ஆட்டம் ஆரம்பிச்சுடுச்சு.. தெலுங்கானா காங்கிரஸில் வெடித்த மோதல்.. முதல்வருக்கு எதிராக போர்க்கொடி

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: தெலங்கானாவில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்குள் உட்கட்சி மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முதல்வர் ரேவந்த் ரெட்டி மற்றும் துணை முதல்வர் மல்லு பாட்டி விக்ரமார்கா ஆகியோருக்கு எதிராக அக்கட்சியின் மூத்த எம்எல்ஏ கொமட்டிரெட்டி ராஜகோபால் ரெட்டி பகிரங்கமாக போர்க்கொடி தூக்கியுள்ளார். தொகுதி வளர்ச்சிக்கு நிதி ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டப்படுவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

தெலுங்கானாவில் கடந்த 2023 நடந்த தேர்தலில் காங்கிரஸ் வென்று ஆட்சியை அமைத்தது. அக்கட்சியின் ரேவந்த் ரெட்டி முதல்வராக பதவியேற்றார். கடந்த 3 ஆண்டுகளாக கர்நாடகாவை போல இல்லாமல்.. தெலுங்கானாவில் உட்கட்சி மோதல் எதுவும் இல்லாமல் இருந்தது. ஆனால், இப்போது அங்கும் நிலைமை மாறி காங்கிரஸில் மோதல் வெடித்துள்ளது.

Telangana Congress Rift Revanth Reddy Telangana Congress

அதிருப்தி

இதற்கிடையே அக்கட்சியின் மூத்த எம்எல்ஏ கொமட்டிரெட்டி ராஜகோபால் ரெட்டி, முதல்வர் ரேவந்த் ரெட்டிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளார். முனுகோடு தொகுதியில் நடைபெற்ற ஓய்வூதியம் வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய ராஜகோபால் ரெட்டி, முதல்வர் ரேவந்த் ரெட்டியின் அணுகுமுறையை கடுமையாக விமர்சித்தார். தொகுதி வளர்ச்சிக்காக நிதி கேட்கும் எம்எல்ஏக்களுக்கு முதல்வர் முறையாக பதிலளிப்பதில்லை என்று விமர்சித்தார்.

என்ன சிஎம் நீங்க?

அவர் மேலும், "நீங்கள் எல்லாம் என்ன முதல்வர்? என்ன மாதிரியான வார்த்தைகளை பயன்படுத்துகிறீர்கள்? உங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்ததால் முதல்வராகிவிட்டீர்கள். குறைந்தபட்சம் அடுத்த இரண்டு ஆண்டுகளாவது நல்லவராக இருந்து தெலங்கானா மக்களை பார்த்து கொள்ளுங்கள். காங்கிரஸின் மூத்த எம்எல்ஏ ஒருவர் தனது தொகுதி வளர்ச்சிக்கு நிதி கேட்கும்போது, முதல்வர் என்ற பதவியில் இருக்கும் பாசிட்டிவாக பதிலளிக்க வேண்டும். அவரை நசுக்கிவிடுவேன் என்று மிரட்டுவது சரியா?" எனக் கேள்வி எழுப்பினார்.

முதல்வரின் சொந்தத் தொகுதியான கோடங்கல், துணை முதல்வர் பாட்டி விக்ரமார்காவின் மாதிரா தொகுதி ஆகியவற்றுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். அவர் மேலும், "தெலுங்கானா என்பது கோடங்கல், மாதிரா மட்டுமல்ல. கோடங்கலுக்கு ரூ.10,000 கோடி, ஏன் ரூ.20,000 கோடி வேண்டுமானாலும் கொடுங்கள். எங்களுக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால், பின்தங்கிய முனுகோடு போன்ற தொகுதிகளுக்கும் உரிய நிதி கிடைக்க வேண்டும்" என்றார்.

திட்டங்கள்

மேலும் முனுகோட்டில் சாலை, பாசன திட்டங்கள் நிதியின்றி முடங்கியுள்ளதாகவும், சௌட்டுப்பாலில் 100 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை அமைக்கும் திட்டம் தாமதமாவதாகவும் குற்றம்சாட்டினார். ஃபுளோரைடு பாதிப்பு உள்ள பகுதிகளுக்கும் அரசு கவனம் செலுத்த வேண்டும் என்றார். ரேவந்த் ரெட்டியின் மூன்று ஆண்டுக்கால ஆட்சிக்கு பிறகும் தெலுங்கானா மக்கள் மகிழ்ச்சியாக இல்லை என்று நேரடியாகவே விமர்சித்தார்.

அவர் மேலும், "எனக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்காததால்தான் நான் இப்படி முதல்வரை விமர்சிப்பதாக சிலர் சொல்கிறார்கள். நான் பதவிகளுக்காக அரசியலுக்கு வரவில்லை. ஏழைகளுக்காகவே அரசியலில் இருக்கிறேன். நான் மக்களின் பணத்தைப் பாதுகாப்பவன்.. அதைச் சுரண்டுபவன் அல்ல. கமிஷன் கொடுப்பதும் இல்லை, வாங்குவதும் இல்லை" என்று சொன்ன அவர் தற்போதைய ஆட்சியில் கமிஷன் கலாச்சாரம் இருப்பதாக சாடினார்.

கமிஷன்

முந்தைய பிஆர்எஸ் ஆட்சியில் முறைகேடுகளில் ஈடுபட்ட ஒப்பந்ததாரர்கள் தற்போதைய அரசிலும் தொடர்ந்து செயல்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். ஏற்கெனவே காங்கிரஸ் எம்எல்ஏ அனிருத் ரெட்டி, ஒப்பந்ததாரர்களிடம் சில அதிகாரிகள் 10 முதல் 20 சதவீதம் வரை கமிஷன் கேட்பதாக குற்றம்சாட்டியிருந்தார். இந்த சூழலில் தான் மூத்த தலைவரான கொமட்டிரெட்டியும் கடுமையாக சாடியுள்ளார்.

தெலுங்கானாவில் இப்போது விக்ரமார்கா துணை முதல்வராக உள்ள நிலையில், கூடுதலாக ஓபிசி சமூகத்தை சேர்ந்த ஒருவருக்கும் துணை முதல்வர் பதவி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதற்காக ஓபிசி தலைவர்கள் குழு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி ஆகியோரை சந்தித்து கோரிக்கை விடுக்க உள்ளனர். அப்போது அமைச்சரவையை விரிவாக்கம் குறித்த கோரிக்கையையும் முன்வைக்க உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+