டிவி லைவ் விவாதத்தில் பாஜக வேட்பாளரை தாக்கிய கேசிஆர் கட்சி எம்.எல்.ஏ.. தெலுங்கானாவில் பரபர
ஐதராபாத்: தெலுங்கானாவில் டிவி தொலைகாட்சி லைவ் விவாதத்தின் போது ஏற்பட்ட காரசார வாதத்தில், பாரதிய ராஷ்டிர சமிதி கட்சியின் குத்புல்லாபூர் எம்.எல்.ஏ கேபி விவேகானந்தை பாஜக வேட்பாளர் கழுத்தை பிடித்து நெறித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சட்டசபை தேர்தல் பாஜக வேட்பாளரிடம் கேள்வியை எழுப்ப விவாதத்தில் அனல் பறந்தது. ஒரு கட்டத்தில் கோபத்தின் உச்சிக்கே சென்ற பாரதிய ராஷ்டிரிய சமிதி எம்.எல்.ஏ விவேகானந்த் பாஜக வேட்பாளர் குணா ஸ்ரீசலைத்தை அடிக்க தொடங்கினார். அதோடு அவரது கழுத்தை நெறித்து பிடித்தார். இதனால் விவாதத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

தெலுங்கானாவில் பாரதிய ரஷ்டிர சமிதி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக சந்திர சேகர் ராவ் உள்ளார். தெலுங்கானா மாநிலம் உதயமான பிறகு நடைபெற்ற இரண்டு சட்டமன்ற தேர்தல்களிலும் சந்திர சேகர் ராவின் பாரதிய ராஷ்டிர சமிதி கட்சியே வெற்றி பெற்றுள்ளது. இந்த நிலையில் தான் தெலுங்கானா சட்டமன்றத்தின் பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ளது. இதனால், அங்கு சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
வரும் நவம்பர் 30 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் தெலுங்கானாவில் தேர்தல் களம் அனல் பறக்கிறது. வரும் தேர்தலில் பாரதிய ராஷ்டிர சமிதி கட்சிக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவக்கூடும் என்று பல்வேறு நிறுவனங்களும் நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவித்துள்ளன. இதனால், தேர்தல் களம் அங்கு உச்ச கட்ட பரபரப்பை எட்டியுள்ளது.
தொலைக்காட்சி விவாதம்: ஆட்சியை இழந்து விடக்கூடாது என சந்திரசேகர் ராவ் கட்சியினரும் ஆட்சியை பிடித்து விட வேண்டும் என காங்கிரஸ் கட்சியும் வியூகம் வகுத்து வருகின்றன. பாஜகவும் கணிசமான இடங்களை வெற்றி பெற வேண்டும் முனைப்பு காட்டி வருகிறது. பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் தேசிய தலைவர்களும் அடிக்கடி தெலுங்கினாவிற்கு விசிட் அடித்து தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அதேபோல், ஆளும் பாரதிய ராஷ்டிர சமிதி கட்சி நிர்வாகிகளும் மாநிலம் முழுவதும் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
மறுபக்கம் தொலைக்காட்சி விவாதங்களிலும் கட்சி தலைவர்கள் தங்கள் கட்சிகளுக்கு சாதகமான கருத்துக்களை பேசி வருகின்றன. இந்த நிலையில், டிவி தொலைகாட்சி லைவ் விவாதத்தில் பாரதிய ராஷ்டிர சமிதி கட்சியின் குத்புல்லாபூர் எம்.எல்.ஏ கேபி விவேகானந்தும் அதேதொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் குனா ஸ்ரீசைலம் கவுட்-வும் பங்கேற்றனர். அப்போது இருவரும் காரசாரமாக விவாதித்துக் கொண்டு இருந்தனர்.
கழுத்தை நெறித்தார்: ஒரு கட்டத்தில் பாஜக வேட்பாளர் அடுக்கடுக்கான கேள்விகளை சிட்டிங் எம்.எல்.ஏ கேபி விவேகனந்த்திடம் கேட்டார். பதிலுக்கும் அவரும் பாஜக வேட்பாளரிடம் கேள்வியை எழுப்ப விவாதத்தில் அனல் பறந்தது. ஒரு கட்டத்தில் கோபத்தின் உச்சிக்கே சென்ற பாரதிய ராஷ்டிரிய சமிதி எம்.எல்.ஏ விவேகானந்த் பாஜக வேட்பாளர் குணா ஸ்ரீசலைத்தை அடிக்க தொடங்கினார். அதோடு அவரது கழுத்தை நெறித்து பிடித்தார். இதனால் விவாதத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு இருந்த போலீசாரும் மக்களும் இருவரையும் விலக்கி விட்டனர்.
இந்த செயலுக்கு தெலுங்கானா பாஜக தலைவர் கிஷன் ரெட்டி கண்டனம் தெரிவித்துள்ளார். பாரதிய ராஷ்டிர சமிதி கட்சி எம்.எல்.ஏவின் செயல் அதிர்ச்சி அளிப்பதாகவும் போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் . இல்லையென்றால் நாங்கள் சட்ட நடவடிக்கையை எடுப்போம்" என்றார். இந்த சம்பவம் தொடர்பாக பாரதிய ராஷ்டிர சமிதி கட்சியின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், " விவாதத்தில் கலந்து கொண்ட இருவருமே கண்ணியத்துடனும் நாகரீகத்துடனும் நடந்திருக்க வேண்டும்"என்றார்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications