கானா காங்கிரஸ் நம்பிக்கொண்டிருக்கும் நிலையில், காங்கிரஸ் எம்எல்ஏக்களை இழுக்கும் முயற்சியை பிஆர்எஸ் மேற்கொள்வதாக தெரிகிறது. அரசியலே பரபரத்து காணப்படுகிறது.
தெலுங்கானா சட்டப்பேரவை தேர்தலில் 3-வது முறையாக சந்திரசேகர ராவ் ஆட்சியை கைப்பற்றுவாரா ? அல்லது தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளின்படியே காங்கிரஸ் அதிக தொகுதிகளை கைப்பற்றி முதன் முறையாக தெலங்கானாவில் ஆட்சியைப் பிடிக்க போகிறதா? அல்லது, யாருக்குமே மெஜாரிட்டி வராமல் தொங்கு சட்டப்பேரவை அமைந்துவிடுமா? அப்படியானால் பாஜகவின் நிலை என்னதான் ஆகும்? என்ற பல கேள்விகள் இன்றைய தினம் தொத்தி நிற்கின்றன.
வாய்ப்பு அதிகம்: தேர்தலுக்கு முந்தைய கணிப்புகளும் சரி, தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளும்சரி, காங்கிரசுக்கே சாதமாகி உள்ளது.. 90 சதவீதம் காங்கிரஸுக்கே வாய்ப்பு அதிகம் என்று அறுதியிட்டு சொல்லியிருக்கின்றன.. இதனால், வரும் 9-ம் தேதி முதல்வர் பதவி ஏற்பு நிகழ்ச்சி நடத்தப்படும் என்று மாநில காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டி, பகிரங்கமாகவே அறிவித்துவிட்டார்.

அதனால்தான், தெலங்கானாவில் வெற்றி வாய்ப்புள்ள காங்கிரஸ் வேட்பாளர்களை இழுக்க முதல்வர் சந்திரசேகரர் ராவ் நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது. அதோடு அவர் சில காங்கிரஸ் வேட்பாளர்களை தொடர்பு கொண்டுள்ளதாக பரபரப்பான புகார் கிளம்பி உள்ளது.
ரேணுகா சவுத்ரி: சமீபத்தில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ரேணுகா சவுத்ரி தன்னிடம் பிஆர்எஸ் தலைவர்கள் தொடர்ந்து பேசி அந்த கட்சியில் சேர வலியுறுத்துவதாக தெரிவித்து இருந்தார்.
இதனிடையே, டி.கே. சிவகுமாருக்கு தெலங்கானா விவகாரத்தை கவனிக்கும் முழு அதிகாரத்தை, கட்சி தலைமை வழங்கியதாக தெரிகிறது. இந்நிலையில்தான், காங்கிரஸ் வேட்பாளர்களை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சிகளில் சந்திரசேகர ராவ் ஈடுபட்டு வருவதாக கர்நாடக மாநில துணை முதல்வர் டிகே சிவகுமார் பரபரப்பு குற்றம்சாட்டியுள்ளார்..
ஹைதராபாத்: அத்துடன், தெலங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் அனைவரும் ஹைதராபாத்தில் உள்ள தாஜ் கிருஷ்ணா ஸ்டார் ஓட்டலுக்கு இரவுக்குள் வந்து விட வேண்டும் என்று டி.கே.சிவகுமார் உத்தரவிட்டிருந்ததுடன், நேற்றிரவு பெங்களூருவில் இருந்து விமானம் மூலம் அவசர அவசரமாக புறப்பட்டு ஹைதராபாத்துக்கு கிளம்பியும் வந்துவிட்டார்.
காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்களை "காப்பான்" என்று அழைக்கப்படும் டிகே சிவக்குமார், வாக்கு எண்ணிக்கையே இன்று முடிந்தாலும்கூட, காங்கிரஸ் வேட்பாளர்கள் மெஜாரிட்டி பெற்றாலும்கூட, அடுத்த சில தினங்களுக்கு, எம்எல்ஏக்களை பாதுகாப்பார் என்று தெரிகிறது.. இன்னும் சிறிது நாட்கள் வரை பெங்களூரு அல்லது கோவாவிலேயே முகாமிட்டு, ஸ்டார் ஓட்டல்களில் காங்கிரஸ் எம்எல்ஏக்களை தங்க வைக்கவும் முயற்சிகளை மேற்கொள்ள போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பாஜக முயற்சி: காரணம், காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏக்களை பாஜக இழுக்க முயலும்போதெல்லாம் டிகே சிவக்குமார்தான் கர்நாடகா அழைத்து சென்று பாதுகாக்கும் நடவடிக்கையை மேற்கொள்வார்.. அதுபோலவே, இப்போதும் தெலுங்கானாவில் களமிறங்கி உள்ளார் காப்பான்.. எனினும், பிஆர்எஸ் இந்த விஷயத்தை லேசில் விடாது போல தெரிகிறது.. எப்படியும் ஆட்சியை கைப்பற்றிவிட வேண்டும் என்ற முனைப்பில் உள்ளதால், தெலுங்கானா அரசியலே பரபரத்து காணப்படுகிறது.












Click it and Unblock the Notifications