தற்கொலைக்கு முயன்ற காதலர்களுக்கு திருமணம்... தெலுங்கானா மருத்துவமனையில் ருசிகரம்

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: தெலுங்கானாவில் தற்கொலைக்கு முயன்ற காதலர்களுக்கு மருத்துவமனையில் திருமணம் நடைபெற்றது.

விகராபாத் பகுதியைச் சேர்ந்தவர்கள் ரெஸ்மா மற்றும் நவாஸ். இருவரும் சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்த விஷயம் இருவீட்டாருக்கும் தெரிய வந்தது.

Telangana couple Reshma and Nawaz got married in a hospital

காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இனி வாழ்க்கையில் ஒன்று சேரமுடியாது என்று நினைத்த காதல் ஜோடி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தது.

பின்னர், காதலர்கள் விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றனர். உயிருக்கு போராடிய அவர்களை மீட்டு மருத்துவமனையில் உறவினர்கள் அனுமதித்தனர்.

இந்தநிலையில், இரு வீட்டாரும் காதலுக்கு பச்சை கொடி காட்டியதை அடுத்து, மருத்துவமனையிலேயே காதல் ஜோடிக்கு திருமணம் நடைபெற்றது. அப்போது, மருத்துவமனையில் இருந்தவர்கள் அனைவரும் மணமக்களை வாழ்த்தினர்.

இதற்கிடையே, திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடிகள், முழுவதுமாக குணமடைந்த பிறகு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்கள் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+